எமினெம்
| எமினெம் | |
|---|---|
எமினெம்
|
|
| பின்னணித் தகவல்கள் | |
| பிறப்பு | அக்டோபர் 17, 1972 செயிண்ட் ஜோசப், மிசூரி, ஐக்கிய அமெரிக்கா |
| பிறப்பிடம் | டிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா |
| இசை வகை(கள்) | ஹிப் ஹொப் |
| தொழில்(கள்) | ராப்பர், தயாரிப்பாளர், நடிகர் |
| இசைத்துறையில் | 1996 – இன்று வரை |
எமினெம் ( ஆங்கிலத்தில் EMINEM ) என்றழைக்கப்படும் மார்ஷல் ப்ரூஸ் மாதர்ஸ் III அமேரிக்காவின் மிகப்பிரபலமான ராப் இசைக்கலைஞர், பாடல் தயாரிப்பாளர் மற்றும் நடிகர். இவருடைய பாடல்களின் இசைத்தட்டுகள் மொத்தம் எழுபது லட்சம் பிரதிகள் அகில உலகம் முழுவதும் விற்பனையாகியிருக்கின்றன. இதன் காரணமாக 2000த்தின் தொடக்கங்களில் இவர் விற்பனையின் அடிப்படையில் இவர் மிகப்பிரபலமான இசைக்கலைஞராக அறியப்பட்டார். மேலும் ராப் இசைக்கலைஞர் வரிசையில் இவருக்குத்தான் இப்பொழுது முதலிடம். எமினெம் என்பது மார்ஷல் மாதர்ஸின் சுருக்கமான எம் அண்ட் எம் இன் கலப்பே ஆகும்.
8 மைல் எனப்படும் ஹாலிவுட் படம் மூலமாக சினிமாத்துறையிலும் நடிகராக அறிமுகம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தின் இளைப்பாற்றிக் கொள்ளுங்கள் (Lose Yourself) என்னும் பாடலுக்காக ஆஸ்கர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. த எமினெம் ஷோ (The Eminem Show) என்னும் தன்னுடைய ராப் ஆல்பத்திற்காக புகழ்பெற்ற கிராமி விருதையும் பெற்றார்.
தற்சமயம் கிங் மாதர்ஸ் (King Mathers) என்னும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
படைப்புகள்[தொகு]
ஆல்பம்கள்[தொகு]
- 1996: இன்ஃபினிட்
- 1997: த ஸ்லிம் ஷேடி EP
- 1999: த ஸ்லிம் ஷேடி LP
- 2000: த மார்ஷல் மாதர்ஸ் LP
- 2002: த எமினெம் ஷோ
- 2004: ஆன்கோர்
- 2008: ஐந்தாம் ஆல்பம் (இதுபரை பெயர் இல்லை)
நடித்த திரைப்படங்கள்[தொகு]
- ட ஹிப் ஹாப் விச் (2000), அவர்தாமே
- த வாஷ் (2001), கிரிஸ்
- 8 மைல் (2002), ஜிம்மி "பி. ராபிட்" ஸ்மித் ஜூனியர்
- ஹேவ் கன் வில் டிராவல் (2008), பாலடின்