மீன்குளத்தி கோவில்

ஆள்கூறுகள்: 10°38′08″N 76°39′20″E / 10.635542°N 76.655556°E / 10.635542; 76.655556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மீன்குளத்தி கோவில் இந்தியாவின் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மரா வட்டம் பல்லசனா (Pallassana) கிராமத்தில் அமைந்துள்ளது.

தோற்றம்[தொகு]

மீன்குளத்திக்காவு [1] பல்லசேனாவில் உள்ள மிகப் பழமையான கோவிலாகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வீரசைவ மன்னாடியார் குலத்தைச் சேர்ந்த மூன்று குடும்பங்கள் மீனாட்சி அம்மனைத் தங்கள் தெய்வமாக வழிபட்டனர். [1] [2] சிதம்பரத்தில் ( தமிழ்நாடு ) நிலவிய கடுமையான வறட்சி அவர்களை பசுமையான மேய்ச்சல் நிலங்களை நோக்கித் துரத்தியது. அவர்களில் ஒருவர் தங்களுடைய மற்ற உடைமைகளுடன் ஒரு கல்லை அங்கிருந்து எடுத்துக்கொண்டு போனார். அவர்கள் கல்லை தங்கள் நண்பனாகவும், தத்துவஞானியாகவும், வழிகாட்டியாகவும் வணங்கி பல்லசேனாவை அடையும் முன் பல இடங்களுக்கு நடைபயணம் மேற்கொண்டனர்.[1][2]

கிராமங்களைச் சுற்றியுள்ள காடுகளால் கவரப்பட்ட அவர்கள், அங்கு குடியேறி வைர வணிகத்தில் செழித்து வளர்ந்தனர். அவர்கள் வணிகத்திற்குச் செல்லும் போதெல்லாம், அவர்கள் தங்கள் வழக்கமான பிரார்த்தனைகளை குல தெய்வத்திற்கு செலுத்தினர். அவர்களது குலத்தைச் சேர்ந்த வயதான ஒருவர், வீட்டிற்குச் செல்வதற்கு முன், வழக்கம்போல குளிக்கச் சென்றார். அவர் தனது மதிப்புமிக்க பொருட்களையும் பனை ஓலைக் குடையையும் இரண்டு இளைஞர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது இளைஞர்கள் பொறுப்பில் விட்டுச்சென்ற பொருட்களை திரும்ப எடுக்க முடியாதது கண்டு திகைத்தார். குடையின் கீழ் மீனாட்சி வெளிப்பட்டதாகவும் இதன் காரணமாகவே இப்பொருட்களை அசைக்க முடியவில்லை என்று ஒரு சோதிடர் கூறினார். இந்த அதிசயத்தை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். [2] அந்த இடம் குடமன்னு எனப் பெயர் பெற்றது.[தெளிவுபடுத்துக]

தற்போதைய மீனாட்சி கோவிலும் அதை ஒட்டிய கோயில் குளமும் அடுத்து வந்த நான்கு நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு சாட்சியாக ஒரு திருமந்திரம் எழுதப்பட்டது. மண்ணடியார் குலம் 110 மனைகளாக (வீடுகளாக) வளர்ந்துள்ளது.[தெளிவுபடுத்துக] . அவர்கள் நவராத்திரி, பொங்கல் மற்றும் பைரவ விழாக்களை நடத்துகின்றனர்.

கட்டிடங்கள்[தொகு]

கோவில் கட்டிடங்கள் கேரள பாணியில் கட்டப்பட்டுள்ளது. சுவரின் நிழல் தரையில் படாத வண்ணம் கட்டப்பட்டுள்ளது. [1] கோவிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உள்ளன, ஒன்று வடக்கிலும் மற்றொன்று மேற்கிலும் உள்ளன. கோவில் குளம் மேற்கு நுழைவாயிலுக்கு அருகில் உள்ளது.[2]

கொடிமரம் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. கொடிமரத்திற்கான கவசம் தாமிர தகடுகளால் செய்யப்பட்டது. கருவறையில் மீனாட்சி அம்மனின் பெரிய அளவிலான சிலை அமைந்துள்ளது. பக்தர்கள் கருவறையைச் சுற்றி வர அனுமதி இல்லை. மூலவர் சிலையைச் சுற்றி, எட்டு துர்க்கைகள் [2](எட்டு பெண் தெய்வங்கள் - பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவை, இந்திராணி, சாமுண்டி மற்றும் வாராஹி) நிறுவப்பட்டுள்ளன. கணபதி, வீரபத்திரர், துர்க்கை, சிவன், பைரவர், பிரம்ம ராட்சசர்கள் மற்றும் ஐயப்பன் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன . அருகில் உள்ள வாமல மலையில் முருகன், கணபதி, சிவன், சாஸ்தா சன்னதிகள் உள்ளன.[2]

நிகழ்வுகள்[தொகு]

நவராத்திரி, கார்த்திகை, மண்டல விளக்கு, மாசி திருவிழா, பள்ளிவேட்டை மற்றும் பைரவ பூஜை ஆகிய விழாக்கள் இக்கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. [1] [2] எட்டு நாள் மாசி திருவிழாவில் இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் காட்சிகளை சித்தரிக்கும் ஓட்டம் துள்ளல் மற்றும் கதகளி நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விலையுயர்ந்த பொருட்களையும் பனை ஓலைக் குடையையும் காவல் காத்து நின்ற அந்த இளைஞர்களின் சந்ததியினர், தெய்வத்தின் வாளையும் தீபத்தையும் ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம்.[1][2]

கோவிலின் பணிகளில் மண்ணடியர் குலத்தினருக்கு சிறப்பு இடம் அளிக்கப்பட்டாலும், கோவில் திருவிழாக்களை நடத்துவதில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கின்றனர். கோவிலின் தனித்துவமான அமைப்பும், அதன் வழிபாட்டு முறையும், கிராமத்தின் பூர்வீக மக்களிடையே நன்மதிப்புப் பெற்றுள்ளது. இந்தக் குளத்தில் குளிப்பதால் (அதிக அளவிலான மீன்களுக்கு பெயர் பெற்றது) அனைத்து நாள்பட்ட நோய்களிலிருந்தும் விடுபடுவதாக பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Hindu temples in Kerala

"https://ta.wikipedia.org/w/index.php?title=மீன்குளத்தி_கோவில்&oldid=3591164" இலிருந்து மீள்விக்கப்பட்டது