சப்தகன்னியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து சமயத்தில் சப்தகன்னியர் எனப்படுவோர் பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி ஆவர். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் சிவசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்றும் சப்த மாதாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
காளிதாசனின் குமார சம்பவம் என்ற காவியத்தில் சப்த கன்னியர் சிவபெருமானின் பணிப்பெண்டிர் என்ற குறிப்புக் காணப்படுகின்றது[1].