போஜவர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போஜவர்மன்
புந்தேல்கண்ட்டின் மன்னன்
ஆட்சிக்காலம்சுமார் பொ.ச. 1285-1288
முன்னையவர்வீரவர்மன் (சந்தேல வம்சம்)
பின்னையவர்ஹம்மிரவர்மன்
அரசமரபுசந்தேலர்கள்
போஜவர்மன் is located in மத்தியப் பிரதேசம்
ஈசாவர்மா
ஈசாவர்மா
போஜவர்மனின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் ( மத்தியப் பிரதேசம்)

போஜவர்மன் (Bhojavarman) (ஆட்சி பொ.ச. 1285-1288 ) 12-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியாவின் மத்தியப் பகுதியை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவார். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளராக இருந்தார்.

வரலாறு[தொகு]

வீரவர்மனுக்குப் பிறகு போஜவர்மன் பதவியேற்றார். இவருடைய கடைசி கல்வெட்டு விக்ரம் நாட்காட்டி1342 (1285-86 பொ.ச.) தேதியிட்டது. [1] 2003 ஆம் ஆண்டு நிலவரப்படி, போஜவர்மனின் ஆட்சியில் இருந்து ஆறு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: ஐந்து அஜய்கரில் (தேதியிடப்படாதது; 1343, 1344, 1345, 1346 விக்ரம் நாட்காட்டி); மற்றொன்று ஈசவர்மாவில் (1344 வி.நா) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [2]

கல்வெட்டுகள்[தொகு]

கிடைக்கப்பெற்றுள்ள கல்வெட்டுகள் போஜவர்மனின் ஆட்சிக்காலம் பற்றிய அதிக தகவல்களைத் தரவில்லை. [2] அவை அவருக்கு சேவை செய்த குடும்பங்களால் வழங்கப்பட்ட சதி பதிவுகள் அல்லது கல்வெட்டுகள் மட்டுமே. அஜய்கர் கல்வெட்டுகளில் ஒன்று காயஸ்தரான அரச பொருளாளரும் மன்னரின் ஆலோசகர்களில் ஒருவருமான சுபதா என்பவரால் வெளியிடப்பட்டது . கல்வெட்டு சுபதாவை புகழ்கிறது. மேலும் அவர் கோயில் கட்டியதையும் குறிக்கிறது. [3] [1] இந்தக் கோயில் அநேகமாக இப்போது சிதிலமடைந்துள்ள சிவன் கோயிலாக இருக்கலாம். அதில் "சுபத-தேவன்" என்று ஒரு சிறிய கல்வெட்டு உள்ளது.

மற்றொரு விக்ரம் நாட்கடி 1344 அஜய்கர் கல்வெட்டு சுபதா கேதார்நாத் - பார்வதி, விருஷபா, கிருட்டிணன், அம்பிகா, தாரா, திரிபுரசுந்தரி, காமாக்யா, துர்க்கை, ஹரசித்தி, இந்திராணி, சாமுண்டா, காளிகா, ஈசுவரன்-பார்வதி ஆகியோரின் உருவங்களை நிறுவியதாக குறிப்பிடுகிறது. மற்றொரு அஜய்கர் கல்வெட்டு சுபதாவின் மனைவி தேவலா தேவி சிவன் , சுரபி போன்ற தெய்வங்களின் உருவங்களை நிறுவியதாக குறிப்பிடுகிறது. அஜய்கர் கோட்டையின் மேல் வாயிலுக்குக் கீழே பொறிக்கப்பட்டுள்ள ஒரு செப்புத் தகட்டில் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களைக் குறிப்பிடுகிறது. [4] மற்றொரு கல்வெட்டு, வீரவர்மனின் முன்னோடியான திரைலோக்கியவர்மனுக்குப் பணியாற்றிய காயஸ்த இராணுவ அதிகாரியான ஆனந்தின் சாதனைகளை விவரிக்கிறது. [1]

கல்வெட்டுகள் மற்றும் இவரது வாரிசுகளைப் பற்றிய தகவல்களின் அடிப்படையில், போஜவர்மன் அஜய்கர், கலிஞ்சர், கஜுராஹோ உள்ளிட்ட முக்கியமான சந்தேல நகரங்களின் கட்டுப்பாட்டை வைத்திருந்ததாகத் தெரிகிறது. இவருக்குப் பிறகு ஹம்மிரவர்மன் ஒரு குறுகிய ஆட்சியை செய்ததாகத் தெரிகிறது .[5] ஹம்மிரவர்மனின் 1308 சர்க்காரி செப்புத் தகடு கல்வெட்டில் கொடுக்கப்பட்டுள்ள முன்னோடிகளின் பட்டியலில் போஜவர்மனின் பெயர் விடுபட்டுள்ளது. போஜவர்மனின் முன்னோடிகளான பரமார்த்தி தேவன், திரைலோக்யவர்மன் , வீரவர்மன் ஆகியோரைக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. போஜவர்மன் ஹம்மிரவர்மனின் மூதாதையர் அல்ல என்பதையும் இது குறிக்கிறது. [6] போஜனும் ஹம்மிரனும் சகோதரர்கள் என்று ராய் பகதூர் ஹிராலால் கருதினார். ஆனால் இந்த அனுமானம் வேறு எந்த ஆதாரங்களாலும் உறுதிப்படுத்தப்படவில்லை. [7] எலிக்கி ஜன்னாஸின் கூற்றுப்படி, இரண்டு மன்னர்களும் அநேகமாக உறவினர்களாக இருக்கலாம், ஹம்மிரவர்மன் வீரவர்மனின் மகனாக இருக்கலாம். [8]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Mitra 1977, ப. 138.
  2. 2.0 2.1 Misra 2003, ப. 11.
  3. Dikshit 1976, ப. 173.
  4. Dikshit 1976, ப. 174.
  5. Lal 1965, ப. 32.
  6. Dikshit 1976, ப. 177.
  7. Mitra 1977, ப. 139.
  8. Zannas 1960, ப. 45.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போஜவர்மன்&oldid=3392296" இலிருந்து மீள்விக்கப்பட்டது