கேதார்நாத் கோயில்
| கேதார்நாத் கோயில் | |
|---|---|
| அமைவிடம் | |
| அமைவு: | கேதார்நாத் |
| கோயில் தகவல்கள் | |
| மூலவர்: | (சிவன்) |
கேதார்நாத் கோயில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இது உத்தர்காண்ட்டில் உள்ள கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் கர்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் இறுதி முதல் நவம்பர் மாதத் தொடக்கம் வரையே திறந்திருக்கும். இக்கோயிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுந்த் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தூரம் மலை ஏறியே இக் கோயிலுக்குச் செல்ல முடியும். ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும்.
கோயிலின் முக்கியத்துவம் [தொகு]
இக் கோயில் ஒரு கவர்ச்சியான கல் கட்டடம் ஆகும். இதன் தொடக்கம் பற்றி அறியக்கூடவில்லை. இக் கோயில் முகப்பில் உள்ள முக்கோண வடிவக் கல்லில் மனிதத் தலை ஒன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு வழமைக்கு மாறான அம்சம் ஆகும்.