தாரா (இந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாரா
தாரா
அதிபதிதாய்மை, காமஞ்செறுத்தல் என்பவற்றின்
சமசுகிருதம்Tārā
தமிழ் எழுத்து முறைதாரா
வகைமகாவித்யா, பார்வதி
மந்திரம்ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் தாராயை ஹூம் பட் ஸ்வாஹா (தசமகாவித்யா மந்திரம்)
ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா
ஆயுதம்கட்கம், கத்தி
துணைசிவன் (தாரகேசுவரன் வடிவில்)

தாரா (Tara) என்பது பத்து மகாவித்யா தேவதைகளில் அம்மக்களின் கூறப்படும் தெய்வம் ஆவாள். தாரை என்பது வடமொழியில் விண்மீனைக் குறிக்கும்.

தோற்றம்[தொகு]

தாரா, புத்த சமயத்திலிருந்து சாக்த சமயத்துக்கு வந்த தெய்வம் என்று நம்பப்படுகின்றது.[1] சாக்த மரபில், பாற்கடல் கடைந்தபோது, ஆலகால நஞ்சை உண்ட சிவன், அதன் வீரியம் தாங்காமல் மயங்கியதாகவும், அப்போது, தாரையின் உருவெடுத்து ஈசனைத் தன் மடியில் தாங்கிய உமையவள், அவருக்குத் தன் ஞானப்பாலை ஊட்டி, அவரை சுயநினைவுக்குக் கொணர்ந்ததாகவும் ஒரு கதை சொல்கின்றது.[2]

உருவவியல்[தொகு]

தாராவின் உருவவியல், காளியை ஒத்தது. இருவருமே, சிவன் மீது நின்ற நிலையிலேயே காட்சி தருவர். எனினும் தாரா, காளி போல கருப்பாக அன்றி, நீலமாகக் காட்சி தருவள். தாராவின் இடையில், புலித்தோலாடையும் கழுத்தில் மண்டையோட்டு மாலையும் காணப்படும். குருதி வடியும் செவ்விதழும் தொங்கிய நாக்கும் தாராவுக்கும் காளிக்குமிடையிலான இன்னோர் ஒற்றுமை. இருவரும் ஒன்றுபோலவே இருந்தாலும், தாந்திரீக நூல்கள், இருவரையும் வேறுபடுத்திக் காட்டுவதுடன், தாரா தாய்மை நிறைந்தவள் என்றும் கூறுகின்றன. எனினும், வங்காளப் பகுதியில் காளியே அதிகளவில் வழிபடப்படுகின்றாள்.

காளியிலிருந்து தாராவை வேறுபடுத்துவது, அவள் கரங்களில் தாங்கியிருக்கும் தாமரையும் கத்தரிக்கோலும் ஆகும். தாராவின் கரங்களில், கத்தி, கபாலம், தாமரை, கத்தரிக்கோல் என்பன காணப்படும். உலக இச்சைகளிலிருந்து தன் அடியவனை வெட்டி விடுவிப்பதை, கத்தரிக்கோல் குறிக்கின்றது[3]

வழிபாடு[தொகு]

வங்கத்திலுள்ள தாராபீடம் எனும் ஆலயம், தாரா வழிபடப்படும் புகழ்வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும். பௌத்த தாராவோ, இந்தியா தாண்டி, தென்கிழக்காசியா, திபெத் எனப் பல இடங்களிலும் போற்றப்படுகின்றாள்.[4]

மேலும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]


வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாரை
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_(இந்து)&oldid=3849828" இலிருந்து மீள்விக்கப்பட்டது