பைத்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பைத்தான்
Python logo and wordmark.svg
நிரலாக்க கருத்தோட்டம்: Multi-paradigm programming language: பொருள் நோக்கு நிரலாக்கம்: Imperative programming, Functional programming
தோன்றிய ஆண்டு: 1991
உருவாக்குநர்: குய்டொ வான் ரூஸ்ஸொம்
வளர்த்தெடுப்பு: பைத்தான் சாப்ட்வேர் பவுண்டேசன்
மிக அண்மைய வெளியீடு: 2.7.4 / 3.2.3 /
11 ஏப்ரல் 2012 (2012-04-11), 841 நாட்களுக்கு முன்னதாக
2.7.3 /
11 ஏப்ரல் 2012 (2012-04-11), 841 நாட்களுக்கு முன்னதாக
இயல்பு முறை: strong, dynamic, duck
Dialects: Stackless Python, RPython
பிறமொழித்தாக்கங்கள்: ஏபிசி, அல்கோல் 68,[1] சி, Haskell, Icon, லிஸ்ப், மொடியூலா-3, பேர்ள், ஜாவா
இம்மொழியினால் ஏற்பட்ட தாக்கங்கள்: Boo, Groovy, றூபி, Cobra
இயக்குதளம்: பல் இயங்குதளம்
அனுமதி: பைத்தான் சாப்ட்வேர் பவுண்டேசன் அனுமதி
இணையத்தளம்: http://www.python.org/
குய்டொ வான் ரூஸ்ஸொம்,பைத்தான் மொழியை உருவாக்கியவர்

பைத்தான் (Python Programming Language) என்பது ஒரு திறந்த மூல நிரலாக்க மொழியாகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர் ஆவார். இம்மொழி பொது நோக்க இலக்குகளுக்காக, அதிகம் பயன்படுத்தப்படும் உயர் மட்ட நிரலாக்க மொழியாகும்.[2][3] [4]

கூகிள் மற்றும் நாசா போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களில் இது பயன்படுத்தப்படுகின்றது. பைதானில் செய்நிரல்கள் எழுதுவதும், பிறர் எழுதிய செய்நிரல்களை படித்து புரிந்து கொள்வதும் மிக எளிதாகும். இதன் முதல் பதிப்பு 1991 வெளி வந்தது. இந்த மென்பொருளை தற்பொழுது பைத்தோன் மென்பொருள் நிறுவம் பராமரித்து வருகிறது. இமொழியின் அதிகாரப்பூர்வமான பதிப்பு சிபைத்தோன் என்பதாகும்.

பைத்தான் இலவசமாகக் கிடைக்கக் கூடிய நிரல் மொழியாகும். வணிக நோக்கிலான மென்பொருள் உருவாக்கத்திலு இலவசமாய்ப் பயன்படுத்தப்படுகிறது. பைத்தான் மென்பொருள் நிறுவனம் இம்மொழியின் உரிமத்தை நிர்வகித்து வருகிறது. விண்டோசு, லினக்சு, யுனிக்சு, மேக் ஓஎஸ் போன்ற பல்வேறு இயக்கச் சூழல்களிலும் பைத்தான் இயங்கும். சி, சி++, சி#, ஜாவா, பி.எச்.பி, பேர்ள் போன்ற அனைத்து நிரல் மொழிகளுடனும் ஒத்திசையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டது.

பயன்பாட்டுத் துறைகள்[தொகு]

- இணைய மென்பொருள் (Web Application)[5], [6] - மின்னஞ்சல் அலகிடல் (Email Parsing)[7] - வலையமைப்பு நிரலான் (Network Program)[8] - மேசைத்தளம் மென்பொருள் (Desktop Application)[9],[10],[11], [12] - இணைய நெறிமுறை (Internet Protocol) [13] - கணினி நிருவாகம் (System administration) - விளையாட்டுகள்

பயனபடுத்தும் நிறுவனங்கள்[தொகு]

எடுத்துக்காட்டு[தொகு]

வருக வையகமே நிரல்

#!/usr/bin/python
print u"வருக வையகமே!"

வெளியீடு(Output)

வருக வையகமே!

வேறுபடுபவை(Variable)

#! /usr/bin/python
a = 1
b = 2
print a + b

வெளியீடு(Output)

3

இணை ஒப்படைப்பு(parallel assignment)

#! /usr/bin/python
#comment விளக்கம் கூறு
a, b = 1, 2
language = "python"
print a, b, language

வெளியீடு(Output)

1 2 python

கூற்று(Expression)

#! /usr/bin/python
print 1 + 2, 2 - 3, 2 * 3, 5 / 2, 5.0 / 2

வெளியீடு(Output)

3 -1 6 2 2.5

கூற்று

#! /usr/bin/python
print 2 > 3, 1 < 3
print 2 > 3 and 1 < 3
print 1 < 2 < 3
print 1 + 2 * 3 + 5
print 1 or 2
print 1 and 2

வெளியீடு(Output)

False True
False
True
12
1
2

சரம்(String)

#! /usr/bin/python
language = "தமிழ்"
lang = 'தமிழ்'
l = """தமிழ்"""
kural = """
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
"""
print language, lang, l
print kural

வெளியீடு(Output)

தமிழ் தமிழ் தமிழ்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


கட்டியம்(Condition)

#! /usr/bin/python
a = 23
if a > 0:
	print "a %d is positive number" % (a)
else:
	print "a %d is negative number " % (a)
a = 0
if a >= 0:
	print "a(%d) is positive number" % (a)
elif a < 0:
	print "a(%d) is negative number" % (a)
elif a == 0:
	print "a(%d) is zero" %(a)

வெளியீடு(Output)

a 23 is positive number
a(0) is positive number


தரவுக் கட்டமைப்புகள் (Data structures)[தொகு]

தொடர் (List)

#! /usr/bin/python
l = [] #தொடர் உருவாக்குதல்
l.append("தமிழ்")
l.append(1) #புதிய சேர்க்கை
print l, l.count()
l.remove(1) #1யை நீக்குதல்
print l

வெளியீடு(Output)

[தமிழ், 1], 2
[தமிழ்]

டியுப்பல் (Tuple)

t = (1, 2, 3, 1)
print t.count(1) 
print t.index(2)

வெளியீடு(Output)

2
1

அகராதி(Dictionary)

d = {'name': 'Tamil Magan', 'age': 23, 'place': 'coimbatore'}
print d
print d['name']
print d['age']
print d.keys()
print d.values()
print d.items()

வெளியீடு(Output)

{'age': 23, 'place': 'coimbatore', 'name': 'Tamil Magan'}
Tamil Magan
23
['age', 'place', 'name']
[23, 'coimbatore', 'Tamil Magan']
[('age', 23), ('place', 'coimbatore'), ('name', 'Tamil Magan')]

தொகுப்பு (set)

s = set([1, 2, 3, 1, 2, 3])
print s
s.add(23)
print s
s.pop()
print s
s.remove(23)
print s
print len(s)

வெளியீடு(Output)

set([1, 2, 3])
set([1, 2, 3, 23])
set([2, 3, 23])
set([2, 3])
2


முழுச்சுற்றுகள் (Loops)[தொகு]

தொடர்

for no in [1, 2, 3, 4, 5]: #தொடர்
  print no

வெளியீடு(Output)

1
2
3
4
5

டியுப்பல்

for no in (1, 2, 3, 4, 5): #டியுப்பல்
  print no

வெளியீடு(Output)

1
2
3
4
5

அகராதி

d = {'age': 23, 'name': 'Tamil Magan', 'place': 'coimbatore'}
for key in d: #அகராதி
  print key, d[key]

வெளியீடு(Output)

age 23
place coimbatore
name Tamil Magan

ஒயில் (while)

no = 1
while no < 10:
  if no % 2 == 0:
    print no, "இரட்டை" 
  elif no % 2 == 1:
    print no, "ஒற்றை"
  no += 1

வெளியீடு(Output)

1 ஒற்றை
2 இரட்டை
3 ஒற்றை
4 இரட்டை
5 ஒற்றை
6 இரட்டை
7 ஒற்றை
8 இரட்டை
9 ஒற்றை

கொடுக்கப்பட்ட எண்ணை பெருக்கல் அட்டவணை அச்சிடும் நிரல் (பார் லூப் எடுத்துக்காட்டு)

val=5
for i in range(5):
 i=i+1
 print i," X ",int(val)," = ",int(i)*int(val),"\n"

வெளியீடு(Output)

1 X 5 = 5 
 
2 X 5 = 10 
 
3 X 5 = 15 
 
4 X 5 = 20 
 
5 X 5 = 25

செயலாற்றி (Function)[தொகு]

def square(no):
  return no * no
 
def cube(no):
  return square(no) * no
 
print square(2)
print square(2) + square(3)
print cube(3)
print cube(square(2))
print square(no=10)

வெளியீடு(Output)

4
13
27
64
100

இயல்பிருப்பு(Deafult)

def square(no=2):
  return no * no
 
def cube(no=2):
  return square(no) * no
 
print square()
print square(4)

வெளியீடு(Output)

4
16

மாற்றுப்பெயர் (Alias)

def square(no=2):
  return no * no
 
def cube(no=2):
  return square(no) * no
 
def caller(func_name, arg):
  return func_name(arg)
 
s = square
c = cube
print s(2)
print c(3)
print caller(s, 10)
print caller(c, 5)
print caller(square, 7)
4
27
100
125
49

மேற்கோள்கள்[தொகு]

 1. "Interview with Guido van Rossum" (July 1998). பார்த்த நாள் 29, 2007.
 2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; AutoNT-34 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 3. Programming Language Trends - O'Reilly Radar. Radar.oreilly.com (2006-08-02). Retrieved on 2013-07-17.
 4. The RedMonk Programming Language Rankings: January 2013 – tecosystems. Redmonk.com (2013-02-28). Retrieved on 2013-07-17.
 5. https://www.djangoproject.com/
 6. http://flask.pocoo.org
 7. http://docs.python.org/2/library/email
 8. http://docs.python.org/2/howto/sockets.html
 9. http://www.wxpython.org/
 10. http://sourceforge.net/projects/pywin32/
 11. http://qt-project.org/wiki/PySide
 12. http://www.riverbankcomputing.co.uk/software/pyqt/intro
 13. http://docs.python.org/2/library/internet
 14. http://highscalability.com/blog/2012/3/26/7-years-of-youtube-scalability-lessons-in-30-minutes.html

புற இணைய இணைப்புகள்[தொகு]

 1. தமிழில் பைத்தான் நிரல்மொழிப் பற்றிய அறிமுக நிகழ்படம்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பைத்தான்&oldid=1623200" இருந்து மீள்விக்கப்பட்டது