நகைச்சுவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிரிப்பும் மகிழ்ச்சியும் கூடிய உணர்வை தூண்டும் கலைவடிவங்களை நகைச்சுவை (comedy; கிரேக்கம்: κωμῳδία, kōmōidía -பொருள்: கிராமிய கேளிக்கை) எனலாம். நகைச்சுவை மன இறுக்கம் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மீண்டு ஆரோக்கியமான உடல் மன நிலையைப் பேண உதவும். நவரசங்களில் ஒன்றான நகைச்சுவை, ஒருவராலோ அல்லது குழுவினராலோ மேற்கொள்ளப்படும் சொல், செயல், காட்சி, நினைவூட்டல் மூலம் நகைச்சுவை உணர்வைத் தூண்டி மகிழ்ச்சியைப் பெருக்குகிறது. நகைச்சுவை ஆற்றலை குழந்தைகள் பெற்றொரிடமிருந்து பிறந்த 16 மாதங்களிலேயே கற்றுக் கொள்கின்றனர்.[1]

தமிழர் நகைச்சுவை சிறப்பு[தொகு]

"இடுக்கண் வருங்கால் நகுக" (குறள் 621), எனும் குறள் துன்பங்களைக் களையும் மருந்தாக நகைச்சுவை உணர்வு மேலோங்கியிருத்தலை உணர்த்தும். மற்றெம் மொழிகட்கு மில்லாத சொல்லாடல் நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பாகும்.

தமிழ் இலக்கியத்தில் நகைச்சுவை[தொகு]

வஞ்சப்புகழ்ச்சி[தொகு]

போற்றுவார் போல் தூற்றல் வஞ்சப் புகழ்ச்சியாகும். தமிழரின் சொல்லாடல் சான்றாக,

ஒளவையார் தொண்டைமானின் ஆயுதக்கிடங்கிற்கு போய்,

"அதியமானிடம் எல்லாம் முனை மழுங்கிய கத்தி தான் இருக்கிறது நீ எத்தனை பளபளப்பாய் வைத்திருக்கிறாய்” எனக் கூறி,

அதியமான் அடிக்கடி போரில் ஈடுபடுபவன், தொண்டைமான் போருக்குப் போவதில்லை என்ற உண்மையை வஞ்சப் புகழ்ச்சியில் உணர்த்தினார்.

புரட்சிக் கவிஞரின் இருண்ட வீடு[தொகு]

சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்களை, எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட கவிதை நூல் இருண்ட வீடு,

சான்றாக,

"பிட்டுக் காரி தட்டினாள் கதவையே
திட்டென்று கதவைத் திறந்தான் பெரியவன்
பிட்டையும் வடையையும் தட்டில் வாங்கினான்
பெட்டி மீதில் இட்டுட் கார்ந்தான்
ஆவலாய் அவற்றை அருந்தத் தொடங்கினான்
நாவில் இடுகையில், நடுவயிறு வலித்தது
வெளிக்குப் போக வேண்டுமென் றுணர்ந்தான்
வடையின் சுவையோ விடேன்விடேன் என்றது
கொல்லை நோக்கிச் செல்லவும் துடித்தான்.
மெல்லும் வடையை விழுங்கவும் துடித்தான்
வில்லம்பு போல மிக விரை வாக
நடுவிற் கிடந்த நாயை மிதித்துப்
படபட வென்று பானையைத் தள்ளிக்
கன்றின் கயிற்றால் கால்தடுக் குற்று
நின்ற பசுவின் நெற்றியில் மோதி
இரண்டு பற்கள் எங்கேயோ போட்டுப்
புரண்டெழுந் தோடிப் போனான் கொல்லைக்கு!" [2]- பாவேந்தர் பாரதிதாசன்

கவிதையில் நகைச்சுவை[தொகு]

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, ஒரு சமயம் சிரங்குகள் தொல்லையால் வேதனையுற்றார். பல மருந்துகள் போட்டும் சிரங்குகள் ஆறாமல் இருந்தன. அந்த வேதனையைத் தாங்க முடியாமல் அவதிப்படும் சமயத்தில், சில நகைச்சுவைப் பாடல்களைப் பாடினார். அப்படி அவர் பாடிய நகைச்சுவைப் பாடல்களில் ஒன்று:

முத்துப் பவழம் முழுவயிரம் மாணிக்கம்
பத்தியொளி வீச பதக்கமெல்லாம் - சித்தன்
சிரங்கப்ப ராயன் சிறியேன் எனக்குத்
தரங்கண்டு தந்த தனம்.

சொற்பொழிவுகளில் நகைச்சுவை[தொகு]

சொற்பொழிவுகளில் சில சொற்பொழிவாளர்கள் நகைச்சுவையான செய்திகளைச் சொல்வதுண்டு. நகைச்சுவை சொற்பொழிவாளர்களில் திருமுருக கிருபானந்த வாரியார் முக்கியமானவர் ஆவார்.[3] அவருடைய சொற்பொழிவுகள் ஆன்மீகச் சொற்பொழிவுகளாக இருப்பினும் அவற்றையும் நகைச்சுவையாகச் சொல்லும் திறன் அவரிடம் அதிகமாக இருந்தது.

சிலேடைச் சொற்களில் நகைச்சுவை[தொகு]

சிலேடைச் சொற்களில் நகைச்சுவையாகப் பேசுவது ஒரு தனித்திறன் ஆகும். சொற்பொழிவாளர் கி. வா. ஜகன்னாதன் சிலேடையாகப் பேசுவதில் மிகவும் வல்லவர் ஆவார். இவருடைய சிலேடைப் பேச்சுக்களில் அதிகமாக நகைச்சுவை கலந்திருக்கும்.

நகைச்சுவை வடிவங்களும் உத்திகளும்[தொகு]

துணுக்குகள்[தொகு]

துணுக்குகள் தமிழ் இதழ்களில் பிரபலமானவை. பொதுவாக இரண்டு பேருக்கிடையே இடம் பெறும் சிறு உரையாடலாக, நையாண்டித்தனமான ஓவியத்துடன் இருக்கும்.


தந்தை: "இதுவரை எத்தனை இலையான் அடித்தாய்"?
மகள்:  "மூன்று அப்பா. இரண்டு ஆண் & ஒரு பெண்."
தந்தை: (திகைப்புடன்) "ஆண், பெண் என்று எப்படிக் கண்டு பிடித்தாய்";?
மகள்:  "பியர் போத்தலின் மேல் இரண்டு இருந்தன. ரெலிபோன் மேல் ஒன்று இருந்தது"!

கடி[தொகு]

எ.கா.

அமைச்சர்: இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ? அரசர்: இல்லை அமைச்சரே! அரியாசனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்பட்ட புண் … அதனால் 'விழுப்புண்' என்றேன். (நன்றி ஆனந்த விகடன், 7-3-82).

வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..... "ஹலோ வணக்கம்!" "வணக்கம்! சொல்லுங்க..." "வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது?" "அதில்லைங்க" "எது இல்லை?" "சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?" "போன்ல இருந்துதான் பேசறேன்" "சரி என்ன பாட்டு வேணும்?" "சினிமா பாட்டுதான்" "சரி எந்த படத்துல இருந்து?" "சினிமா படத்துல இருந்துதான்" "அய்யோ!" என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் அன்றோடு அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.[4]

நையாண்டி/பரிகாசம்[தொகு]

வன்மையாக நகையுணர்வைத் தூண்டல்,

எ.கா.

இப்புத்தகத்தை படிக்காதவர்கள் பாராட்டுகிறார்கள்!
இப்புத்தகம் அபாரம் போங்க!

"எப்பவும் 200 மில்லி போட்ட மாதிரி ஆடிக்கொண்டே இருந்த என் வீட்டு மேஜையின் காலின் கீழ் புத்தகத்தை
வைத்தேன் சொன்னால் நம்பமாட்டீர்கள் மேஜை ஆடுவது நின்று விட்டது முப்பது வருடமாக ஆ(ட்)டிக் கொண்டிருந்த
பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டது. இன்னும் இது மாதிரி பல உபயோகமான புத்தகங்களை எழுதுங்கள்."
-- ராமன், தெனாலி
புத்தி ஜீவிதம் - ஜோர்ஜ் இ. குர்ஷ்சோவ்

இவர்கள் ஏன் தோண்டுகின்றார்கள் என்பது பற்றி இவர்களைத் தவிர வேறு யாருக்கும் அக்ககறை இருக்காது.
அது பற்றிய கவலை கிஞ்சித்தேனும் இல்லாமல்...ஓலச்சுவடிகளையும் நாட்டார் பாடல்களையும் தோண்டும் போது
புராதன நெருஞ்சி முள் அகப்படும்.  ('சங்க காலத்தில் செருப்பு'), இன்னும் தோண்ட துருப்பிடித்த இரும்பு வளையம்
கிட்டும்.  ('புறநானூற்றில் பரத்தையர் அணிகலங்கள்'), தோண்டிக் கொண்டே போக...தோண்டிய தோண்டலில் பூமியின்
மறுபக்கத்தில் தென்கிழக்காசியாவில் வெளியே வந்தும் 'சாவகத்தில் தொந்தமிழன் விழுமியங்கள்'.

[5]

கிராமியக்கலையில் நகைச்சுவை[தொகு]

ஏனைய நகைச்சுவை வடிவங்கள்[தொகு]

  • மிகைப்படுத்துதல்
  • விகடம் - போலிக் குரல் (அ) நடித்தல்
  • பரோடி - நையாண்டிப் போலி
  • கோமாளித்தனம்
  • கேலிக்கூத்து
  • கடி, யோக்ஸ் சொல்லல்
  • இரட்டை அர்த்தம்
  • கேலிச்சித்திரம்
  • அறுவை
  • சீசன்
  • அனுபவ நகைச்சுவை

ஊடகங்களில் நகைச்சுவை[தொகு]

நகைச்சுவைத் தமிழ் அலைவரிசைகள்[தொகு]

  • காமெடித்திரை
  • சிரிப்பொலி

நகைச்சுவைத் தமிழ் இதழ்கள்[தொகு]

நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

  • மீண்டும் மீண்டும் சிரிப்பு
  • கலக்கப் போவது யாரு
  • அசத்தப் போவது யாரு
  • லொள்ளு சபா
  • சொல்லுங்கண்ணே சொல்லுங்க
  • டாடி எனக்கு ஒரு டவுட்டு
  • குட்டிச் சுட்டீஸ்

நகைச்சுவை தொலைக்காட்சி தொடர்கள்[தொகு]

  • மெளலியின் பிளைட்-172
  • மேல் மாடி காலி, டாப் டக்கர் - கோவை அனுராதா
  • ரமணி vs ரமணி
  • சின்ன பாப்பா பெரிய பாப்பா

நகைச்சுவைத் தமிழ் எழுத்தாளர்கள்[தொகு]

நகைச்சுவை நாடக ஆசிரியர்கள்[தொகு]

நகைச்சுவைப் பேச்சாளர்கள்[தொகு]

திரைப்படத்தில் நகைச்சுவை[தொகு]

தமிழ் திரைப்படங்கள் தொடக்க காலத்திலிருந்தே ஒரு சுயமான, வளமான நகைச்சுவை பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குகின்றன. தமிழ்த் திரைத்துரையில் நகைச்சுவை தமிழ் மரபுகளை பெரும்பாலும் பிரதிபலித்திருக்கிறது.[6]

உலக நகைச்சுவை நடிகர்கள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. நகைச்சுவை ஆற்றல்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "புரட்சிக் கவிஞரின் இருண்ட வீடு". பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. இன்பமிங்கே - வாரியார் சொற்பொழிவு
  4. சுக்ரவதனி[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "புத்தி ஜீவிதம் - ஜோர்ஜ் இ. குர்ஷ்சோவ்" (PDF). Archived from the original (PDF) on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2006-11-05.
  6. திரைப்படங்களில் நகைச்சுவை

மேலும்[தொகு]

  1. Ferro-Luzzi, Gabriella Eichinger. (1986). Language, thought, and Tamil verbal humor. Current Anthropology, vol. 27, pp. 265–72, June 1986
  2. sketch/scene [1] பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நகைச்சுவை&oldid=3559857" இலிருந்து மீள்விக்கப்பட்டது