எஸ். வி. சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் அல்லது எஸ். வி. சேகர், தமிழ்நாட்டைச் சேர்ந்த மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார்.2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அ.தி.மு.க-வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இவருடைய நாடகங்கள் அவற்றின் வசன நகைச்சுவைக்காக அறியப்பட்டாலும், அவற்றில் தொனிக்கும் நெருடலான இரட்டை அர்த்தங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. 1974-இல் தொடங்கிய இவரது கலைப்பயணம், வெற்றிப்பயணமாகத் தொடர்ந்து கொணடிருக்கிறது.

எஸ். வி. சேகர், படிப்பால் மெக்கானிகல் இஞ்சினியரிங் டிப்ளமா ஹோல்டர், ஏர் கண்டிஷனிங் & ரெஃப்ரிஜிரேஷனில் போஸ்ட் டிப்ளமா ஹோல்டர். தொழிலால் அவர் ஒரு ஒலிப்பதிவாளர், நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஸ்டில் ஃபோட்டோகிரஃபர், வீடியோகிரஃபர், எடிட்டர், டைரக்டர்.

"நாரதர்" தமிழ் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்திருக்கிறார். வானொலி நிகழ்ச்சிகள் தயாரிப்பு, நாடகங்களுக்காக சிறப்பு ஒலிகள் (SOUND EFFECTS) தயாரிப்பு, நாடக சம்பத்தப்பட்ட விஷயங்களில் கைதேர்ந்தவர். Radio & TV Advertising Practitioners Association of India விடமிருந்து Best All India Programme Producer Award –ஐ தொடர்ந்து நான்கு ஆண்டுகள் பெற்றிருக்கிறார். இலங்கை வானொலிக்காக 275 க்கும் மேற்பட்ட ஒலிச்சித்திரங்களை தயாரித்திருக்கிறார்.

முதன் முதலாக முழுதும் வெளிநாட்டில் வெளிநாடுகளில் (அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர், கொரியா, இந்தோனேசியா) எடுக்கப்பட்ட "அமெரிக்காவில் அருக்கானி" தொலைக்காட்சி தொடரை இயக்கி தயாரித்தவர்.

1974 –இல் நாடகப்ரியா என்ற பெயரில் ஒரு நாடகக் குழூவைத் தொடங்கினார். இவர் இதுவரை 24 நாடகங்களை தயாரித்து, 5400 முறைக்கும் மேலாக மேடையேற்றியுள்ளார். இவர் அறிமுகப்படுத்தியவர்கள்- கிரேசி மோகன், கோபு-பாபு, கிருஷ்ணகுமார், நிலா. இவர் கதாநாயகனாகவும், முக்கிய பாத்திரங்களிலும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தமிழ்நாடு Central Board of Film Censors –இன் பிராந்திய தலைவராக பணியாற்றியிருக்கிறார். அதேபோல் தன்னுடைய "பெரியதம்பி" நாடகத்தை அமெரிக்காவின் நியூ ஜெர்சி யிலும், வாஷிங்டனிலும், குவைத்திலும் நடத்தினார்.

வெளிநாட்டு வாழ்தமிழ்மக்களின் அழைப்புக்கிணங்க அமெரிக்கா, கனடா, துபாய், அபுதாபி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, பாங்காக், ஆகிய நாடுகளில் தன் குழுவுடன் தன் நாடகங்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.

அமெரிக்காவில் 32 நாட்களில் தன் நாடகக்குழுவினருடன் 28 முழுநீள நாடகக்காட்சிகளை நடத்தியது இவருடைய பல சாதனைகளில் ஒன்று.

இவரைப் பாராட்டிவந்த பெருமைகள் தமிழக அரசின் கலைவாணர் பதக்கம் (1991), கலைமாமணி பட்டம் (1993), மைலாப்பூர் அகடமியின் சிறந்த காமெடியன் விருது – தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு, விஸ்டம் பத்திரிகையின் சிறந்த காமெடியன் விருது (1990), இப்படிப் பல.

சபாக்களாலும் நிறுவனங்களாலும் இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்களில் சில: நாடக சூப்பர் ஸ்டார், காமெடி கிங், சிரிப்பலை சிற்பி, நாடக வசூல் சக்ரவர்த்தி, நகைச்சுவை தென்றல், நகைச்சுவை இளவரசன், நகைச்சுவை நாயகன், சிரிப்புச்செல்வன், நகைச்சுவை வேதநாயகன், வாணி கலாசுதாகர நாடக கலாசாரதி, நாடகரத்னா.

1996-இலிருந்து இவரைப் பற்றிய விவரங்களும், இவருடைய நாடகங்களும் www.shekher.com என்ற இணையத்தளத்தில் வந்துகொண்டிருக்கின்றன.

15 ஆண்டுகளாக சின்னத்திரை நடிகர்கள் சங்க தலைவராக இருந்து வருகிறார்.


பிராமணர்கள் ஒற்றுமைக்காக Federation of Brahmin Associations Southern region (FEBAS) என்ற அமைப்பை துவக்கியுள்ளார்.

[தொகு] நாடகங்கள்

  • வால்பையன்
  • பெரியப்பா
  • காட்டுல மழை
  • காதுல பூ
  • அதிர்ஷ்டக்காரன்
  • அல்வா
  • ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிகாமணி
  • சின்னமாப்ளே பெரியமாப்ளே
  • "அன்னம்மா பொன்னம்மா"
  • "கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்"
  • "ஒரு சொந்த வீடு வாடகை வீடாகிற‌து"
  • "யாமிருக்க பயமேன்"
  • "பெரிய தம்பி"
  • "இது ஆம்பளைங்க சமாசாரம்"
  • "மனைவிகள் ஜாக்கிரதை"
  • "சிரிப்பு உங்கள் சாய்ஸ்"
  • "குழந்தை சாமி"
  • "வண்ணக் கோலங்கள்"
  • "யெப்பொவும் நீ ராஜா"
  • "சாதல் இல்லயேல் காதல்"
  • "மகாபாரதத்தில் மங்காத்தா"
  • "அமெரிக்காவில் அருக்காணி"
  • "எல்லாரும் வாங்க"
  • "எல்லாமே தமாஷ் தான்"
  • "நம் குடும்பம்"
  • "காட்டுல மழை"
  • "காதுல பூ"

[தொகு] திரைப்படங்கள்

  • பூவே பூச்சூடவா
  • சகாதேவன் மகாதேவன்
  • மணல் கயிறு
  • கதாநாயகன்
  • ஜீன்ஸ்
  • "வறுமையின் நிற‌ம் சிகப்பு"
  • "சிதம்பர ரகசியம்"
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்
மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்