கி. வா. ஜகந்நாதன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கி. வா. ஜகன்னாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்[1]. இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்[2]. 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது[3]. கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.
இவரது நூல்கள் சில [தொகு]
- இலங்கைக் காட்சிகள்
- ஆலைக்கரும்பு
- கவி பாடலாம்
- அதிகமான் நெடுமான் அஞ்சி
- கி. வா. ஜ பதில்கள் 3 பாகங்கள்
- அபிராமி அந்தாதி மூலமும் தெளிவுரையும்
- அபிராமி அந்தாதி விளக்கவுரை 4 பாகங்கள்
- வழிகாட்டி
- திருமுறை மலர்கள் 3 பாகங்கள்
- கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் 6 பாகங்கள்
- பெரிய புராண விளக்கம் 10 பாகங்கள்
- எல்லாம் தமிழ்
- நாயன்மார் கதைகள் 4 பாகங்கள்
- முந்நீர் விழா
- தமிழ் நூல் அறிமுகம்
- நல்ல சேனாதிபதி
- கரிகால் வளவன்
- கற்பக மலர்
- காவியமும் ஓவியமும்
- குமரியின் மூக்குத்தி
- பயப்படாதீர்கள்
- அன்பு மாலை
- திரு அம்மானை
- பவள மல்லிகை
- சுதந்திரமா?
- சிலம்பு பிறந்த கதை
- சகல கலா வல்லி
- புகழ் மாலை
- பேசாத பேச்சு
- திருவெம்பாவை
- விளையும் பயிர்
- அழியா அழகு
- நாடோடி இலக்கியம்
- அப்பர் தேவார அமுது
- பல்வகைப் பாடல்கள்
- கதை சொல்கிறார் கி. வா. ஜ
- ஏற்றப்பாடல்களும் தொழிற்பாடல்களும்
- புது மெருகு
- வாழும் தமிழ்
- கலைஞன் தியாகம்
- கண்டறியாதன கண்டேன்
- ஞான மாலை
- வாழ்க்கைச் சுழல்
- கி. வா. ஜ பேசுகிறார்
- மனிதப் பறவை
- சித்திர மேகலை
- கலைச்செல்வி
- தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்
- அறுந்த தந்தி
- வாருங்கள் பார்க்கலாம்
- கிராமியப் பாடல்கள்
- கோவூர்கிழார்
- அனுபூதி விளக்கம்
- கந்தவேள் கதையமுதம்
- மச்சு வீடு
- சங்க நூற் காட்சிகள்
- அற்புதத் திருவந்தாதி
- வளைச் செட்டி
- வீரர் உலகம்
- புது டயரி
- நவக்கிரகங்கள்
- தமிழ்ப் பழமொழிகள் பாகம் 1
- தமிழ்ப் பழமொழிகள் பாகம் 2
- தமிழ்ப் பழமொழிகள் பாகம் 3
- தமிழ்ப் பழமொழிகள் பாகம் 4
- கிழவியின் தந்திரம்
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "The days of great Editors are over". இந்தியன் எக்ஸ்பிரஸ்.
- ↑ "The patriarch of Tamil". தி ஹிந்து.
- ↑ Tamil Sahitya Akademi Awards 1955-2007 Sahitya Akademi Official website.
