பேச்சு:கோயில் (வழிபாட்டிடம்)

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோயில் (வழிபாட்டிடம்) எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

தமிழர் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட கோயில்கள் குறித்து இன்னும் விரிவாக எழுதப்பட வேண்டும். எது எது கோயிலாகும், கட்டிடக்கலைக் கூறுகள் என்ன, சமய விதிகள் என்ன, கோயிலில் உள்ள நடைமுறைகள் என்ன என்பதைக் குறித்து எழுதலாம்--ரவி 06:57, 22 ஜூன் 2006 (UTC)

ஆலமரத்தடியில் இடம்பெற்ற ஓர் உரையாடல் தேவை கருதி இங்கு பதியப்படுகிறது.--Kanags \உரையாடுக 05:06, 17 நவம்பர் 2013 (UTC)[பதிலளி]

எது மிகச் சரியானது?[தொகு]

கோவில், கோயில் - இவ்விரண்டில் எது மிகச் சரியானது? சில இதழ்கள் “கோவில்” என்றும், சில இதழ்கள் “கோயில்” என்றும் பயன்படுத்துகின்றன. விக்கிப்பீடியாவில் அதிகமாக “கோயில்” என்ற சொல்லே என்பது பயன்படுத்தப்படுகிறது. விவரம் அறிந்தவர்கள் விளக்கமளிக்க வேண்டுகிறேன். --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:34, 31 சூலை 2011 (UTC)[பதிலளி]

  • இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் இரண்டில் கோயில் என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கவிச்சக்ரவர்த்தி கம்பர், தனது கம்பராமாயணத்தில் இரண்டு சொற்களையுமேப் பயன்படுத்தியுள்ளார்.

எடுத்துக் காட்டாக;-
  1. மிடைந்திட, முனியொடும் வேந்தன் கோயில் புக்கு, (கோயில்- அதிகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது)
  2. அறம் கொள் நாள் மலர்க் கோயில்கள் இதழ்க் கதவு அடைப்பப்
  3. அம் பொன் கோயில் பொன் மதில் சுற்றும் அகழ் கண்டார்.
  1. கோவில்; நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான். (மிகக் குறைவாகக் கையாளப்பட்டுள்ளது.)


அதிக மக்கள், கோயில் என்றே பயன்படுத்துகின்றனர். ஆலயம் என்ற மற்றொரு சொல்லையும் நாம் பயன்படுத்துகிறோம். நான் கற்றவரை, ஆலயம் என்ற சொல்லைக் கம்பர் கையாளவில்லை. எனது நோக்கில், இங்கு கோயில் என்று பயன்படுத்துவதே சரி.01:35, 1 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..


கோவில்-சரியான இலக்கணப் பயன்பாடு; கோயில்-ஏற்கத்தக்க பிழை[தொகு]

கோவிலா, கோயிலா என்னும் கேள்வியைப் பலர் கேட்பது வழக்கம். அதற்கான இலக்கண அடிப்படையிலான பதிலைத் தேடிப் பார்த்தேன். கூகிள் தேடுதலும் நடத்தினேன். அப்போது 2010ஆம் ஆண்டு, திசம்பர் 12ஆம் நாள் வெளியான தினமணிக் கதிரில் அப்பதிலைக் கண்டு மகிழ்ந்தேன். அது நிறைவான விளக்கமாக உள்ளது. சுருங்கக் கூறின், "கோவில்" என்பது சரியான இலக்கணப் பயன்பாடு; ஆனால் "கோயில்" என்னும் சொல்லும் நெடுங்காலம் இலக்கியத்திலும் மக்கள் பயன்பாட்டிலும் வந்துவிட்டதால் அது "ஏற்கத்தக்க பிழை" எனலாம்.

சென்னைப் பேரகர முதலி (Tamil Lexicon, Madras) தரும் தகவல்படி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் "கோவில்", "கோயில்" என்னும் இரு பயன்பாடுகளும் உள்ளன.

ஆயினும், ஊர்ப்பெயர்களில் மக்கள் வழக்கத்தில் "கோவில்" என்று வரும்போது அதை மாற்றாமல் அப்படியே பயன்படுத்துவதே முறை. எடுத்துக்காட்டுகள்: நாகர்கோவில் (நாகர்கோயில் அல்ல); கோவில்பட்டி (கோயில்பட்டி அல்ல).

மொழிப்பயிற்சி - 18: பிழையின்றித் தமிழ் பேசுவோம் - எழுதுவோம் என்னும் தலைப்பிட்ட தினமணிக் கதிர் பதிகை இதோ: கோவிலா? கோயிலா?
இதோ மேற்கோள்:
கோவிலா? கோயிலா? தமிழில் உடம்படுமெய் என்று ஓர் இலக்கணச் செய்தி உளது. நிலைமொழியின் இறுதியிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்து வருமாயின் அவ்விரண்டு உயிர்களையும் இணைத்திட (உடம்படுத்த)ப் பயன்படும் மெய்யெழுத்துகள் ய், வ் என்றிரண்டு. கோ (க்+ஓ) இல் (இ). கோ என்பதில் ஓ எனும் உயிரும், இல்லில் இ எனும் உயிரும் இணையுமிடத்தில் வ் எனும் மெய்யெழுத்து தோன்றும். ஆதலின் கோ+வ்+இல் = கோவில் என்பதே சரியானது. கோயில் என்னும்போது கோ+ய்+இல் = கோயில் என்று ய் உடம்படுமெய்யாக வந்துள்ளது. ஆனால் நன்னூல் இலக்கணம் என்ன சொல்லுகிறது என்றால், இ, ஈ, ஐ வழி யவ்வும் ஏனை உயிர் வழி வவ்வும் ஏ முன் இவ்விருமையும் உடம்படு மெய் என்றாகும். கோவில் ஓகாரம் இருப்பதால் வ் உடன்படு மெய்தான் வர வேண்டும். ஆயினும் மக்கள் வழக்கத்தில் கோயிலும் இடம் பெற்றுவிட்டது. இது ஏற்கத்தக்க பிழையே. --பவுல்-Paul 04:02, 1 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]

கற்றேன்,விரிவான தங்கள் விளக்கத்திற்கு நன்றி. இது பற்றி எழுதத் துவங்கும் போதே, தங்களை நினைத்தேன். விக்கி விடுமுறையில் நீங்கள் இருப்பதாக நினைத்தேன். வணக்கம்.00:49, 2 ஆகத்து 2011 (UTC)உழவன்+உரை..
  • ஆம், தகவலுழவனே, சில மாதங்களாக விக்சனரியில் என் பங்களிப்பு குறைவுதான். மாறாக, விக்கியில் தொடர்ந்து எழுதுகிறேன். "கோவில்" பற்றிய விளக்கத்தை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியரிடமிருந்து கற்றதாக நினைவு! வாழ்த்துகள்!--பவுல்-Paul 03:49, 2 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
பொதுவாக இரண்டும் சரி என்றே நினத்திருந்தேன். சரியான வழியில் விளக்கமளித்தமைக்கு நன்றி, பவுல் அவர்களே! --சிவகோசரன் 11:38, 2 ஆகத்து 2011 (UTC)[பதிலளி]
இந்தக் கேள்விக்கு விரிவான விளக்கத்தினை நண்பர் பவுல் போல கவிஞர் மகுடேசுவரன் கூறியுள்ளார். \\கோவில், கோயில் - எது சரியென்று பலர்க்கும் விளங்கவில்லை.

கோ என்றால் இறைவன், தலைவன். இல் என்றால் இல்லம், இருக்குமிடம். கோ+இல் = கோயில் என்பதுதான் சரி என்கின்றனர். மேலோட்டமான பார்வைக்கு இது சரியென்றே தோன்றும். ஆனால் இலக்கண விதி எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ்விருமையும் - என்பது நூற்பா.

முதற்சொல்லின் முடிவு இ, ஈ, ஐ ஆகிய உயிரெழுத்தில் முடிந்து, அடுத்து வருகின்ற சொல் (வருமொழி) உயிரெழுத்தில் தொடங்கினால் ய் என்னும் யகர மெய் இடையில் தோன்றும்.

படி எடுத்தாள். இதில் முதற்சொல் படி. டி என்பது இ என்ற உயிரெழுத்தில் முடியும் சொல் (ட்+இ). அதனைத் தொடர்ந்து வருமொழி எடுத்தாள் என்பது உயிரெழுத்தில் தொடங்குகிறது.

படி+எடுத்தாள் எவ்வாறு சேரும் ? படி+ய்+எடுத்தாள் = படியெடுத்தாள் என்று சேரும். படிவெடுத்தாள் என்று வராது.

ஈ+ஓட்டுகிறான் = ஈயோட்டுகிறான். இதில் முதலெழுத்து ஈ. வருமொழி ஓ என்னும் உயிரெழுத்து. அதனல் ய் மிகுந்து ஈ+ய்+ஓட்டுகிறான் = ஈயோட்டுகிறான் ஆயிற்று. ஈவோட்டுகிறான் என்று ஆகாது.

கடை+அடைப்பு = கடையடைப்பு. முதற்சொல் கடை, ஐயில் முடிவதால் வருமொழி உயிரெழுத்தோடு சேர்கையில் ய் தோன்றி கடையடைப்பு என்றானது. கடைவடைப்பு ஆகாது.

இ, ஈ, ஐ வழி யவ்வும் - என்பது மேற்சொன்னவற்றால் முழுமையாக விளங்கிற்றா ?

ஏனை உயிர்வழி வவ்வும்” என்றால் மீதமுள்ள, ஏனைய எல்லா உயிரெழுத்துகளோடும் முடியும் சொல் என்றால் அடுத்து வரும் உயிரெழுத்தோடு சேர வவ்வும். வகர மெய் தோன்றும்.

அ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் பல + உயிர்கள் = பல+வ்+உயிர்கள் பலவுயிர்கள்

ஆ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் விழா + எதற்கு = விழா+வ்+எதற்கு = விழாவெதற்கு ?

உ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் அது+உம் = அது+வ்+உம் = அதுவும்

ஊ, எ, ஒ, ஔ ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குறைவு.

ஓ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் ஓ என்றழுதான் = ஓ+வ்+என்றழுதான் = ஓவென்றழுதான். சிகாகோ + இல் = சிகாகோ + வ் + இல் = சிகாகோவில் கோ+இல் = கோ+வ்=இல் = கோவில். இளங்கோ + ஐ = இளங்கோவை

ஏனை உயிர்வழி வவ்வும் என்பது மேற்கண்ட எடுத்துக்காட்டுகளால் விளங்கியிருக்கும்.

ஏ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் ய், வ் ஆகிய இரண்டும் தோன்றும் (ஏமுன் இவ்விருமையும்).

ஏ என்ற உயிரில் முதற்சொல் முடிந்தால் இருந்தே அழைத்தான் = இருந்தேயழைத்தான் அதற்கே எனினும் = அதற்கேவெனினும்.

இப்போது கோவில் என்பதே சரியென்பது விளங்கியிருக்கும். பேச்சு வழக்கில் கோயலு, கோய்லு என்றெல்லாம் வழங்குவதைக் காண்கிறோம். உயிரெழுத்துக்குப் பேச்சுத் திரிபு நன்றாக நடக்கும். அதை எடுத்து எழுதும்போதுதான் கோயில் என்ற பயன்பாடு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறேன். செய்யுள்களில் எங்கேனும் கோயில் என்று எழுதப்பட்டிருப்பினும் அது வழுவமைதியாகக் கொள்ளப்பட வேண்டியது. அதனால் கோவில் என்பதே சரி.

- கவிஞர் மகுடேசுவரன்\\ இவ்வாறு ஏற்கத்தக்கதாக இருக்கும் பிழையையும் தமிழ் விக்கியில் ஒரு தானியங்கிக் கொண்டு சரி செய்ய இயலுமா என்று ஆலோசிக்க வேண்டும். நன்றி. -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:29, 13 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

பல்லாயிரக்கணக்கில் கோவில்கள் தொடர்பான கட்டுரைகள் பதிவேற இருப்பதால், இந்தக் கேள்விக்கு ஒரு முடிவு எடுக்க வேண்டுகிறேன். அனைத்துக் கட்டுரைகளிலும் கோவில் என்றே பயன்படுத்தலாமா? அதே வேளை, அரசு தந்துள்ள தரவுகளில் கோவில்கள் பலவற்றின் அலுவல்முறைப் பெயர்கள் கோயில் என்றே உள்ளது. எனவே, தலைப்பில் மட்டும் கோயில் என்றும் பயன்படுத்தலாமா இல்லை தலைப்பு உட்பட அனைத்து இடங்களிலும் கோவில் என்றே மாற்றலாமா? நன்றி. --இரவி (பேச்சு) 15:36, 18 பெப்ரவரி 2017 (UTC)

அரசு தந்துள்ள தரவுகளில் மட்டுமன்றி மேலும் பல கோவில்களின் அலுவல் முறைப்பெயர்கள் கோயில் என இருப்பதற்கான வாய்ப்புள்ளது. இரண்டுமே பெருவழக்காக உள்ளவை. எனவே, தலைப்பில் மட்டும் கோயில் என்றும் பயன்படுத்தலாம் என்பது எனது கருத்து. --சிவகோசரன் (பேச்சு) 16:18, 18 பெப்ரவரி 2017 (UTC)
தலைப்பில் கோயில் எனவும், மற்ற அனைத்து இடங்களிலும் கோவில் என்பதனையும் பயன்படுத்தலாம் என்பதை ஆமோதிக்கிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 16:33, 18 பெப்ரவரி 2017 (UTC)
தலைப்பு உட்பட அனைத்து இடங்களிலும் கோவில் என்பதே சரி.--நந்தகுமார் (பேச்சு) 17:09, 18 பெப்ரவரி 2017 (UTC)
ஆம், இரண்டிலும் கோவில் என இருப்பதே நல்லது. அலுவல் முறைப் பெயர் கோயிலாக இருந்தால் அதனை வழிமாற்றாக வைத்திருக்கலாம். மேலும், அலுவல் முறைப் பெயர்களில் உள்ள ஸ்ரீ, அருள்மிகு போன்ற சொற்களைத் தலைப்பில் தவிர்க்க வேண்டும்.--Kanags \உரையாடுக 22:33, 18 பெப்ரவரி 2017 (UTC)
சங்க இலக்கியச்சொல்லடைவில் கோயில் என்ற சொல் 10 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொருநர் ஆற்றுப்படை (90), நெடுநெல்வாடை (100), பட்டினப்பாலை (50), பரிபாடல் திரட்டு (8-4), கலித்தொகை (94-39), புறநானூறு (67-10, 127-6, 241-3, 378-5) ஆகிய இடங்களில் பயன்பாட்டில் உள்ளதென்று முனைவர் பெ. மாதையன் குறிப்பிடுகின்றார். (மாதையன், பெ. முனைவர், 2007, சங்க இலக்கியச்சொல்லடைவு, தமிழ்ப்பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்)--Thamizhpparithi Maari (பேச்சு) 06:54, 19 பெப்ரவரி 2017 (UTC)
சங்க இலக்கியப் பொருட்களஞ்சியத்தில் கோயில் என்பதை அரண்மனை எனவும், கோயிலாள் என்பதை பட்டத்தரசி எனவும் முனைவர் இரா. சாரங்கபாணி விளக்கியுள்ளார் (சாரங்கபாணி, இரா, முனைவர், 2008, சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தமிழ்ப்பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்)--Thamizhpparithi Maari (பேச்சு) 06:59, 19 பெப்ரவரி 2017 (UTC)
வாழ்வியல் களஞ்சியம் தொகுதி எட்டில் கோயில், கோயில் கட்டடக்கலை, இந்தியக் கோயில் கட்டடக்கலையின் பிரிவுகள், ஆகியச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (வாழ்வியல் களஞ்சியம்தொ, குதி எட்டு, பாலுசாமி, நா, டாக்டர், பேரா, 1991,தமிழ்ப்பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்)--Thamizhpparithi Maari (பேச்சு) 10:19, 19 பெப்ரவரி 2017 (UTC)
அருங்கலைச்சொல் அகரமுதலியில் கோயில் தொடர்புடையதாக கோயில், கோயிற்கலை, கோயில் நகரம், கோயில் அறங்காவலர் (பக்கம் 1088) ஆகியச்சொற்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. (அருங்கலைச்சொல் அகரமுதலி (Dictionary of Technical Terms), 2002, அருளி, ப,தமிழ்ப்பல்கலைக்கழகம்: தஞ்சாவூர்)--Thamizhpparithi Maari (பேச்சு) 10:36, 19 பெப்ரவரி 2017 (UTC)
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆட்சிச்சொல்லகராதியில் கோயில், திருக்கோயில், திருக்கோயில் திருப்பணி, திருக்கோயில் அறங்காவலர் ஆகியச்சொற்கள் காணப்படுகின்றன. (ஆட்சிச்சொல்லகராதி பொது, 2015, தமிழ் வளர்ச்சி இயக்ககம்:சென்னை)--Thamizhpparithi Maari (பேச்சு) 10:41, 19 பெப்ரவரி 2017 (UTC)

நிகண்டுகளில் கோயில் என்ற சொல் பதிவு உள்ளது. திவாகரம் பிங்கலம் சூடாமணி அகராதி அட்டவணையில் ப.151ல் கோயில் என்ற சொல் பதிவு காண்க.--Arivanarun (பேச்சு) 07:25, 19 பெப்ரவரி 2017 (UTC)

//செய்யுள்களில் எங்கேனும் கோயில் என்று எழுதப்பட்டிருப்பினும் அது வழுவமைதியாகக் கொள்ளப்பட வேண்டியது. அதனால் கோவில் என்பதே சரி.// என மேலே கவிஞர் மகுடேசுவரனின் பதிவில் உள்ளது.--Kanags \உரையாடுக 10:34, 19 பெப்ரவரி 2017 (UTC)
தமிழக அரசு கோயில் என்ற சொல்லையே இந்து அறநிலையத்துறையின் வரும் 38800 கோயில்களுக்கும் பயன்படுத்தியுள்ளது. சங்க இலக்கியத்தில் கோவில் என்ற சொல்லின் பயன்பாடு இல்லை. அனைத்து வகை அகரமுதலிகளிலும் கோயில் என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது. எனவே கோயில் என்றே பயன்படுத்தலாம்.--Thamizhpparithi Maari (பேச்சு) 10:45, 19 பெப்ரவரி 2017 (UTC)

மகுடேசுவரன் தந்த இலக்கண விளக்கம் அடிப்படையில் கோவில் என்றே பயன்படுத்தலாம் என்றே நேற்று வரை எண்ணியிருந்தேன். ஆனால், இன்று தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் பல்வேறு அகரமுதலிகள், இலக்கியம், கல்வெட்டு, செப்பேடுகள் குறித்த நூல்களின் குறிப்புகளைப் பார்த்த போது, எங்கும் கோயில் என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளதோடு முதன்மைப்படுத்தப்பட்டுள்ளும் உள்ளது. கூகுள் தேடலிலும் கோயில், கோவில் ஆகிய இரு சொற்களும் ஏறத்தாழ சம அளவில் பயன்படுகின்றன. எனவே, நிச்சயம் இலக்கணப் படி பிழையோ என்ற ஒரு காரணத்தின் அடிப்படையில் மட்டும் பரவலான பேச்சுப் புழக்கத்திலும் இலக்கியத்திலும் பயன்படும் கோயில் என்னும் சொல்லை ஒதுக்க வேண்டாம் என்று கருதுகிறேன். எனவே, தலைப்பு உட்பட அனைத்து இடங்களிலும் கோயில் என்ற சொல்லையே பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன். --இரவி (பேச்சு) 10:55, 19 பெப்ரவரி 2017 (UTC)

மதராசுப் பல்கலைக்கழகப் பேரகராதியில் "கோயில்" 238 முறைகளும், "கோவில்" என்பது 7 முறைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவ்வகராதியில் "கோவில்" என்பதற்குக் "கோயில்" என்பதைப் பார்க்கவும் என்றே உள்ளது. எனவே "கோயில்" என்பது பெரும்பான்மை வழக்கில் இருப்பது மட்டுமன்றி முதன்மை வழக்காகவும் இருப்பதால் "கோயில்" என்பதை நீக்கக்கூடாது என்பதே என்னுடைய கருத்து. --- மயூரநாதன் (பேச்சு) 13:38, 19 பெப்ரவரி 2017 (UTC)
@Kanags, Nan, Shanmugamp7, and Sivakosaran: அண்மைய கருத்துகளை அடுத்து உங்கள் நிலைப்பாட்டை அறிய விரும்புகிறேன். --இரவி (பேச்சு) 17:24, 19 பெப்ரவரி 2017 (UTC)
அகராதிகள், இலக்கியம், செப்பேடுகள் என பல இடங்களிலும் கோயில் என்பதே பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளதால் கோயில் என்பதையே அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கிறேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 17:34, 19 பெப்ரவரி 2017 (UTC)
கோயில் என்றே இருக்கலாம்.--Kanags \உரையாடுக 20:35, 19 பெப்ரவரி 2017 (UTC)
கோயில் என்றே இருக்கலாம்.--நந்தகுமார் (பேச்சு) 23:55, 19 பெப்ரவரி 2017 (UTC)
கோயில் என்றே இருக்கலாம். கோவில் என்ற சொல்லையும், கட்டுரையில், ஏதாவது ஒரு இடத்தில் தகவற்சட்டத்திலாவது அமைக்கக் கோருகிறேன். ஒரு சொல், பயன்படுத்தப்பட வில்லையெனில் அழிவதற்கான வாய்ப்பைத் தவிர்ப்போமே. கோவில் என்ற சொல்லின் இலக்கண அமைவுகளைப் பேண இதுவும் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன்.--உழவன் (உரை) 01:13, 20 பெப்ரவரி 2017 (UTC)
இலக்கணப்படி கோவில் எனபது சரியான சொல்லாக இருக்கும் நிலையில் "அனைத்து" இடங்களிலும் கோயில் என்றே பயன்படுத்தலாம் என்ற நிலைப்பாட்டைப் பொருத்தமாகக்கொள்ளவில்லை. எனது மேலுள்ள கருத்து, மயூரநாதனின் கருத்து மற்றும் தகவலுழவனின் கருத்துகளை ஆமோதிக்கின்றேன். --சிவகோசரன் (பேச்சு) 07:19, 20 பெப்ரவரி 2017 (UTC)
@Kanags, Nan, Shanmugamp7, Sivakosaran, and Info-farmer: நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. இணக்கத் தீர்வாகப் பின்வரும் நடைமுறையைப் பரிந்துரைக்கிறேன்:
  • கோயில், கோவில் என்ற சொற்களை எங்கும் முற்றிலும் ஒதுக்கத் தேவையில்லை.
  • அதே வேளை, பதிவேறும் தானியக்கக் கட்டுரைகளில் சீர்மை கருதி கோயில் என்ற சொல்லை முதன்மைப்படுத்தலாம்.
  • தேடுபொறிகளில் சிக்குதல், கோவில் என்ற சொல்லும் இணையத்தில் சரியளவு பயன்படுதல், இலக்கண அடிப்படையில் சரியாக இருத்தல் முதலிய காரணங்களால் தகவல் பெட்டியின் தலைப்பில் மட்டும் கோவில் என்ற பெயரை இடம்பெறச் செய்தல். எடுத்துக்காட்டுக்கு இந்த மாற்றத்தைக் காணுங்கள்.
  • சீர்மை கருதி, தகவற்பெட்டிக்கான வார்ப்புருவிலும் கோவில் என்று வரும் அனைத்து இடங்களிலும் கோயில் என்று மாற்ற வேண்டும்.

இம்மாற்றங்கள் தங்களுக்கு ஏற்புடையனவா, இந்நிலைப்பாட்டை இணக்க முடிவாக இறுதி செய்யலாமா என்று உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:41, 21 பெப்ரவரி 2017 (UTC)

ஏற்புடையதே. நீங்கள் குறித்துள்ள மாற்றத்தில் பகுப்புகளும் மாற்றப்படுகின்றன. கோயிலுக்கான புதிய பகுப்பை உருவாக்காமல், கோவிலுடனான பழைய பகுப்புகளை புதிய பகுப்புகளுக்கு வழிமாற்றின்றி நகர்த்த வேண்டும். இதனால் விக்கித்தரவிலும் தானியங்கியாக மாற்றம் ஏற்படும், அத்துடன் வரலாறும் பாதுகாக்கப்படும்.--Kanags \உரையாடுக 09:03, 21 பெப்ரவரி 2017 (UTC)
ஏற்புடையதே. கனகு கூறிய படி பகுப்பின் வரலாற்றையும் பேணக் கோருகிறேன்.--உழவன் (உரை) 10:11, 21 பெப்ரவரி 2017 (UTC)
@Kanags:, ஒவ்வொரு தானியக்கக் கட்டுரையும் கோயில் தொடர்பாக ஒரே ஒரு பகுப்பை மட்டும் உருவாக்குகிறது. எடுத்துக்காட்டுக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்கள். இப்பகுப்பு மாவட்டத்தையும் கடவுளையும் அடிப்படையாகக் கொண்டு அமைகிறது. இவ்வாறு ஏற்கனவே உள்ள பகுப்புகள் குறைவே. இந்துக் கோயில்கள் பகுப்பிலும் பெரும்பாலான துணைப் பகுப்புகள் ஏற்கனவே கோயில் என்றே உள்ளன. எனவே, குறிப்பிட்டு ஏதேனும் பகுப்பை வழிமாற்ற வேண்டும் என்றால் அவற்றைச் சுட்டிக்காட்டியும் திருத்தியும் உதவ வேண்டுகிறேன். இந்துக் கோயில்கள் பகுப்பின் கீழ் வராத வேறு பல பகுப்புகள் கோவில்கள் என்று உள்ளன. அவற்றைத் தனியே வழிமாற்ற வேண்டும். --இரவி (பேச்சு) 11:24, 21 பெப்ரவரி 2017 (UTC)

ː@Ravidreams:, நீங்கள் குறித்துள்ள மாற்றங்கள் ஏற்புடையதே.--நந்தகுமார் (பேச்சு) 11:39, 21 பெப்ரவரி 2017 (UTC)

தகவல்பெட்டியில் கோவில்;தலைப்பு, கட்டுரை,பகுப்பு ஆகியவற்றில் கோயில்; இந்தமுடிவு நன்று. ஏற்போம்! பின்பற்றுவோம்!! வணக்கம். உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:23, 28 பெப்ரவரி 2017 (UTC)