பூங்குழலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பூங்குழலி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் சேந்தன் அமுதன் காதலியாக வரும் கதாபாத்திரத்தின் பெயர். பூங்குழலி என்றால் பூவைப் போன்ற குழல் (கூந்தல்) உடையவள் என்று பொருள்.

இளவரசி குந்தவை இலங்கையில் பெரும் படையுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் தன் தம்பி அருள்மொழி வர்மனுக்கு கொடுத்தனுப்பிய ஓலையை வாங்கிக்கொண்டு வந்தியத்தேவன் கோடியக்கரையை வந்து அடைகிறான். அங்கே அழகான பூங்குழலியை சந்திக்கிறான். பூங்குழலி படகு ஓட்டுவதில் திறமைசாலி. அவளின் படகில் இருவரும் இலங்கைக்குப் போகிறார்கள்.

பூங்குழலியின் அத்தை ஒரு வாய்பேச இயலாத பெண். அவளது மகன் சேந்தன் அமுதன் என்பவன். பூங்குழலி மேல் காதல் கொண்டவன். இவன் வந்தியத்தேவனுக்கு பெரிதும் உதவியவன். படகுக்காரியான பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனிடம் காதல் கொள்கிறாள், அதே சமயம் இளவரசரும் பூங்குழலியிடம் காதல் கொள்கிறார். ஆனால் இதனை இருவரும் வெளிப்படுத்திக்கொள்ள்வில்லை.

கல்கியின் பொன்னியின் செல்வன்
கதை மாந்தர்
வந்தியத்தேவன் | அருண்மொழிவர்மன் | குந்தவை | ஆழ்வார்க்கடியான் நம்பி | அநிருத்தப் பிரம்மராயர் | சுந்தர சோழர் | வானதி | நந்தினி | பெரிய பழுவேட்டரையர் | சின்னப் பழுவேட்டரையர் | ஆதித்த கரிகாலன் | செம்பியன் மாதேவி | பூங்குழலி | மந்தாகினி | பார்த்திபேந்திர பல்லவன் | கந்தமாறன் | சேந்தன் அமுதன் | மணிமேகலை
பா    தொ


"http://ta.wikipedia.org/w/index.php?title=பூங்குழலி&oldid=634479" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி