பு. வெ. சிந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புசார்லா வெங்கட சிந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பு. வெ. சிந்து
2016 ஆம் ஆண்டில் சிந்து
நேர்முக விவரம்
பிறப்பு பெயர்புசார்லா வெங்கட சிந்து
நாடு இந்தியா
பிறப்பு5 சூலை 1995 (1995-07-05) (அகவை 28)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம் (தற்போது தெலுங்கானாவில்), இந்தியா[1]
உயரம்1.79 m (5 அடி 10 அங்)[2]
எடை65 kg (143 lb)[2]
விளையாடிய ஆண்டுகள்2011–தற்போது
கரம்வலக்கை
பயிற்சியாளர்பார்க் டே சாங்[3]
பெண்கள் ஒற்றையர்
விளையாட்டு சாதனை410 வெற்றிகள், 169 தோல்விகள்
பெரும தரவரிசையிடம்2 (1 ஏப்ரல் 2017[4])
தற்போதைய தரவரிசை9 (31 சனவரி 2023[5])
பதக்கத் தகவல்கள்
பெண்கள் இறகுப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
ஒலிம்பிக்சு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 ரியோ ஒலிம்பிக்சு மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்சு மகளிர் ஒற்றையர்
பி.டபல்யூவ்.எஃப் உலக இறகுப்பந்தாட்ட வாகையர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 பேசெல் மகளிர் ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 கிளாஸ்கோ மகளிர் ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 நாஞ்சிங் மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2013 குவாங்சௌ மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 கோபன்ஹேகன் மகளிர் ஒற்றையர்
தாமஸ் & உபேர் கோப்பை
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 புது டெல்லி மகளிர் குழு
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 குன்ஷான் மகளிர் குழு
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 ஜகார்த்தா-பாலெம்பாங் மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 இன்சியான் மகளிர் குழு
ஆசிய வாகையாளர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 கிம்சியோன் மகளிர் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2022 மணிலா மகளிர் ஒற்றையர்
ஆசியா கலப்பு அணி சாம்பியன்ஷிப்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2023 துபாய் கலப்பு அணி
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கோல்ட் கோஸ்ட் கலப்பு அணி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2022 பர்மிங்காம் மகளிர் ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 கோல்ட் கோஸ்ட் மகளிர் ஒற்றையர்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 பர்மிங்காம் கலப்பு அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2014 கிளாஸ்கோ மகளிர் ஒற்றையர்
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 குவகாத்தி–சில்லாங் மகளிர் குழு
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 குவகாத்தி–சில்லாங் மகளிர் ஒற்றையர்
பொதுநலவாய இளைஞர் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011 டக்ளஸ் பெண்கள் ஒற்றையர்
ஆசிய இளைஞர் வாகையாளர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 கிம்சியோன் பெண்கள் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 இலக்னோ பெண்கள் ஒற்றையர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2011 இலக்னோ கலப்பு அணி
இ. உ. கூ. சுயவிவரம்

புசார்லா வெங்கட சிந்து (Pusarla Venkata Sindhu, தெலுங்கு: పూసర్ల వెంకట సింధు, பிறப்பு: 5 சூலை 1995) ஓர் இந்திய இறகுப்பந்தாட்ட வீரர். 2016 ஆகஸ்த்து மாதம் பிரேசிலின் ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். சிந்து ஐதராபாத்தில் உள்ள கோபிசந்த் இறகுப்பந்தாட்ட அகாதமியில் பயிற்சி பெற்று வருபவர். இந்திய விளையாட்டுவீரர்களில் ஒலிம்பிக்கில் பங்கு பெறத்தக்கவர்களை அடையாளம் கண்டு ஆதரிக்கும் இலாப நோக்கற்ற அமைப்பான ஒலிம்பிக் தங்க வேட்டை (Olympic Gold Quest) இவரை ஆதரிக்கிறது. இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உயர்ந்த 20 தரவரிசையாளர்களில் ஒருவராக செப்டம்பர் 21, 2012இல் வெளியிடப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளார். தற்போது பத்தாவது இடத்தில் இவர் உள்ளார்.[6] இக்கூட்டமைப்பின் இளநிலை ஆட்டக்காரர்களில் மூன்றாவதாக தரப்படுத்தப்பட்டுள்ளார்.[7]ஹாங்காங் அருகே உள்ள மக்காவ் நகரில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான மக்காவ் கிராண்ட் பிரீஸ் ஓபன் போட்டியில் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.[8]

போர்ப்சு இதழின்படி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு முறையே 8.5மில்லியன் மற்றும் 5.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் பெற்றதன் மூலம் அதிகம் வருமானம் ஈட்டிய வீராங்கனை என்ற பெருமையினைப் பெற்றார்.[9][10] இந்தியாவின் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதினையும் , குடிமை விருதுகளில் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதினையும் பெற்றுள்ளார். சனவரி 2020இல் மூன்றாவது குடிமை விருதான பத்ம பூசன் விருதினையும் பெற்றார்.[11][12][13]

பிறப்பு[தொகு]

பி.வி.சிந்து பி. வி. ரமணா மற்றும் பி.விஜயா தம்பதியினருக்கு ஜூலை மாதம் 5, 1995 வருடம் பிறந்தார். இவரின் பெற்றோர் இருவரும் கைபந்து வீரர்களாவர்.இவரது தந்தை அர்சுனா விருது வென்றவராவார்.

ரியோ ஒலிம்பிக்ஸ்[தொகு]

இவர் 2016 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில் பங்கு பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் இவர் ஒலிம்பிக் இறகுப்பந்து போட்டிகளில் இறுதிச்சுற்றுக்கு சென்ற முதல் இந்தியர் ஆவார். சிந்து காலிறுதியில் உலகதர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் வாங்யிகானையும், அரையிறுதியில் உலக தரவரிசையில் ஆறாம் இடத்தில் உள்ள ஜப்பானின் நஜோமி ஓகுஹாராவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, எசுப்பானியாவின் கரோலினா மாரினிடம் தோல்வியைத் தழுவினார். இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.[14] ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக வெள்ளி பதக்கம் வாங்கிய முதல் பெண்மணி இவர்.

2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி[தொகு]

இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இறகுப்பந்து விளையாட்டில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹீ பிங்ஜியவோவை வீழ்த்தி 1 ஆகஸ்டு 2021 அன்று வெண்கலப் பதக்கம் வென்றார்.[15][16]

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டி[தொகு]

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார்.[17]

ஆட்டக்கால சாதனைகள்[தொகு]

  • உலக சாம்பியன் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் பெண் பி.வி.சிந்து ஆவார்.
  • 2013 ஆம் ஆண்டில் நடந்த முக்கியப் போட்டிகளில் இரண்டு தங்கமும்,ஒரு வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.
  • 1983 க்கு பிறகு ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே ஆவார்.
  • உலக சம்மேள தரவரிசையில் முதல் இருபது இடங்களுக்குள் இவர் உள்ளார்.
  • பி.டபிள்யூ ஜூனியர் தரவரிசையில் இவர் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
  • இள வயதில் (பதினெட்டு வயது) அர்ஜுனா விருதையும் வாங்கியுள்ளார்[18].
  • 2018 ஆம் ஆண்டு திசம்பர் 16 ஆம் நாள் சீனாவின் குவாங்சு நகரில் நடந்த பிடபிள்யூஎப் உலக சாம்பியன் போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.[19]
  • 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் பசல் நகரில் நடந்த உலக வாகையாளர் கோப்பைப் போட்டியின் இறுதிப்போட்டியில் யப்பானின் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி உலக சாம்பியன் ஆனார்.[20]
நிகழ்வு 2010 2011 2012 2013
மகாவ் ஓப்பன்[21] 3 தங்கம்
தென் கொரியா கொரியா ஓப்பன்[21] சுற்று 2
இறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் இளநிலை வாகையாளர் போட்டிகள்[21] சுற்று 3
சீனா சீனா ஓப்பன்[21] தகுதிநிலை அரையிறுதி
இந்தோனேசியா இந்தோனேசியா ஓப்பன்[21] சுற்று 2
இந்தியா இந்திய ஓப்பன்[21] அரையிறுதி சுற்று 1 காலிறுதி
சப்பான் சப்பான் ஓப்பன்[21] சுற்று 2
நெதர்லாந்து டச்சு ஓப்பன்[21] 3 வெள்ளி
இந்தியா இந்திய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட்[21] சுற்று 2 சுற்று 2 3 வெள்ளி
மலேசியா மலேசிய ஓப்பன் கிராண்ட் பிரீ கோல்ட் Malaysia Open Grand Prix Gold[21] 3 தங்கம்
சுதிர்மான் கோப்பை 3 தங்கம்
இறகுப்பந்தாட்ட உலகு கூட்டமைப்பின் வாகையாளர் போட்டிகள்இறகுப்பந்தாட்ட உலகக் கூட்டமைப்பின் உலகப் போட்டிகள்[21] 3 வெண்கலம்

மேற்சான்றுகள்[தொகு]

  1. "PV Sindhu Profile, Stats, Record: PV Sindhu goes after converting bronze medal to gold". இந்தியன் எக்சுபிரசு. 29 March 2018.
  2. 2.0 2.1 "P. V. Sindhu Bio, Stats, and Results". Olympics at Sports-Reference.com (in ஆங்கிலம்). Archived from the original on 18 April 2020. பார்க்கப்பட்ட நாள் 10 April 2020.
  3. "I don't have any differences with Gopichand, says PV Sindhu". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 15 February 2021. பார்க்கப்பட்ட நாள் 27 June 2021.
  4. "World No 2 on 7th April 2017 -". www. bwflive.tournamentsoftware.com. பார்க்கப்பட்ட நாள் 16 January 2022.
  5. "Pusarla V. Sindhu | Profile". bwfbadminton.com. Badminton World Federation. பார்க்கப்பட்ட நாள் 16 January 2022.
  6. "Sindhu breaks into world top 20 ranking". த இந்து. 21 September 2012. http://www.thehindu.com/sport/other-sports/article3918416.ece. பார்த்த நாள்: 21 September 2012. 
  7. "BWF Girl's Singles Ranking of Sindhu". tournamentsoftware.com. 2012-09-21.
  8. "கிராண்ட் பிரீஸ் ஓபன் பேட்மிண்டன்சிந்து சாம்பியன்". தீக்கதிர்: pp. 6. 2 திசம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 2014-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140118125515/http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 2 திசம்பர் 2013. 
  9. Badenhausen, Kurt. "The Highest-Paid Female Athletes 2018". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  10. Badenhausen, Kurt. "The Highest-Paid Female Athletes 2019: Serena And Osaka Dominate". Forbes (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  11. "Padma Vibhushan for Mary Kom, PV Sindhu awarded Padma Bhushan". The New Indian Express. 26 January 2020. பார்க்கப்பட்ட நாள் 26 January 2020.
  12. "Mary Kom will be conferred with Padma Vibhushan, PV Sindhu to get Padma Bhushan". தி எகனாமிக் டைம்ஸ். 26 January 2020. https://economictimes.indiatimes.com/magazines/panache/mary-kom-will-be-conferred-with-padma-vibhushan-pv-sindhu-to-get-padma-bhushan/articleshow/73627922.cms. 
  13. "MINISTRY OF HOME AFFAIRS" (PDF). padmaawards.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2020.
  14. PV Sindhu loses to World No 1 Carolina Marin, claims Olympic silver
  15. "ஒலிம்பிக் பேட்மிண்டன்; வெண்கலம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து". Archived from the original on 2021-08-01. பார்க்கப்பட்ட நாள் 2021-08-01.
  16. டோக்யோ ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கம் வென்றார் இந்தியாவின் பி.வி. சிந்து
  17. "Commonwealth Games 2022 Day 11 Live Updates: PV Sindhu wins maiden singles gold; Lakshya Sen takes second game". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
  18. ஜனவரி 9,2014 வெளிவந்த 'தி இந்து- 2013 சுவடுகள்' , பக்கம்-05
  19. https://tamil.thehindu.com/sports/article25756741.ece பார்த்த நாள்:17.12.2018
  20. "தங்கம் வென்றார் சிந்து - உலக பாட்மிண்டனில் வரலாறு". தினமலர். 25 ஆகத்து 2019. பார்க்கப்பட்ட நாள் 26 ஆகத்து 2019.
  21. 21.00 21.01 21.02 21.03 21.04 21.05 21.06 21.07 21.08 21.09 21.10 "Tournaments of P.V.Sindhu". tournamentsoftware.com.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._வெ._சிந்து&oldid=3845318" இலிருந்து மீள்விக்கப்பட்டது