நெருக்கடி நிலை (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நெருக்கடி நிலை - அவசரகால பிரகடனம் (Indian Emergency - 25 ஜூன் 197521 மார்ச் 1977) இந்தியாவில் 21- மாத கால்த்திற்கு இந்த நிலை இந்தியக் குடியரசுத் தலைவர் பக்ருதின் அலி அகமது வால், அப்பொழுதய இந்தியப் பிரதமர் திருமதி இந்திர காந்தியின் ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் இந்திய அரசியலமைப்பு விதி 352 இன் படி பிரகடனப் படுத்தப்பட்டது. இது இந்திரகாந்தியின் செல்வாக்கை உயர்த்துவதற்காகவும், அவருக்கு எதிரான நிலையை மக்கள் எடுக்காத நிலையை உருவாக்குதற்காகவும். நாட்டின் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் தேர்தலை சந்திக்க விரும்பாததால் தேர்தலை தள்ளிப்போடும் நோக்கத்திலும், மக்களின் அடிப்படை குடியுரிமை உரிமைகளை பறிக்கும் விதத்திலும், அமல்படுத்தபட்டதாக கூறப்படுகின்றது. இந்தியக் குடியரசு வரலாற்றில் இக்காலம் சர்ச்சை மிகுந்த காலமாக வர்ணிக்கப்படுகின்றது. [1]

பொருளடக்கம்

[தொகு] பின்னணி

[தொகு] அரசியல் அமளி

இந்திரா காந்தி கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1971 இன் பொதுத்தேர்தலை சந்திக்க துணிவில்லாமல் செய்த பெரும் தேர்தல் மோசடி என்று எதிர்கட்சிகளால் வர்ணிக்கபட்டது. காந்திய சோசலிச வாதியான ஜெய பிரகாஷ் நாராயண் இதை எதிர்த்து பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். இந்திரா காந்தியின் மைய அரசை எதிர்த்து சத்யாகிரகம் நடத்தினார்.

[தொகு] நெருக்கடி நிலை பிரகடனம்

இந்தியக் குடியரசுத்தலைவர் பக்ருதின் அலி அகமத் பிரதமர் இந்திரா காந்தியின், ஆலோசனையின் பேரில் ஜூன் 26 1975 அன்று நாட்டின் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தினார். அவருடைய (இந்திரா காந்தி) வார்த்தையில் கூறுகையில் "ஜனநாயகத்தை பெரும் இறைச்சலுடன்" (ஜனநாயகத்தின் பேரிறைச்சல்) நிறுத்தினார்.

அரசியலமைப்பின் தேவைக்கேற்ப இந்திரா காந்தியின் ஆலோசனை மற்றும் குடியரசுத்தலைவரின் ஒப்புதலின்படி இந்த நெருக்கடி நிலை ஒவ்வொரு 6 மாதக் கலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட்டு 1977 இல் தேர்தலை சந்திக்கும் வரை தொடர்ந்த்து.

[தொகு] நெருக்கடி நிலை நிர்வாகம்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயலாட்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்திய அரசியலைமைப்பு சட்ட விதி 352 ஐ கொணர்வது மூலம், இந்திரா காந்தி தனக்கென கூடுதலான சிறப்பு அதிகாரங்களை பெற்றார் மற்றும் குடியுரிமைகளை முடக்கினார், எதிர்க்கட்சிகளை ஒடுக்கினார்.

இதனால் அரசு இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்தின் மூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுருத்தலை வரவழைத்துக்கொண்டது. வேலைநிறுத்தங்கள், கலவரங்கள், கிளர்ச்சிகள் மற்றும் எதிர்ப்புகளையும், இவைகளினால் அரசுக்கு மிக அதிகமான பொருளாதார நெருக்கடியையும் உருவாக்கியது. எதிர்க்கட்சிகளின் அளவில்லாத எதிர்ப்புகளை நாடுமுழுவதும் சந்திக்க நேர்ந்தது. இந்திரா காந்தி தனக்கு நெருக்காமானவர்கள் கூறிய ஆலோசனைகளையும் பொருட்படுத்தவில்லை. அவரின் நெருக்கமான ஆலோசகராக கருதப்படும் இரண்டாவது மகன் சஞ்சய் காந்தி நெருக்கடி நிலை சம்பந்தமாக தெரிவித்த எதிர் கருத்துகளையும்,ஆலோசனைகளையும் தவிர்த்தார்.

அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். பல முக்கிய அரசியல் தலைவர்களான ஜெய பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி,பல பொதுவுடமைவாதிகள், பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள், இன்னும் இதர கிளர்ச்சியாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் என் கருதப்பட்டவர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் போன்ற எதிர் வாத கருத்துக்களுடைய அமைப்புகளும் தடை செய்யபட்டன.

[தொகு] 1977 தேர்தல்

ஜனவரி 23, 1977 புதியத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். மார்ச் மாதம் புதிய தேர்தல் நடைபெறும் என அறிவித்தார், மேலும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தார். நெருக்கடி நிலை அதிகாரப்பூர்வமாக மார்ச் 23, 1977 அன்று முடிவுற்றது.

[தொகு] மேற்கோள்கள்

  1. "1975 இல் இந்தியா : ஜனநாயக இருட்டடிப்பு", என்.டி பால்மர் - ஆசிய ஆய்வறிக்கை, தொகுதி 16 எண் 5. இல் எழுதபட்ட வரிகள்.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்