நான்காம் அலைப் பெண்ணியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நான்காம் அலைப் பெண்ணியம் (Fourth-wave feminism) 2012 ஆம் ஆண்டில் தோன்றிய பெண்னியக் கட்டமாகும். இது மகளிரை அதிகாரப்படுத்தலில் கவனம் குவிக்கிறது. இணைய ஊடகங்களைப் பயன்படுத்துகிறது.[1] பிரிவிடை உறவை மையப்படுத்திய,[2] இந்த நான்காம் அலை அதிகாரக் கட்டமைப்பின் சமூக அடுக்குகள்வழி விளிம்புநிலைகளையும் உருவாக்கும் ஊடிணைவு அமைப்புகளை ஆய்வுசெய்ய முயல்கிறது. நான்காம் அலைப் பெண்ணிய்யர்கள் விளிம்புநிலைக் குழுவை அரசியலிலும் வணிகத்திலும் கூடுதல் பேராண்மை பெற பாடுபடுகின்றனர். சமூகம் அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலையும் நடைமுறைகளையும் பின்பற்றினால் கூடுதலான சமவாய்ப்பு கிடைக்கும் என இவர்கள் வாதிடுகின்றனர்.[2]

முந்தைய பெண்ணியர்கள் பொருளீட்டும் மகளிருக்கான் விடுதலை, தனியர்நலம், சமூக இயங்குதளத்துக்காகப் போராடினர்; ஆனால், நான்காம் அலைப் பெண்ணியர்கள் பாலியல் தாக்கல், பாலியல் வன்முறை, சம வேலைக்குச் சம ஊதியம், தம் உடல்சார்ந்த முற்றுரிமை ஆகிய நிகழ்ச்சிநிரலுக்காகப் போராடுகின்றனர்.[3]

நான்காம் அலைப் பெண்ணியர்கள் அச்சு, செய்தி, சமூக ஊடகம் ஆகிய அனைத்து தொடர்பாடல்களையும் இணைவாகப் பயன்படுத்தி, மகளிரையும் மக்களையும் அணிதிரட்டுகின்றனர்; அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்து பேசுகின்றனர்; சிறுமியருக்கும் மகளிருக்கும் சமவாய்ப்பு கிடைக்க வேண்டுமெனப் போராடுகின்றனர்.பெண்களின் முன்னேற்றத்துக்கு மட்டுமன்றி, நான்காம் அலைப் பெண்ணியர்கள் சிறுவர், சிறுமியர் வளர்ச்சியில் பெற்றோருக்கு இருக்கவேண்டிய ஆழ்ந்த அக்கறை, உறவு பற்றியும் கவலைபட்டனர்; ஆண்சிறார், ஆடவர் தம் விருப்பங்களையும் எண்ணக் கிடக்கைகளையும் உணர்வுகளையும் வெளியிட கூடுதலான வாய்ப்புகளை பொது சமூகவெளி இடந்தரவேண்டும் என வாதிட்டனர்.[4]

சமூக ஊடகங்கள்[தொகு]

முந்தைய பெண்ணிய இயக்கங்கள் சமூக அரசியல் கட்டமைப்புகள், தொடர்பாடலுக்கான வழிமுறைகள் கிடைத்தல் அருமை போன்ற சிக்கல்களைச் சந்தித்தன;[5]நான்காம் அலைப் பெண்ணியர்கள் எளிதாக இணையவும் கருத்துபகிரவும் சந்திக்கும் ஒடுக்கலைப் பர்றிய அகல்விரிவான பார்வையை உருவாக்கவும் முந்தைய பெண்ணிய அணுகுமுறைகளை உய்யநிலையில் திறனாய்வு செய்யவும் இணையவெளி ஊடகங்களைப் பயன்கொள்ள முடிகிறது.[6][7][8]

பன்னாட்டு மகளிர் நாள், இலண்டன், 2017

கிரா கோச்சிரான் நான்காம் அலைப் பெண்ணியம் தொழில்நுட்பத்தல் வரையறுக்கப்படுகிறது எனவும் முகநூல், கீச்சகம்,படவரி, வலையொளி, வலைக்குவளை(டம்பிளர்), பெண்ணிய வலை போன்ற வலைப்பூக்கள் ஆகியவற்றைப் பெண்பாலினக்கீழ்மைக்கு அறைகூவல் விடப் பயன்கொள்கிறது எனவும் வாதிடுகிறார். [8][9][10]

சமூக ஊடகச் செயல்முனைவு ஊடக அச்சத்தைப் போக்க கீச்சக இழைகள் ஊடாக வெளிப்படுகிறது.[11] அல்லது குறிப்பாக, நானும்(|#MeToo) [12] ஆம் அனைத்துப் பெண்களும்(#YesAllWomen), நம் சிறுமியரை மீட்க(#bringbackourgirls), ஆசிய பக்க உதைப்பு(#NotYourAsianSidekick) வெள்ளை மகளிர் ஒற்றுமை(#SolidarityIsForWhiteWomen) போன்ற இணையவெளிப் பரப்புரைகளைப் பயன்படுத்துகிறது.[13] அமந்தா தெ காதெனெத் வெளியிட்ட இளம்பெண்காவுதல் இணையவெளி ஊடகம்[14]மகளிரிடையே உள்ள ஆக்கத்திறனயும் தொழில்முனைவுக் களத்தையும் ஊக்குவிப்பதோடு,[15] இது சமூகத்தில் பெண்ணிய உரையாடலை வற்புறுத்துவதோடு, ஊடகத்தை இளம்பெண்கள் பயன்படுத்திப் பொது சிந்தனை வெளியைத் தடம்புரட்டிப் போட வழிவகுக்கிறது.[14] டைம் இதழ் தனது 2017 ஆம் ஆண்டின் ஆளுமையாக நானும்( #MeToo) இயக்கச் செயலூக்கர்களை "அமைதித் தகரிகள்" குழுவென இனங்கண்டுள்ளது. [16][17][18]

நான்காம் அலைப் பெண்ணியரின் பிற பரப்புரைகளாக, அன்றாடப் பாலியல் திட்டம், மூன்றாம் பக்கம் அல்ல, நி உனா மெனோசு, பாலியல் கடிப்பை நிறுத்து, பாலூட்டல் விடுதலை, உள்ளுறைநடை, மகளிர் பேரணி 2017, மகளிர் பேரணி 2018 , காலம் கணிந்தது, ஒருபில்லியன் பேரெழுச்சி ஆகியன அடங்கும். கலையியல் முயற்சிகளாக, மிதியடிச் செயல்திறம் நியூயார்க் வட்டத்தில் பெண்ணின் 10 மணிநேரத் தனிநடை ஆகியன உள்ளடங்கும்.

நான்காம் அலைப் பெண்ணியர் சமூக மேனிலை குறித்த உரையாடலில் அத்தகைய குழுக்கள் தம் இருப்பை ஏற்பதோடு விளிம்புநிலைக்குழுக்களை அதிகாரப்படுத்தலிலும் முன்னேற்றத்திலும் முன்னின்று பாடுபட விளிக்கின்றனர்.[19]

வரலாறும் வரையறையும்[தொகு]

சில பெண்ணியர், 1980 களில் பழமைவாத ஆளுமைகளாகிய மார்கரெட் தாட்சரும் உரொனால்டு இரீகனும் அதுவரை பெண்ணியர் என்ன நலன்களைச் சாதித்தனர் எனக் கேட்டு அறைகூவல் விடுத்தமையை எடுத்துரைத்து விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளனர்.[20] அதேவேளயில், வட அமெரிக்க, இலத்தின அமெரிக்க, ஐரோப்பியப் பெண்ணியர்கள் தம் இலக்குகளில் வெற்றி பெற்றுள்ளனர்; குறிப்பாக, பெண்களின் உரிமைகளை மேம்படுத்தும் அரசு இயக்கும் நிறுவனங்களை உருவாக்கச் செய்துள்ளனர். அரசில் பெண்களின் பங்கேற்பை முன்னேற்றியுள்ளனர்;ளைந்த நிறுவனங்கள் பெண்ணிய இலக்குகலை நடைமுறைப்படுத்துவதால், பெண்ணிய இயக்கங்கள் வலிமைகுன்றியுள்ளன.[21]

எண்ணக்கருக்கள்[தொகு]

பிரித்தானிய இதழியலாளர் கிரா கோச்சிரானும் பெண்ணிய அறிஞர் புரூடன்சு சேம்பர்லைனும் நான்காம் அலைப் பெண்ணியம் மகளிர் அறம் அல்லது நீதிக்காக கவனம் குவிப்பதாக விவரிக்கின்றனர்; குறிப்பாக, பாலியல் தாக்குதலுக்கு எதிர்ப்பு, தெருவடி வன்முறை, பணியிடப் பாகுபாடும் வன்முறையும் உள்ளிட்ட மகளிர் வன்முறையும் பாகுபாடும் உடல்சார் பகடி, கேவலமான ஊடகப் பாலியல் படிமம், இணையப் பாலினக் கீழ்மை, வளாகப் பாலியல் தாக்குதல், பொதுப் போக்குவரத்து தாக்குதல், பாலின வல்லுறவு ஆகியவை பற்றிய கண்டித்தல் பற்றி எடுத்துரைக்கின்றனர். மேலும் பாலினப் பிரிவிடை உறவு, சமூக ஊடக செயல்முனைப்பு, இணைவெளி அம்பலப்படுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கு அறநிலை ஆதரவு தெரிவிக்கின்றனர்.[8][22][23]

சேம்பர்லைன் இதன் சாரம் என்னவென்றால், " சில தீங்கான மனப்பான்மைகள் இன்னமும் நிலவுகின்றன" என்பது தான் என எழுதுகின்றார்.[24] நான்காம் அலைப் பெண்ணிய நிகழ்ச்சிகளிலும் நிறுவன அமைப்புகளிலும் அன்றாட பாலியல் திட்டம், ஐக்கிய அரசு பெண்ணிய அமைப்பு, இரவை மீட்டெடு, ஒரு பில்லியன் பேரெழுச்சி, "நம்பிகளை விலகுங்கள் எதிர்ப்பு" ஆகியன அடங்குகின்றன.[8] திரைப்படம், ஒலிப்படவியல் துறைகளை நங்கையர்கண்பாராக்கு இணையவெளி கவனம் குவிப்பதோகு மகளிர் பாராக்கிலும் பார்வையாளரைக் கவனம் குவிக்கச் செய்கிறது.[14]

நான்காம் அலைப் பெண்ணிய நூல்கள் சில பின்வருமாறு:

  • எனக்கு கிடைத்த ஆணிய விளக்கங்கள் (2014), அமெரிக்கர் இரெபேக்கா சோல்நித் ( இதில் ஆண் திரிப்பு எனும் சொல் வருகிறது)
  • வகேந்தா (2014), இரியான்னன் உலூசி கோசுலெத், கோல்லி பாக்சுட்டர் ( தம் இணைய இதழ் சார்ந்து; வகேந்தா, 2012 இல் தொடங்கிய இதழ்)
  • பாலியல் கருப்பொருட்கள்: மலரும் நினைவுகள் (2016), அமெரிக்கர் ஜெசீக்கா வாலன்ட்டி
  • அன்றாடப் பாலியல் (2016), இலவுரா பேட்சு ( தன் அன்றாட பாலியல் திட்டம் சார்ந்து)[25]

கோசுலெத்தும் பாக்சுட்டரும் தம் நூலில் பொதுவெளி மகளிர் அச்சு ஊடகத்தில் வளர்த்தெடுக்கும் பெண்மை குறித்த கட்டிபெட்டித்தனங்களைத் தோலுரித்துக் காட்டி உண்மை நிலவரத்தைப் பறைசாற்றுகின்றனர்.[26]

பேட்சு எனும் பிரித்தானியப் பெண்ணிய எழுத்தாளர் 2012 ஏப்பிரல் 16 இலகீணைய வெளியில் அன்றாடப் பாலியல் திட்டம் ஒன்றை உருவாக்கி, மகளை தம் அன்றாடப் பாலியல் பட்டறிவுகளைப் பகிர வழிவகுத்தார்.[27]

மூன்றாம் அலைப் பெண்ணியர் 1990 களில் ஆணிய மேனிலைக் கருத்துப் படிமம் குறித்த பதிவுகளைத் தம் எழுத்துகளில் அறிமுகப்படுத்தினர். நான்காம் அலைப் பெண்ணியரும் இதைக் குறித்த விவாதத்தைக் கல்வித்துறையிலும் சமூக ஊடகத்திலும் தொடர்ந்து முன்னெடுத்தனர்.[28]இந்த நிகழ்வை முதன்முதலில் 1988 இல் விவரித்த பெண்ணியர்களில் ஒருவரான அமெரிக்க நாட்டு பெகி மெக்லிந்தோசு, இதை ஒரு " வெற்றுக் காசோலை, கருவிகள், உடைகள், படங்கள், கடவுச் சீட்டுகள், விதித் தொகுப்பு நூல்கள், சிறப்புச் சலுகைகள் ஆகியவற்றின் கட்புலனாகாத இலேசான போலிக் கவிப்புக்கூடு" என விளித்தார்.[29]நான்காம் அலைப் பெண்ணியர்கள் இந்தப் போலிக் கூட்டைக் கலைக்கவும் வலிமை குறைக்கவும் மேனிலை, விளிம்புநிலைக் குழுக்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்; பெண்ணியர்கள் உள்ளடக்கிய அனைவரின் நேரடிக் கூட்டிணைவால் சமூக மாற்றத்துக்குத் தம் குழுமல்களில் ஊக்கமூட்டினர். [30]

இலண்டன் எழுத்தாளர் நிக்கி வான் தெர் காகு ஆண்சிறுவரைச் சலுகை கொடுத்து வளர்ப்பதால் விளையும் சீரழிப்பு விளைவுகளை விவாதித்து, "சிறுவர்களுக்குச் சலுகைடுடன் வளர்க்கும் போக்கு, அவர்களுக்கான பொறுப்பைக் கற்றுத்தராதது மட்டுமன்றி, அவர்களிடம் இருந்து எதை எதிர்பார்க்கிறோம் என்பதையும் தெளிவாகத் தெரிவிப்பதில்லை" எனும் தொடக்கநிலைக் குழந்தை நலம், வளர்ப்பு சார்ந்த அறிவுரைக்குழுவின் பரிந்துரையைச் சுட்டிக் காட்டுகிறார்.[28]

நான்காம் அலைப் பெண்ணியர்கள் இந்தச் சிக்கல்களுக்கான தீர்வாக குழந்தை வளர்ப்பைப் பாலினப் பொதுவனதாக வரையறுக்கத் தொடங்கினர். சிக்காகோ மருத்துவப் பள்ளிப் பேராசிரியரான இலிசே எலியட், குழந்தைகளும் சுறுவரும் தம் வளரும் இளம்பருவத்தில் மிக நுட்பமான மனப்பதிவுகளுக்கு ஆட்படுவதால், அதில் ஏற்படும் சிறுபிழை கூட , அவர்களில் நாளடைவில் பேரளவு பாலினக் கட்டுபெட்டித்தனங்களுக்கு வழிவகுத்துவிடும் எனச் சுட்டிக் காட்டுகிறார்.[31]

நான்காம் அலைப் பெண்ணியர்கள், பெண்களுக்கு எதிரான செறிவான பாலினக் கட்டுபெட்டித் தனங்கள் ஆண்களுக்குத் தரும் அழுத்தங்கள் தம் அன்றாட உணவுக்காக அவர்களை வீட்டுப்பணிகளை மேற்கொள்பவர்களாக மாற்றுவதும் உண்டு என வாதிடுகின்றனர்; மேலும் இத்தகைய சமூகவழி உறுதிபடுத்தப்படும் கட்டுபெட்டித்தனமான பாலினப் பங்களிப்பு அழுத்தங்களே பெரிதும் சமூகத்திலும் பணியிடங்களிலும் பாலினப் பாகுபாட்டை உருவாக்குகின்றன.[32]

பியூ அமைப்பின் ஆய்வுப்படி, ஆண்களின் அதிகாரம் ஓங்கலாக உள்ள தொழிதுறைகளில் பணிபுரியும் பெரும்பாலான மகளிர் தம் பணியிடங்களில் பாலியல் தாக்குதல் நடப்பதாக அறிவித்துள்ளனர்.[33]

பாலினப் பிரிவிடையுறவு[தொகு]

பிரித்தானிய அறிஞர் பவுலின் மெக்கிளாரன்[34] நான்காம் அலைப் பெண்ணிய முன்னணியில் புகழ்பெற்ற ஆளுமைகளே இருந்தாலும், மகளிர் சந்திக்கும் பொருளியல் சமனின்மையைப் பற்றிய தகவல்களை அணுக வழிவகுக்கிறது என வாதிடுகிறார்.[19]

LGBT+ சமுதாயங்களையும் உள்ளடக்கிய இந்த இயக்கமும்,[19] பேக்கர் பல்கலைக்கழகப் பெண்ணியர்களான[[யாக்கோபு புட்சரும்[35] பெண்களைப் பற்றிய ஆண்களின் கட்டற்ற பாலியல் வேட்கையையும் மரபான கட்டுபெட்டித் தனமான மகளிர் சார்ந்த புனைவுக் கண்ணோட்டங்களையும் எதிர்க்கிறது. வழக்கமான ஆண்மை சார்ந்த செந்தர உலகுக்கு வெளியே வாழ்வதால் மகிழ்னர்களும் இத்தகைய கட்டுபெட்டித் தனமான உனைவுகளை ம்மறுக்கின்றனர் எனவும் மெக்கிளாரன் கூறுகிறார்.[36]

பிரித்தானிய வரலாற்றாசிரியர் அமந்தா விக்கெரி, நான்காம் அலைப் பெண்ணியம் நிறத்தால் மகளிரை விளிம்புநிலைப்படுத்துகிறது எனக் கூறுகிறார்; பொதுவெளிப் போராட்டத்தில் இந்த நிறவழி விளிம்பு மகளிர் சந்திக்கும் குறிப்பிட்டவகை அநியாயங்களுக்கு ஆட்படுவதையும் இவர்கள் அனைத்து மகளிரின் சமனின்மைக்கலுக்கு எதிராகப் போராடுவதையும் கருதுவதில்லை என வாதிடுகிறார்.[37]

பிரித்தானிய வரலாற்றாசிரியர் அமந்தா விக்கெரி, நான்காம் அலைப் பெண்ணியம் நிறத்தால் மகளிரை விளிம்புநிலைப்படுத்துகிறது எனக் கூறுகிறார்; பொதுவெளிப் போராட்டத்தில் இந்த நிறவழி விளிம்பு மகளிர் சந்திக்கும் குறிப்பிட்டவகை அநியாயங்களுக்கு ஆட்படுவதையும் இவர்கள் அனைத்து மகளிரின் சமனின்மைக்கலுக்கு எதிராகப் போராடுவதையும் கருதுவதில்லை என வாதிடுகிறார்.[38]

கனடியரான உரூத் பிலிப்சு நான்காம் அலைப் பெண்ணியம் அகல்விரிவான திட்டங்களை நோக்கமாகக் கொண்டு பொருளியல், அரசியல், சுற்றுச்சூழலியல், வறுமைபோக்கல், மகளிர் நலவாழ்வு பேணல், மகளிர் பொருலியல் வளர்ச்சி போன்ற தளங்களில் இய்யங்குவதாக வ்வாதிடுகிறார்.[3]

உலக அளவில்[தொகு]

நான்காம் அலைப் பெண்ணியம் ஐக்கிய அமெரிக்காவில் மக்களிடையே பரவலாகிவந்த அதேவேளையில் இதையொத்த நிகழ்வுகளைப் பிற உலக நாடுகளும் சந்தித்துவந்தன. இந்நிகழ்வுகளுக்கான எதிர்வினைகளில் ஒவ்வொரு நாடும் வேறுபட்டாலும், அமெரிக்க நான்காம் பெண்ணிய அலையின் தாக்கம் உலகெங்கிலும் கணிசமான விளைவுகளைத் தோற்றுவித்தது. நானும்(#MeToo) இயக்கம் சார்ந்த சில களவகை மாற்றுகளாக, பின்வருவன அமைந்தன:

  • இப்பவும்(#AndNow) அல்லது இப்பவென்ன(NowWhat), கனடா[39]
  • வோயெழ்சி(#WoYeShi) (ஆங்: MeToo), சீனா[40]
  • புறக்கணி உன் பன்றியை(#BalanceTonPorc0 (ஆங்: DenounceYourPig அல்லது ExposeYourPig), பிரான்சு[41]
  • என் பெயரில் அன்று(#NotinMyName), இந்தியா[42]
  • அந்த நேரம்(#QuellaVoltaChe) (ஆங்: The Time That), இத்தாலி[43]
  • இடர் களை(#BoycottAliZafar) அல்லது இன்னல் களை(#BoycottTeefainTrouble) அல்லது இன்னல் மிரட்டு, பாக்கிசுத்தானம்(#TeefaisTrouble)[44]
  • நானொரு பெண்(#BabaeAko) (ஆங்: I am a Woman), பிலிப்பைன்சு[45]
  • நானும்(#YoTambien) (ஆங்: MeToo), இசுபெய்ன்.[43]

உலக அளவில் 21 ஆம் நூற்றாண்டில், சமூக ஊடகச் சிறப்பை அறிந்து, " பெண்ணியக் குழுமலின் ஆக்கமும் பேணலும்"[7] வளர்ந்தவரும் மக்கள் எண்ணவோட்டமாக, "பெண்ணியச் செயல்முனைவில் பன்முகமும் ஆக்கவளமும் தொடரலானது".[7] உலகச் சமுதாயங்கள் "நடப்பு, இணைய நான்காம் அலைப்" பெண்ணியப் பதிவுகளை/எதிரொலிகளைச் சந்தித்து இதன் தனித்தனமையையும் வேறுபாட்டையும் ஆய்வு செய்யலாயின.[3] மேலும், இந்த நான்காம் அலைப் பெண்ணிய இயக்கங்களின் வளர்ந்துவரும் அதிகார வலயம் தேர்வான அரசுகளின் முன் சமகாலப் புத்திளம் பெண்ணிய இயக்கங்களோடு ஊக்கத்தோடு உறவாடும் சிக்கல்களை முன்நிறுத்தின.[46]

கனடாவில், 2017 அக்தோபரில் நானும் இனையவெளி இயக்கம் தோன்றிப் பரவலானதும் இயக்கத்தை பலர் நான்காம் அலைப் பெண்ணியர்களோடு தொடர்புபடுத்தினர்.[47] கனடா முதன்மை அமைச்சர் ஆதரவில் கனடாவில் இப்பவும் இணையவெளி இயக்கம் பரவலானது. இப்பவும் இணையவெளி இயக்கம் பாலியல் வன்முறை, பணியிட வன்முறை, அனைத்து மக்களுக்குமான சமவாய்ப்பு பற்றி விவாதித்து இவற்றுக்கான மக்களது ஆதரவைக் கோரியது.[39]

இந்தியாவில் ஏராளமான பெண்கள் அணிதிரண்டு பலவகை இயக்கங்களையும் எதிர்ப்புகளையும் காட்டினர்; இவை இந்திய மக்களின் பெமை குறித்த கண்ணோட்டங்களை உருமாற்றின.[42] இவற்றில், 2003 ஆம் ஆண்டைய வெற்றுக் கூச்சல் திட்டம், 2009 ஆம் ஆண்டைய பிங்கு உள்ளுறைப்(ஜட்டிப்) பரப்புரை இயக்கம், 2011 ஆம் ஆண்டைய SlutWalk எதிர்ப்பு, 2015 ஆம் ஆண்டைய கூட்டை உடைத்தெறி இயக்கம் 2017 ஆம் ஆண்டைய அச்சமில்லை பேரணி ஆகியன உள்ளடங்கும். பாலினச் சமம், பாலியல் வன்முறை, குழந்தை திருமணம், பாலினஞ்சார் கருக்கலைப்பு, திருமணச் சீர்வரிசை வன்முறை போன்ற பல நெடுங்கால ஆழ்நிலைச் சிக்கல்களின்பால் கவனம் குவித்து சமூக உரையாடலை மடைமாற்றியது. சமூகத்தில் மகளிர் விடுதலை, தேர்வுரிமை, விருப்பங்களை முன்வைக்கும் பல விணாக்களை எழுப்பியது;[42] இந்தப் பரப்புரையின் தாக்கமும் அதிகார வலயமும் அரசை வன்புணர்வுக்கான விரிவான வரையறையை உருவாக்கி, " வன்புணர்ச்சியாளருக்குக் கடுந்தண்டனையையும் உடற்சீண்டலையும் பாலியல் பகடியையும் குற்றங்களாக்கும்" சட்டங்களை அறிமுகப்படுத்த வைத்தது;[42] இது " மகளிர்தம் புதுமைக்கும் பாலியல்புக்கும் உகந்த புதிய இந்தியவகைப் பெண்மையைச் சுட்டியது" [42] மேலும், இது இந்தியாவில் நான்காம் அலைப் பெண்ணிய எழுச்சியையும் காட்டியது.[48]

பிரேசில் போர்ட்டோ அலெகிரேவில் எலெ நாவோ இயக்கத்தில் பங்கேற்கும் போராளி.

பிரெசில் நாட்டில், 2018, செப்டம்பர் 19 இல், எலெ நாவோ இயக்கம்(எலெ நாவோ எனும்போர்த்துகீசியச் சொல்லின் பொருள் அவனன்று என்பதாகும்) அல்லது ஜாகிர் பொல்சொனாரோ எதிர்ப்பு இயக்கம் மகளிரால் அந்நாட்டு அரச தலைவரான ஜாகிரோ பொல்சொனாரோவின் உரையையும் அவரது பாலியல் சார்ந்த அலப்பறைகளையும் எதிர்த்தது; இது அந்நாட்டின் பல பகுதிகலில் மட்டுமல்லாமல் உலகெங்கணும் கடைபிடிக்கப்பட்டது. இதன் முதன்மை இலக்காக அரச தலைவராகிய பொல்சொனாரோவின் தலைமையிலான பரப்புரையையும் அவரது பாலியல் கருத்துகளையும் கண்டிப்பதேயாகும். [49][50][51][52] இந்த எதிர்ப்பு பல தன்னாட்டு, பன்னாட்டு ஆளுமைகளாலும் கூட கடைபிடிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் பங்குபற்றிய பன்னாட்டு ஆளுமைகளில் மதோன்னாவும் ஒருவர். இவர் தன் கணவரைவில் (12.1 மில்லியன் பார்வைகளைக் கொண்டது) தனது வாய் ஒரு நாடாவால் மூடப்பட்டும் அதில் "விடுதலை" எழுதியும் உள்ள உருவப்படம் ஒன்றை வெளியிட்டார்"; நாடாவில் போர்த்துகீசிய மொழியில் "Ele não vai nos desvalorizar, ele não vai nos calar, ele não vai nos oprimir” ( அவன் எமை தரந்தாழ்த்தவியலாது, அவன் எமை அமைதிபடுத்தவியலாது, அவன் எமை அடக்கவியலாது)” என எழுதியிருந்தது.[53]

காலநிரல்[தொகு]

நாள் நிகழ்ச்சி
16 ஏப்பிரல் 2012 இலவுரா பேட்சு, மகளிர் பாலியல் தாக்குதல்களை அறிவிக்க அன்றாடப் பாலியல் திட்டத்தை ஏற்படுத்தினார்.[27]
ஆகத்து 2012 உலூசி ஆன்னி ஓல்ம்சு, ஐக்கிய அரசு சன் எனும் இதழ் மேலுடையற்ற மகளிர் படங்கள் வெளியிடுவதைத் தடுக்க மூன்றாம் பக்கம் இனி கூடாது எனும் இணையவெளிபக்கத்தைத் தொடங்கினார்.[54]
செப்டம்பர் 2012 ஏவா என்சுலர், மகளிர்பாலான பாலியல் வன்முறைக்கு முடிவுகட்ட ஒரு பில்லியன் பேரெழுச்சி எனும் இணையவெளி பக்கத்தை உருவாக்கினார்.[55]
செப்டம்பர் 2012 ஜிம்மி சாவைல் பாலியல் தாக்குதல் முறைகேடு கண்டுபிடிப்பு.[56]
30 அக்தோபர் 2012 சாலிசா குவார்ட்டர் இடுப்பிடி பாலியல் எனும் சொல்லை உருவாக்கினார்.[57]
16 திசம்பர் 2012 2012 ஆம் ஆண்டைய தில்லி குழுப் பாலியல் வன்முறை இந்தியாவிலும் உலக அளவிலும் எதிர்ப்புகளும் பீதியும் கிளப்புகிறது.[58]
2014 பொதுவெளியில் பாலூட்டல் சமூக ஊடகப் பரப்புரை முலைப்பாலூட்டும் உரிமைக்காக வாதிடுகிறது.[59]
பிப்ரவரி 2013 காவோ யூ (புனைபெயர்), சீனாவில் பாலினப் பாகுபாட்டுக்காக வழக்கு போட்டு, 30,000 யுவான்கள் வென்று, யூரென் கல்விக்கழகத்தை மன்னிப்புகேட்க வைத்தவர்.[60]
7 மார்ச்சு 2013 அனிதா சாருகேசியான் மகளிர்-படிம எதிர்வு உத்தி காணொலி விளையாட்டை உருவாக்கி இணையவெளியில் காட்சிப்படுத்தியவர் .
திசம்பர் 2013 கிரா கோச்சிரான் நூல்: அனைத்துக் கலக மகளிர்: நான்காம் அலைப் பெண்ணிய எழுச்சி வெளியீடு.[61]
22 ஜனவரி 2014 பாரக் ஒபாமா பாலியல் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் வெள்ளை மாளிகை செயற்படை திட்ட வெளியீடு.
ஏப்பிரல் 2014 இரசிதா மஞ்சு , பன்னாட்டவை பாலியல் வன்முறை சிறப்பு அறிக்கையாளர், ஐக்கிய அரசு சிறுவர் பாலியல் வக்கரிப்பை கண்டித்தல்".
24 மே 2014 2014 ஆம் ஆம் ஆண்டைய இசுலா விசுட்டாக் கொலைகள் எதிர்ப்பு முகமாக, ஆம் அனைவரும் பெண்கள் எனும் இணையவெளிக் கீச்சகவழி முழக்க எழுச்சி தொடங்கப்படுகிறது.[62]
ஆகத்து 2014 காமர்கேட் முரண்நிலை, மகளிர் காணொலி விளையாட்டு உருவாக்கும்களப் பாலியல் தாக்குதல் சார்ந்த விவாதத்தை எழுப்பி, பரவலான கண்டனத்தையும் பெறுகிறது.
14 செப்டம்பர் 2014 மியாமி பல்கலைக்கழக ஒரு பெண் பட்டாதாரி காலி மெக்ஜின்னின் பாலியல் கொடுமையை அறிவித்து, கல்வி வளாகத்தில் உள்ள பாலியல் தாக்குதல் பற்றிய விவாதத் தீப்பொறியைப் பற்றவைக்கிறார்.
20 செப்டம்பர் 2014 எம்மா வாட்சன் பன்னாட்டவையில் அவன் அல்லது அவள் இணையதளத்தை அறிமுகப்படுத்தல்.
செப்டம்பர் 2014 எம்மா சுகோவிசுச், வளாகப் பாலியல் வன்முறையை எதிர்த்து விளக்க, மிதியடி சுமப்பு நிகழ்த்தல்(எடையை சுமந்து பாருங்கள்) இணையவெளியைத் தொடங்குதல் .
27 அக்தோபர் 2014 நியூயார்க் நகரில் தனிப்பெண்ணாக 10 மணிநேர நடை காணொலி வெளியிடல்.
Nov 2014 முதல் பெண் ஒருவர், பில் காசுபியின் பாலியல் தாக்குதல் நிகழ்ச்சிகளைப் பற்றி பொதுவெளியில் பேசுதல்.[63]
அக்தோபர் 2014 செருமானிய இதழான பைல்டு மகளிரைக் காட்சிப்பொருளாக்குவதை எதிர்த்து கிறித்தினா உலுன்சு, பைல்டு பாலியலை நிறுத்து, இணையவெளி முழக்கத்தைத் தொடங்கல்.
31 அக்தோபர் 2014 கனடா, ஜியான் கோமேழ்சின் பாலியல் தாக்குதல் தாக்கிகீதுகள் தொடர்பாக, வன்முறைக்குள்ளானேன்; ஆனால் அறிவிக்கவில்லை எனும் முழக்கம் ஒரு மில்லியன் முறை கீச்சக இணைய வெளியில் முழங்கப்படல் .[64]
திசம்பர் 2014 குழுப் பாலியல் வன்முறைக்கு உள்ளான இந்திய இளம்பெண் பற்றிய பிரியா சக்தியின் பகடி நகைச்சுவை நூல்.
23 திசம்பர் 2014 டைம் இதழ் 2014 ஆம் ஆண்டை " மாந்தரின விடியலின் முதல் சிறந்த மகளிர் ஆண்டாக" எழுத்துவழி அறிவித்தல்.[65]
22 செப்டம்பர் 2015 காவல் துறையினர் குறுக்கீடற்ற திறந்த மார்பக மகளிர்க்கு உதவ, "வலிமைவாய்ந்த முலைகள்" வலைப்பூ இணைய தளம் தோற்றுவிப்பு,.
1 பிப்ரவரி 2016 கனடா, டொரன்ட்டோவில் ஜியான் கோமேழ்சு வழக்கு தொடங்கல்.[63]
21 ஜனவரி 2017 டொனால்டு டிரம்ப்பு தொடங்கிவைத்த 2017 ஆம் ஆண்டு எழுச்சிப் பேரணி, மகளிர் உரிமைக்கும் எதிர்ப்புக்கும் ஆதரவு தெரிவித்தல் .[66]
5 அக்தோபர் 2017 நியூயார்க் டைம்சு இதழ், ஆர்வே வீன்சுட்டைன் பாலியல் தாக்கத் தாக்கீதுகளை முதலில் வெளியிடல்.
10 அக்தோபர் 2017 நானும் இணையவெளிப் பரப்புரை, தரனா புருக்கேயின் முழக்கத்தை முன்வைத்து 2007 இல் வீன்சுட்டைன் தாக்கீது விளைவுக்கான எதிர்வினையாக(துலங்கலாக) தொடங்குதல்[63][67]
30 அக்தோபர் 2017 குவிதோ பாவுக்கெசு வலைப்பூ தளத்தில் முதலில் 2017 வெசுட்டுமினிசுட்டர் பாலியல் கேடுகள் அம்பலப்படுத்தப்படல்.[68]
6 திசம்பர் 2017 டைம் இதழ் தன் 2017 ஆம் ஆண்டைய ஆளுமையாக, நானும் இணையவெளிப் பரப்புரை இயக்கத்தை அறிவித்தல்.[16]
1 ஜனவரி 2018 வீன்சுட்டைன் விளைவு, நானும் இணையவெளி இயக்கம் தொடர்துலங்கலாக, காலம் கனிந்தது எனும் பாலியல் வன்முறை எதிர்ப்பு இயக்கத்தை ஆலிவுடு பேராளுமைகள் தோற்றுவித்தல்.[69]

உய்யநிலைத் திறனாய்வு[தொகு]

நான்காம் அலைப் பெண்ணியத்துக்கான விமர்சனம் இது தொழிநுட்ப மேட்டிமைத்தனத்தைச் சார்ந்துள்ளது என்பதாகும். இணையவெளி அணுகவியலாத மகளிரை இது சென்றடைவது அரிதினும் அரிது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Grady, Constance (20 July 2018). "The waves of feminism, and why people keep fighting over them, explained". Vox.com. Archived from the original on 5 April 2019. பார்க்கப்பட்ட நாள் 25 February 2019.
  2. 2.0 2.1 Munro, Ealasaid (5 September 2013). "Feminism: A fourth wave?". The Political Studies Association. Archived from the original on 2 December 2018. பார்க்கப்பட்ட நாள் 1 December 2018. / Munro, Ealasaid (September 2013). "Feminism: A Fourth Wave?". Political Insight 4 (2): 22–25. doi:10.1111/2041-9066.12021. 
  3. 3.0 3.1 3.2 Phillips, Ruth; Cree, Viviene E. (21 February 2014). "What does the 'Fourth Wave' Mean for Teaching Feminism in Twenty-First Century Social Work?". Social Work Education 33 (7): 930–43. doi:10.1080/02615479.2014.885007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0261-5479. https://www.pure.ed.ac.uk/ws/files/15148557/Phillips_Cree_Fourth_Wave_for_Open_Access.pdf. 
  4. Chamberlain, Prudence (2017), "Introduction", The Feminist Fourth Wave, Springer International Publishing, pp. 1–19, doi:10.1007/978-3-319-53682-8_1, ISBN 9783319536811
  5. Schuller, Kyla (2018). The Biopolitics of Feeling: Race, Sex, and Science in the Nineteenth Century. Duke University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780822372356. இணையக் கணினி நூலக மையம்:1050035724. 
  6. Baer, Hester (2016-01-02). "Redoing feminism: digital activism, body politics, and neoliberalism" (in en). Feminist Media Studies 16 (1): 17–34. doi:10.1080/14680777.2015.1093070. பன்னாட்டுத் தர தொடர் எண்:1468-0777. 
  7. 7.0 7.1 7.2 Evans, Elizabeth; Chamberlain, Prudence (July 2015). "Critical Waves: Exploring Feminist Identity, Discourse and Praxis in Western Feminism". Social Movement Studies 14 (4): 396–409. doi:10.1080/14742837.2014.964199. https://research-information.bristol.ac.uk/files/50807653/critical_waves_final_revisions.pdf. 
  8. 8.0 8.1 8.2 8.3 Kira Cochrane (10 December 2013). "The Fourth Wave of Feminism: Meet the Rebel Women". The Guardian இம் மூலத்தில் இருந்து 14 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160314123922/http://www.theguardian.com/world/2013/dec/10/fourth-wave-feminism-rebel-women. 
  9. Solomon, Deborah (13 November 2009). "The Blogger and Author on the Life of Women Online". The New York Times இம் மூலத்தில் இருந்து 16 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160716184154/http://www.nytimes.com/2009/11/15/magazine/15fob-q4-t.html. 
  10. Zerbisias, Antonia (16 September 2015). "Feminism's Fourth Wave is the Shitlist". NOW Toronto. Archived from the original on 16 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 April 2016.
  11. Parry, Diana C. (2018), "Fourth wave feminism", Feminisms in Leisure Studies, Routledge, pp. 1–12, doi:10.4324/9781315108476-1, ISBN 9781315108476
  12. For Cosby, Ghomeshi, #MeToo and fourth wave, see Matheson, Kelsey (17 October 2017). "You Said #MeToo. Now What Are We Going To Do About It?" பரணிடப்பட்டது 17 நவம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், The Huffington Post.
  13. Dixon, Kitsy (August 2014). "Feminist Online Identity: Analyzing the Presence of Hashtag Feminism". Journal of Arts and Humanities 3 (7): 34–40. https://theartsjournal.org/index.php/site/article/view/509. பார்த்த நாள்: 2 April 2019. 
  14. 14.0 14.1 14.2 Looft, Ruxandra (2017-11-02). "#girlgaze: photography, fourth wave feminism, and social media advocacy". Continuum 31 (6): 892–902. doi:10.1080/10304312.2017.1370539. பன்னாட்டுத் தர தொடர் எண்:1030-4312. 
  15. Robinson, Cheryl (April 17, 2018). "How #GirlGaze Founder Is Inspiring The Next Generation of Photographers". Forbes. Archived from the original on 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் March 25, 2019.
  16. 16.0 16.1 Zacharek, Stephanie; Dockterman Eliana; and Sweetland Edwards, Haley (6 December 2017). "The Silence Breakers" பரணிடப்பட்டது 6 திசம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், Time magazine.
  17. Redden, Molly, and agencies (6 December 2017). "#MeToo movement named Time magazine's Person of the Year" பரணிடப்பட்டது 7 திசம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், The Guardian.
  18. For page three, see Thorpe, Vanessa (27 July 2013). "What now for Britain's new-wave feminists – after page 3 and £10 notes?" பரணிடப்பட்டது 11 நவம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், The Guardian.
  19. 19.0 19.1 19.2 Maclaran, Pauline (2015-10-13). "Feminism's fourth wave: a research agenda for marketing and consumer research". Journal of Marketing Management 31 (15–16): 1732–1738. doi:10.1080/0267257X.2015.1076497. பன்னாட்டுத் தர தொடர் எண்:0267-257X. 
  20. "La cuarta ola feminista ha llegado y esto es lo que debes saber". Código Nuevo (in ஸ்பானிஷ்). 2018-03-05. Archived from the original on 25 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
  21. Vega Ugalde, Silvia (2013). "Comentarios al Dossier: "Nuevas voces feministas en América Latina: ¿continuidades, rupturas, resistencias?"" (in en). Iconos. Revista de ciencias sociales (46): 103–109. பன்னாட்டுத் தர தொடர் எண்:1390-1249. https://biblat.unam.mx/pt/revista/iconos-revista-de-ciencias-sociales/articulo/comentarios-al-dossier-nuevas-voces-feministas-en-america-latina-continuidades-rupturas-resistencias. பார்த்த நாள்: 26 April 2019. 
  22. Abrahams, Jessica (14 August 2017). "Everything you wanted to know about fourth wave feminism—but were afraid to ask". Prospect இம் மூலத்தில் இருந்து 17 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171117132924/https://www.prospectmagazine.co.uk/magazine/everything-wanted-know-fourth-wave-feminism. 
  23. Martin, Courtney E.; Valenti, Vanessa (15 April 2013). "#FemFuture: Online Revolution" (PDF). Barnard Centre for Research on Women. Archived (PDF) from the original on 26 May 2016. பார்க்கப்பட்ட நாள் 8 November 2015.
  24. Chamberlain 2017, ப. 115.
  25. Bates 2014.
  26. "Letter from the Editor". The Vagenda. 19 January 2012. Archived from the original on 27 May 2016. பார்க்கப்பட்ட நாள் 3 June 2016.
  27. 27.0 27.1 Decca Aitkenhead (24 January 2014). "Laura Bates Interview: 'Two Years Ago, I Didn't Know What Feminism Meant'". The Guardian இம் மூலத்தில் இருந்து 7 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170207012945/https://www.theguardian.com/world/2014/jan/24/laura-bates-interview-everyday-sexism. 
  28. 28.0 28.1 van der Gaag, Nikki (2014). Feminism and Men. London: Zed Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781780329130. இணையக் கணினி நூலக மையம்:886112252. 
  29. Mcintosh, Peggy (July 1989). "White Privilege: Unpacking the Invisible Knapsack". Peace and Freedom Magazine இம் மூலத்தில் இருந்து 2 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190402042758/https://files.eric.ed.gov/fulltext/ED355141.pdf?utm#page=43. 
  30. Case, Kim A. (2012). Systems of privilege: intersections, awareness, and applications. Wiley-Blackwell. இணையக் கணினி நூலக மையம்:799010636. 
  31. Eliot, Lise (2010). Pink brain, blue brain: how small differences grow into troublesome gaps—and what we can do about it. Boston: Mariner Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780547391557. இணையக் கணினி நூலக மையம்:837684360. 
  32. Ganesh, Sarlaksha; Ganesh, Mangadu Paramasivam (2014-05-27). "Effects of masculinity–femininity on quality of work life". Gender in Management 29 (4): 229–253. doi:10.1108/gm-07-2013-0085. பன்னாட்டுத் தர தொடர் எண்:1754-2413. 
  33. "Gender discrimination more common for women in mostly male workplaces". Pew Research Center. Archived from the original on 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-02.
  34. Maclaran, Pauline (2015). "Feminism's fourth wave: a research agenda for marketing and consumer research". Journal of Marketing Management 31 (15–16): 1732–1738. doi:10.1080/0267257X.2015.1076497. 
  35. Bucher, Jacob; Manasse, Michelle; Milton, Jeffrey (2015). "Soliciting strain: examining both sides of street prostitution through General Strain Theory". Journal of Crime and Justice 38 (4): 435–453. doi:10.1080/0735648X.2014.949823. 
  36. Bucher, Jacob (2014). "'But He Can't Be Gay': The Relationship between Masculinity and Homophobia in Father–Son Relationships". Journal of Men's Studies 22 (3): 222–237. doi:10.3149/jms.2203.222. 
  37. Vickery, Amanda Elizabeth (2018). "After the March, What? Rethinking How We Teach the Feminist Movement". Social Studies Research & Practice 13 (3): 402–411. doi:10.1108/SSRP-05-2018-0020. 
  38. Vickery, Amanda Elizabeth (2018). "After the March, What? Rethinking How We Teach the Feminist Movement". Social Studies Research & Practice 13 (3): 402–411. doi:10.1108/SSRP-05-2018-0020. 
  39. 39.0 39.1 "Après #MoiAussi, #EtMaintenant". HuffPost Québec (in பிரெஞ்சு). 2018-01-14. Archived from the original on 25 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.
  40. Phillips, Tom (2018-01-09). "China's women break silence on harassment as #MeToo becomes #WoYeShi". The Guardian இம் மூலத்தில் இருந்து 9 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180109041631/https://www.theguardian.com/world/2018/jan/09/china-women-break-silence-harassment-metoo-woyeshi. 
  41. Tarnopolsky, Noga; Etehad, Melissa (October 18, 2017). "A global primal scream: #MeToo (#YoTambien #QuellaVoltaChe #גםאנחנו أنا_كمان#)". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து 26 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190326005204/https://www.latimes.com/world/middleeast/la-fg-global-me-too-20171018-story.html. 
  42. 42.0 42.1 42.2 42.3 42.4 "#MeToo Campaign Brings the Rise of 'Fourth-Wave' Feminism in India". The Wire. Archived from the original on 25 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.
  43. 43.0 43.1 Powell, Catherine (2017-12-15). "How #MeToo has spread like wildfire around the world". Newsweek இம் மூலத்தில் இருந்து 25 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190325180310/https://www.newsweek.com/how-metoo-has-spread-wildfire-around-world-749171. 
  44. Khan, Manal Faheem (21 July 2018). "Police detain protesters at Ali Zafar's Teefa in Trouble screening in Nueplex Karachi". cutacut. Archived from the original on 25 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.
  45. "How President Duterte Sparked an Uprising of Filipina Women". Time. 2019-07-23. Archived from the original on 25 March 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.
  46. Dean, Jonathan; Aune, Kristin (2015-07-04). "Feminism Resurgent? Mapping Contemporary Feminist Activisms in Europe". Social Movement Studies 14 (4): 375–395. doi:10.1080/14742837.2015.1077112. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-2837. 
  47. "#MeToo Movement in Canada". The Canadian Encyclopedia. Archived from the original on 1 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-01.
  48. Kurian, Alka. "#StopThisShame, #GirlsAtDhaba, #WhyLoiter and more: women's fight against sexual harassment didn't start with #MeToo". The Conversation (in ஆங்கிலம்). Archived from the original on 21 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21.
  49. "Mulheres lideram multidão contra Bolsonaro em São Paulo, Rio e Recife" (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). El País. September 30, 2018.
  50. "15 imagens que resumem os atos a favor e contra Jair Bolsonaro pelo Brasil" (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). Exame. September 30, 2018. Archived from the original on மார்ச் 28, 2019. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 29, 2023. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  51. "Um protesto histórico, menos na tevê" (in pt-BR). Revista Piauí. http://piaui.folha.uol.com.br/um-protesto-historico-menos-na-teve/. 
  52. "Mulheres quebram o jejum das ruas no Brasil com manifestações contra Bolsonaro" (in pt-BR). El País. 2018-09-30. https://brasil.elpais.com/brasil/2018/09/30/politica/1538270819_523141.html. 
  53. Sousa, Silvana (28 September 2018). "#EleNão: Madonna adere à campanha contra Bolsonaro e pede o fim do fascismo" (in pt). Correio Brasiliense. https://www.correiobraziliense.com.br/app/noticia/politica/2018/09/28/interna_politica,708917/madonna-adere-a-campanha-elenao-e-pede-pelo-fim-do-fascismo.shtml. 
  54. Thorpe, Vanessa (27 July 2013). "What now for Britain's new-wave feminists – after page 3 and £10 notes?". The Guardian. Archived from the original on 11 November 2017. பார்க்கப்பட்ட நாள் 18 November 2017.
  55. "One Billion Rising: Eve Ensler, Activists Worldwide Plan Global Strike to End Violence Against Women". Democracy Now! (in ஆங்கிலம்). Archived from the original on 21 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21.
  56. Chamberlain 2017, ப. 114–115.
  57. Quart, Alissa (30 October 2012). "The Age of Hipster Sexism". New York Magazine. Archived from the original on 2 November 2012.
  58. Harris, Gardiner (2013-01-03). "5 in New Delhi Rape Case Face Murder Charges" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து 21 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190421142926/https://www.nytimes.com/2013/01/04/world/asia/murder-charges-filed-against-5-men-in-india-gang-rape.html. 
  59. Esco, Lina; ContributorDirector; Nipple', 'Free the (2013-12-09). "Why I Made a Film Called Free the Nipple and Why I'm Being Censored in America". HuffPost (in ஆங்கிலம்). Archived from the original on 21 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21. {{cite web}}: |last2= has generic name (help)
  60. FlorCruz, Michelle (3 February 2014). "Chinese Woman Wins Settlement in China's First Ever Gender Discrimination Lawsuit". International Business Times இம் மூலத்தில் இருந்து 18 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171018070844/http://www.ibtimes.com/chinese-woman-wins-settlement-chinas-first-ever-gender-discrimination-lawsuit-1553018. 
  61. Kira Cochrane (2013). All the Rebel Women: The Rise of the Fourth Wave of Feminism. London, UK: Guardian Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781783560363. https://books.google.co.uk/books?id=UlabBAAAQBAJ. பார்த்த நாள்: 21 April 2018. 
  62. Grinberg, Emanuella (27 May 2014). "Why #YesAllWomen took off on Twitter" பரணிடப்பட்டது 28 மே 2014 at the வந்தவழி இயந்திரம், CNN.
  63. 63.0 63.1 63.2 Matheson, Kelsey (17 October 2017). "You Said #MeToo. Now What Are We Going To Do About It?" பரணிடப்பட்டது 17 நவம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், The Huffington Post.
  64. Gallant, Jacques (31 October 2014). "Twitter conversation about unreported rape goes global" பரணிடப்பட்டது 1 திசம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், Toronto Star.
  65. Alter, Charlotte (23 December 2014). "This May Have Been the Best Year for Women Since the Dawn of Time" பரணிடப்பட்டது 26 திசம்பர் 2017 at the வந்தவழி இயந்திரம், Time magazine.
  66. "Women's March Floods Washington, Sparking Rallies Worldwide". NPR.org இம் மூலத்தில் இருந்து 5 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170205050929/http://www.npr.org/sections/thetwo-way/2017/01/21/510932265/demonstrators-gather-early-to-kick-off-womens-march-on-washington. 
  67. Garcia, Sandra E. (20 October 2017). "The Woman Who Created #MeToo Long Before Hashtags". The New York Times. Archived from the original on 6 December 2017. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  68. "Tory Aides' Spreadsheet Names 36 Sex Pest MPs -". Guido Fawkes (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-10-29. Archived from the original on 4 November 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-04-21.
  69. "Reese Witherspoon, Taylor Swift, Jennifer Aniston: See Who's Given $500k, More to Fight Harassment". People Magazine. 2 January 2018. Archived from the original on 22 January 2018. பார்க்கப்பட்ட நாள் 22 January 2018.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]