சிமோன் ட பொவார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிமோன் ட பொவார்
மேற்கத்திய மெய்யியல்
20ஆம்-நூற்றாண்டு மெய்யியல்
Simone De Beuvoir.jpg
சிமோன் டி பொவார்
முழுப் பெயர் சிமோன் லூசி ஏர்னஸ்டைன் மேரி பேர்ட்ரண்ட் டி பொவார்
பிறப்பு ஜனவரி 9 1908
பாரிஸ், பிரான்ஸ்
இறப்பு ஏப்ரல் 14 1986 (வயது 78)
பாரிஸ், பிரான்ஸ்
சிந்தனை
மரபு(கள்)
இருத்தலியல்
பெண்ணியம்
முக்கிய
ஆர்வங்கள்
அரசியல், பெண்ணியம், நெறிமுறை
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
ethics of ambiguity, feminist ethics, existential feminism

சிமோன் ட பொவார் (Simone de Beauvoir, ஜனவரி 9, 1908ஏப்ரல் 14, 1986) ஒரு பிரெஞ்சுப் பெண் எழுத்தாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் புதினங்கள்; மெய்யியல், அரசியல், சமூகப் பிரச்சினைகள் பற்றிய தனிக்கட்டுரைகள், தனி நபர் வரலாறுகள், தன்வரலாறு என்னும் துறைகளில் எழுதியுள்ளார். இப்பொழுது இவர் அவள் தங்குவதற்காக வந்தாள் (She Came to Stay), மாண்டரின்கள் (The Mandarins) போன்ற இவரது மீவியற்பியல் புதினங்களுக்காகவும்; பெண்கள் மீதான அடக்குமுறை, தற்காலப் பெண்ணிய அடிப்படைகள் என்பன குறித்த இரண்டாம் பால் (The Second Sex) என்னும் விரிவான பகுப்பாய்வு நூலுக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார்.

இளமைக்காலம்[தொகு]

சிமோன் லூசி ஏர்னஸ்டைன் மேரி பேர்ட்ரண்ட் டி பொவார் என்னும் இயற்பெயர் கொண்ட சிமோன் டி பொவார், ஒரு சட்ட வல்லுனரும், நடிகருமான ஜார்ஜ் டி பொவார் என்பவருக்கும், பிராங்கோய்ஸ் பிராசியர் என்னும் இளம் பெண்ணுக்கும் மகளாகப் பாரிஸ் நகரில் பிறந்தார். இவர் நல்ல பாடசாலைகளில் கல்வி கற்றார். முதலாம் உலகப் போருக்குப் பின்னர், மியூஸ் வங்கியின் தலவராக இருந்த இவரது தாய்வழிப் பாட்டனான குஸ்தாவ் பிரேசியர் வங்குரோத்து ஆனார். இதனால் முழுக் குடும்பமும் பிறரின் பழிப்புக்கு ஆளானதுடன் வறுமை நிலைக்கும் தள்ளப்பட்டது. இவர்கள் ஒரு சிறிய வீட்டுக்குக் குடிபுக வேண்டியதாயிற்று.

இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றிருந்த சிமோனின் தந்தையார் ஆண்பிள்ளைகளை விரும்பியிருந்தார். எனினும், சிமோன் "ஆண்பிள்ளைகளுக்கு உரிய மூளை"யைப் பெற்றிருப்பதாகக் கூறிவந்தார். இள வயதிலிருந்தே சிமோன் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்தார். ஜார்ஜ் தனக்கு நாடகம், இலக்கியம் போன்றவற்றில் இருந்த ஆர்வத்தைத் தனது மகளிடத்திலும் உருவாக்கினார். கல்வியறிவின் மூலமே தனது மகள்கள் வறுமையில் இருந்து மீள முடியும் என அவர் நம்பினார்.

15 ஆவது வயதிலேயே தான் ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும் என சிமோன் முடிவெடுத்துவிட்டார். இவர் பல பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும், மெய்யியலின் பால் பெரிதும் கவரப்பட்டு, அதனைக் கற்பதற்காக பாரிஸ் பல்கலைக்கழகம் சென்றார். அங்கே அவர் ஜான் பவுல் சாட்டர் உட்படப் பல அறிவுத்துறை சார்ந்தோரைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிமோன்_ட_பொவார்&oldid=1616848" இருந்து மீள்விக்கப்பட்டது