பாலினம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இவ்வுலகிலுள்ள பாலினம் கொண்ட அனைத்து உயிரினங்களிலும், ஆண், பெண் எனும் இரு பால்களே உள்ளன. ஓர்பாலி உயிரினங்களில், பாலினங்களின் செயல்பாடுகள் தனித்தனி உடல்களில் உள்ளன. இருபாலி உயிரினங்களில், இரு பாலினங்களின் செயல்பாடுகளும் ஒரே உடம்பில் உள்ளது.

உயிர்களின் பாலினம் என்பது, அவற்றின் தோற்றத்தைப் பொறுத்தோ, முட்டையிடுதல் அல்லது குட்டி போடுதலை வைத்தோ வரையறுக்க இயலாது. எடுத்துக்காட்டாக, கடல் குதிரைகளில், ஆண் இனமே முட்டையிடும். மாறாக, பாலினம் என்பது, அவ்வுயிரினத்தின் புணரி அணுக்களின் பண்பினைப் பொருத்தே அமையும்.

ஆண் புணரி அணுக்கள், சிறியவையாகவும், எண்ணிக்கையில் மிகுந்தும் இருக்கும். பெண் புணரி அணுக்கள் பெரியவையாகவும், எண்ணிக்கையில் குறைந்தும் இருக்கும். மற்றும், பெண் புணரி அணுக்கள் கருவிற்கான ஊட்டச்சத்து கொண்டிருக்கும். ஆண் புணரி அணுக்க்ளில் கருவிற்கான ஊட்டச்சத்து இராது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாலினம்&oldid=945198" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்