த டார்க் நைட்
| The Dark Knight த டார்க் நைட் |
|
| இயக்குனர் | கிரிஸ்டஃபர் நோலன் |
|---|---|
| தயாரிப்பாளர் | கிரிஸ்டஃபர் நோலன் சார்ல்ஸ் ரோவென் எமா தாமஸ் |
| கதை | Screenplay: கிரிஸ்டஃபர் நோலன் ஜானதன் நோலன் கதை: டேவிட் எஸ். கோயர் கிரிஸ்டஃபர் நோலன் பாத்திரங்கள்: பாப் கேன் பில் ஃபிங்கர் ஜெரி ராபின்சன் |
| நடிப்பு | கிரிஸ்டியன் பேல் மைக்கல் கேன் ஹீத் லெட்ஜர் ஏரன் எக்ஹார்ட் கேரி ஓல்ட்மன் மாகி ஜிலன்ஹால் மார்கன் ஃபிரீமன் |
| இசையமைப்பு | ஹான்ஸ் சிமர் ஜேம்ஸ் நியூட்டன் ஹவர்ட் |
| ஒளிப்பதிவு | வாலி ஃபிஸ்டர் |
| படத்தொகுப்பு | லீ ஸ்மித் |
| விநியோகம் | வார்னர் பிரதர்ஸ் |
| வெளியீடு | ஆஸ்திரேலியா: ஜூலை 16 2008 வட அமெரிக்கா: ஜூலை 18 2008 ஐக்கிய இராச்சியம்: ஜூலை 24 2008 |
| கால நீளம் | 152 நிமிடங்கள் |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $180 மில்லியன்[1] |
| மொத்த வருவாய் | அமெரிக்க உள்நாட்டு: $342,684,300[2] வெளிநாட்டு: $128,300,000[3] பல நாடுகளிலும்: $470,984,300 |
| முந்தையது | பாட்மான் பிகின்ஸ் |
த டார்க் நைட் (The Dark Knight) 2008இல் வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பிரபல வரைபட நாயகன் பாட்மானின் திரைப்படத் தழுவலாகும். 2005இல் வெளிவந்த பாட்மான் பிகின்ஸிலிருந்து இத்திரைப்படம் தொடரும்.
பொருளடக்கம் |
[தொகு] முக்கிய நடிகர்களும் அவர்களின் பாத்திரங்களும்
- கிரிஸ்டியன் பேல்: பாட்மான்/புரூஸ் வெய்ன், கோடீஸ்வரர், கதையின் நாயகர். காத்தம் (Gotham) நகரின் குற்றவாளிகளுக்கு எதிராக சண்டை போடுகிறார். காத்தம் மக்களுக்கு பாட்மானும் புரூஸ் வெய்னும் ஒன்று என்று தெரியாது. இத்திரைப்படத்தின் முன்வந்த பாட்மான் பிகின்ஸ் திரைப்படத்திலும் கிரிஸ்டியன் பேல் பாட்மான் பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- ஹீத் லெட்ஜர்: ஜோக்கர், குற்றவாளி, திரைப்படத்தின் முக்கிய கெட்டவன். முகத்தில் கோமாளி வேடம் போட்டு காத்தம் நகரில் குற்றங்கள் செய்கிறார்.
- ஏரன் எக்ஹார்ட்: ஹார்வி டென்ட்/டூ-ஃபேஸ், மாவட்ட வழக்கறிஞர் (District Attorney). காத்தமின் குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுகிறார்.
- மார்கன் ஃபிரீமன்: லூசியஸ் ஃபாக்ஸ், புரூஸ் வெய்னின் "வெய்ன் எண்டர்பிரைஸஸ்" நிறுவனத்தின் தொழிலதிபர். பாட்மான் பயன்படுகிற பாட்மொபீல் (Batmobile) வண்டி, ஆயுதங்கள், கருவிகளை தயார்செய்கிறார்.
- மேகி ஜிலன்ஹால்: ரேச்சல் டாஸ், துணை மாவட்ட வழக்கறிஞர். இளமையில் புரூஸ் வெய்னின் தோழி. பாட்மான் பிகின்ஸ் திரைப்படத்தில் கேட்டி ஹோம்ஸ் இந்த பாத்திரத்தில் நடித்துள்ளார்.
- கேரி ஓல்ட்மன்: ஜேம்ஸ் கோர்டன், காவல்துறை ஆணையர். காத்தம் நகரில் ஊழல் செய்யாத காவல்துறையினர்களில் ஒன்றாவார்.
- மைக்கல் கேன்: ஆல்ஃபிரெட், புரூஸ் வெய்னின் பரிசாரகர்.
[தொகு] வெளியீடும் வசூலும்
ஜூலை 18, 2008 இத்திரைப்படம் அமெரிக்காவில் வெளிவந்தது; ஜூலை 24 ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது. முதலாம் நாளில் $ 67.85 மில்லியன் வசூல் பெற்று ஸ்பைடர் மேன் திரைப்படமால் பெற்ற ஒரு நாளில் அதிக வசூல் சாதனையை தாண்டியுள்ளது. வரலாற்றில் மிக விரைவாக $300 மில்லியன் வசூல் பெறும் திரைப்படம் ஆகும்.
[தொகு] விமர்சனங்கள்
திரைப்பட நிபுணர்களும் இத்திரைப்படத்தை பாராட்டுகின்றனர்; 246 விமர்சனங்களில் 94% இத்திரைப்படத்தை பாராட்டுகின்றன என்று ராட்டென் டுமேட்டோஸ் இணையத்தளம் கூறியுள்ளது. இணையத் திரைப்படத் தரவுத்தளத்தின் பயனர்களால் வாக்கு செய்து வரலாற்றில் ஒன்றாம் மிகச்சிறந்த திரைப்படம் என்று சில நாளாக இருந்தது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ David M. Halbfinger."A Director Confronts Darkness and Death", The New York Times, 'nytimes.com', 2008-03-09. 2008-03-08 அன்று தகவல் பெறப்பட்டது.
- ↑ http://www.boxofficemojo.com/movies/?page=main&id=darkknight.htm, Box Office Mojo
- ↑ McNary, Dave."'Dark Knight' reigns overseas", Variety, Reed Business Information, 2008-07-27. 2008-07-31 அன்று தகவல் பெறப்பட்டது.