சூப்பர் மேன் (2013 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சூப்பர் மேன் (மேன் ஆஃப் ஸ்டீல்)
Superman, bearing his traditional red and blue costume, is shown flying towards the viewer, with the city Metropolis below. The film's title, production credits, rating and release date is written underneath.
திற்றிகால் ரிலீஸ் போஸ்டர்
இயக்குனர் சக் ச்னைதர்
தயாரிப்பாளர் கிறிஸ்டோபர் நோலன்
Charles Roven
Emma Thomas
Deborah Snyder
நடிப்பு
இசையமைப்பு Hans Zimmer
ஒளிப்பதிவு Amir Mokri
திரைக்கதை David S. Goyer
கால நீளம் 143 நிமிடங்கள்
நாடு அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம்
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $225 மில்லியன்
மொத்த வருவாய் $662,845,518
கதை மூலம் Superman -
Jerry Siegel
Joe Shuster


சூப்பர் மேன் (மேன் ஒப் ஸ்டீல்) இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க சூப்பர் ஹீரோ திரைப்படம் ஆகும். சூப்பர் மேன் திரைப்படங்களின் வரிசையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் மேன் (மேன் ஆஃப் ஸ்டீல்) எனும் பெயரில் இப்படம் வெளியானது.. உலகம் முழுவதும் 30000 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜேக் ஸ்னைடர் அவார். இத்திரைப்படம் 1276 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.இத்திரைபடத்தின் 3டி பதிப்பு 2013,ஜூன் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 180 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. இயக்குனர் இராம.நாராயணனி, ஸ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை வெளிவிட்டது.

கதை சுருக்கம்[தொகு]

உலகத்தைப் போலவே கிப்ரான் கிரகத்திலும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களை விட புத்திசாலிகள். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அவர்கள் தங்களை சுற்றியுள்ள கிரகங்களை அடிமைப்படுத்துகிறார்கள். செயற்கையாக இனப்பெருக்கம் செய்பவர்களாக இருக்கிறார்கள். முதன் முறையாக அந்த கிரகத்தின் முக்கிய பதவியில் இருப்பவர் இயற்கையாக ஒரு வாரிசை உருவாக்குகிறார்.

அந்த கிரகம் அழியத் தொடங்கும்போது தன் குழந்தையை, பறக்கும் கப்பலில் வைத்து பூமிக்கு அனுப்புகிறார். இங்கு வரும் குழந்தை ஒரு விவசாயி வீட்டில் வளர்கிறது. அபூர்வ சக்திகள் நிறைந்த அக் குழந்தையை தன் சக்தியை வெளிப்படுத்தாமலேயே வளர்க்கிறார். அபார சக்தி மிக்கவன், வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்தால் உலகம் அவனை ஏற்றுக் கொள்ளாது என்று நினைக்கிறார். கிப்ரான் கிரகத் தளபதி, அந்த கிரக மக்களை வேறுகிரகத்தில் குடியமர்த்த திட்டமிட்டு சூப்பர்மேனைத் தேடி பூமிக்கு வருகிறார்.

நடிப்பு[தொகு]

ஹென்றி கேவிஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமெரிக்க நடிகையும், பாடகியுமான ஏமி ஆடம்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]