துப்பறிவாளன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துப்பறிவாளன் (Thupparivalan) என்பது 2017 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை மிஷ்கின் இயக்கியிருந்தார். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனம் இதனைத் தயாரித்திருந்தது. விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா ஜெரெமையா ,வினய், பாக்யராஜ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சிம்ரன் கெளரவத்தோற்றத்தில் நடித்துள்ளார். 2016 மார்ச்சில் துவங்கப்பட்ட இந்தத் திரைப்படம் செப்டம்பர் 24, 2017 இல் வெளியானது. இந்தக் கதையின் நாயகன் கதாப்பாத்திரமானது ஆர்தர் கொனன் டொயிலின் புதினமான செர்லக் ஓம்சு கதையின்

துப்பறியும் கதாப்பாத்திரத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. படத்தின் துவக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையை அரோள் கரோலி இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வணிக ரீதியாகவும் , விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இது தெலுங்கு மொழியில் டிடெக்டிவ் எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.[1].[1]

கதைச் சுருக்கம்[தொகு]

கணியன் பூங்குன்றனார்( விஷால்) ஓர் நேர்மையான தனியார் துப்பறியும் நிறுவனத்தை நடத்திவருகிறார். அவருடைய உதவியாளராக மனோகரன் ( பிரசன்னா) பணிபுரிகிறார். சிறுவன் ஒருவன் தனது நாயைக் கொன்றவனைக் கண்டுபிடித்துத் தருமாறு இவர்களை தான் சேமித்து வைத்த பணத்துடன் அனுகுகிறான். மேலும் தனது நாயின் வயிற்றில் இருந்ததாக ஒரு தோட்டாவை (எறியம்) இவர்களிடம் கொடுக்கிறான். அதை வைத்து இந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். தொடர் விசாரணையின் இறுதியில் ஜான் ரிச்சர்ட்சன் தான் இந்த கொலைக்குக் காரணம் என்பதைக் கண்டறிகிறார். காவல்துறையும் பூங்குன்றனின் உதவியை நாடுகின்றனர். ஜான் மற்றும் அவனது கூட்டாளிகளைக் கைது செய்ய காவல்துறையுடன், பூங்குன்றன் பிச்சாவரம் சென்று அவர்களைக் கண்டுபிடிக்கிறார்

கதை மாந்தர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

பெப்ரவரி, 2016 இல் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்கான படவேலைகளை மிஷ்கின் துவங்கினார். விஷால், துப்பறிவாளராக முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.மார்ச் 10, 2016 இல் படத்துவக்க விழா நடைபெற்றது. விஷால் சண்டக்கோழி 2 படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆனது. எனவே மிஷ்கின் துணை நடிகர்களுக்கான தேர்வில் ஈடுபட்டார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ரகுல் பிரீத்திசிங் இதில் நடிகையாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். வினய் மற்றும் பிரசன்னா ஆகியோர் துணைக்கதாப்பாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள். பாக்யராஜ் முக்கிய எதிராளி கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

செப்டம்பர் 26, 2016 இல் இந்தத் திரைப்படத்தின் விஷால் மற்றும் பிரசன்னா பங்குபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. ஸ்பைடர் திரைப்படத்தில் ரகுல் பிரீத்சிங் நடித்துக் கொண்டிருந்ததால் தேதி குளறுபடியால் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். பின் அக்சரா ஹாசன் ஒரு முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் விவேகம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் இவருக்குப் பதிலாக ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்தார்.[2][3]

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 ஆம் ஆண்டின் இறுதி முழுவதிலும் 2017 தொடக்கத்திலும் நடைபெற்றது. பத்து நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளதாக மே, 2017இல் படக்குழு தெரிவித்தது.[4] இந்தக் கதையின் விஷாலின் கதாப்பாத்திரமானது செர்லக் ஓம்சு தாக்கத்தில் உருவாக்கப்பட்டது என மிஷ்கின் தெரிவித்தார். அதேபோல் ஆர்தர் கொனன் டொயிலின் புதினத்தின் மருத்துவர் வாட்சனின் கதாப்பாத்திரத்தின் தாக்கத்தில் பிரசன்னாவின்கதாப்பாத்திரத்தினை வடிவமைத்திருந்தார் .[5][6][7] ஆகஸ்டு, 2017 இல் சண்டைக்காட்சியின் போது விஷாலுக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டது. வினய்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்பட்டது.[8].

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Detective Review {3.5/5}: This is one film you won't regret watching". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2017-12-17.
  2. "Andrea Jeremiah to be a part of Thupparivaalan". 10 December 2016. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  3. "Andrea replaces Akshara Haasan in 'Thupparivalan'". Archived from the original on 6 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Mysskins says 10 days of shoot remains for Thupparivaalan Vishal Andrea Prasanna Bhagyaraj - Tamil Movie News - IndiaGlitz". பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  5. "I am a dictator but one full of compassion: Thupparivalan director Mysskin". 30 August 2017. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  6. "Mysskin: Vishal and Prasanna's characters are inspired by Sherlock Holmes and Dr. Watson!". Archived from the original on 15 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "'Thupparivaalan' features Sherlock, Dr Watson type characters". பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.
  8. "Vishal, Vinay Injured On Sets Of 'Thupparivalan' - Silverscreen.in". 8 August 2017. பார்க்கப்பட்ட நாள் 12 September 2017.

வெளியிணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் துப்பறிவாளன் (திரைப்படம்)