தீக்கோழி முட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்ணை ஒன்றில் உள்ள கூட்டில் தீக்கோழி முட்டைகள்

தீக்கோழி (பேரினம் சுடுருத்தியோ) முட்டையானது (Ostrich egg) பறவைகளின் முட்டைகளில் மிகப்பெரியது. முட்டையின் ஓடு கொள்கலனாகவும் அலங்கார கலைப்படைப்புகளாகவும் மனிதர்களால் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்ட வரலாற்றினைக் கொண்டுள்ளது. பொதுவாக இம்முட்டைகள் உண்ணப்படுவதில்லை.

உயிரியல்[தொகு]

பெண் தீக்கோழி தனது கருவுற்ற முட்டைகளை 30 முதல் 60 செ.மீ. அளவுள்ள எளிய குழி ஒன்றில் இடுகிறது.[1] இக்குழியானது ஆண் தீக்கோழியினால் தரையில் ஏற்படுத்தப்படுகிறது. சமூகமாக வாழும் இக்கோழி இனத்தில் ஆதிக்க பெண் கோழி முதலில் தனது முட்டைகளை இடுகிறது. இவற்றை அடைகாக்கும் போது அக்குழியில் முட்டையிட வரும் பலவீனமான கோழிகளை விரட்டியடிக்கின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கூடுகளில் 20 முட்டைகள் வரை காணப்படும்.[2] பொதுவான தீக்கோழியானது இச்சமூக கூட்டில் தான் இட்ட முட்டைகளைப் பிற முட்டைகளிலிருந்து வேறுபடுத்தி அறிய முடியும்.[3] தீக்கோழி முட்டைகள் எல்லா பறவைகளின் முட்டைகளிலும் மிகப்பெரியவை.[4] ஆனால் முட்டையின் அளவினைப் வயதுவந்த பறவையின் அளவோடு ஒப்பிடும்போது சிறியவை என்றாலும் - சராசரியாக இவை 15 cm (5.9 அங்) நீளமும், 13 cm (5.1 அங்) அகலமும், 1.4 கிலோகிராம்கள் (3.1 lb) எடையும் கொண்டவை.[5] கோழியின் முட்டையின் எடையை விட இவை 20 மடங்கும் மற்றும் பெண்ணின் அளவில் 1 முதல் 4% உள்ளது. இவை பளபளப்பான நுரை நிறத்தில் உள்ளன.[6]

முட்டைகளைப் பகல் நேரத்தில் பெண் கோழியும் இரவு வேளைகளில் ஆண் கோழியும் அடைகாக்கின்றன.[6] இது கூடு கண்டுபிடிப்பதிலிருந்து தப்பிக்க இரு பாலினங்களின் நிறத்தைப் பயன்படுத்துகிறது, ஏனெனில் மந்தமான பெண் மணலுடன் கலக்கிறது, அதே நேரத்தில் கருப்பு ஆண் இரவில் கிட்டத்தட்டக் கண்டறிய முடியாதது. முட்டை அடைகாக்கும் காலம் 35 முதல் 45 வரை நாட்கள், இது மற்ற பேரினக் கோழிகளின் அடை காலத்துடன் ஒப்பிடும்போது குறைவாகும். வேட்டையாடலின் அதிக விகிதம் காரணமாகவே அடை காலம் குறைவு என நம்பப்படுகிறது.[5] பொதுவாக, ஆண் குஞ்சுகளைப் பாதுகாக்கிறது மற்றும் அவைகளுக்கு இரைத்தேட கற்றுக்கொடுக்கிறது. இருப்பினும் ஆண்களும் பெண்களும் இணைந்தே குஞ்சுகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. 10% க்கும் குறைவானவை முட்டைகளே அடைகாக்கும் 9 வார காலம் தாக்குப்பிடிக்கின்றன. எஞ்சியிருக்கும் குஞ்சுகளில், 15% மட்டுமே 1 வயது வரை வாழ்கின்றன.[7]

தீக்கோழிகள் ஆபத்தைத் தவிர்ப்பதற்காக தங்கள் தலையை மணலில் புதைக்கின்றன என்ற கட்டுக்கதையின் சாத்தியமான தோற்றம், தீக்கோழிகள் தங்கள் முட்டைகளைக் கூடுகளுக்குப் பதிலாக மணலில் உள்ள துளைகளில் புதைப்பதால் தோன்றியதாகும். மேலும் இவை அடைகாக்கும் போது இவற்றின் அலகுகளைப் பயன்படுத்திச் சுழற்றி துளை தோண்டி, முட்டைகளை வைக்கின்றன. இவை தரையில் மணலில் தலையினைச் சுழற்றுவதை, புதைப்பதாகத் தவறாகக் கருதப்படுகிறது.[8]

மனித பயன்கள்[தொகு]

எகிப்தின் தீபசில், கி.மு. 1420க்கு முந்தைய ஹரேம்ஹாப்பின் கல்லறையில், தீக்கோழி முட்டை மற்றும் பிற பெரிய முட்டைகளின் கிண்ணங்களைச் சுமந்து செல்லும் ஒரு மனிதனின் சித்தரிப்பைக் காட்டப்பட்டுள்ளது. இது கூழைக்கடாவின் பிரசாதங்களாக இருக்கலாம்.[9]

கி.மு. நான்காம் மில்லினியம் முற்பகுதியில் வட ஆபிரிக்காவிலும், மூன்றாம் மில்லினியத்திலிருந்து ஊரில் உள்ள ராயல் கல்லறையிலும் தீக்கோழி முட்டைக் கூடுகள் பயன்படுத்தப்பட்டன. பண்டைய பியூனிக் நாகரிகத்தின் முதல் மில்லினியத்திலிருந்து, கோப்பை மற்றும் கிண்ணங்களாக வர்ணம் பூசப்பட்ட தீக்கோழி முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இவை கார்த்திஜ், சார்தீனியா, சிசிலி, ஐபீரிய முவலந்தீவு மற்றும் இபிசா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தீக்கோழி முட்டைகளைக் கொள்கலன்களாகப் பயன்படுத்தும் பாரம்பரியம் (சில நேரங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ளது) சான் மக்கள் மத்தியில் பண்டைக்காலம் முதல் தற்போது வரை தொடர்கிறது.[10]

நடுக்காலத்தில், எத்தியோப்பியாவிலிருந்து தீக்கோழி முட்டைகள் செங்கடலில் உள்ள பீயிக் துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன.[11] ஐரோப்பாவில் மறுமலர்ச்சியின் போது (கி.பி 15 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை), தீக்கோழி முட்டைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.[10] அலங்கரிக்கப்பட்ட முட்டைகள் கிழக்கு மரபுவழி திருச்சபைகளின் தேவாலயங்களில் தொடர்ந்து பரவலாகக் காட்சிப்படுத்தப்பட்டன; இருப்பினும் இவற்றின் அடையாளங்கள் சர்ச்சைக்குரியவை. இவை இயேசுவின் கன்னிப் பிறப்பைக் குறிக்கலாம். ஏனெனில் 39:13–17 KJV:{{{4}}} படி தீக்கோழி அதன் முட்டைகளை மணலில் வைத்து மறந்துவிடுகிறது. எனவே இவை சூரியனால் மட்டுமே குஞ்சு பொரிக்கப்படுகின்றன. இந்த முக்கியத்துவம் பியரோ டெல்லா ஃபிரான்செஸ்கா ப்ரெரா மடோனா ஓவியத்தில் மரியாளுக்கு மேலே நிறுத்தப்பட்ட முட்டையின் பின்னால் இருக்கலாம்.[12]

2020ஆம் ஆண்டில், பிரித்தானிய அருங்காட்சியகத்தில் அலங்கரிக்கப்பட்ட தீக்கோழி முட்டைகள் பற்றிய ஆய்வுகள், இவை முன்னர் கற்பனை செய்ததை விட உற்பத்தி செய்யப்பட்டு வர்த்தகம் செய்யப்பட்ட முறைகள் மிகவும் சிக்கலானவை என்பதைக் காட்டுகின்றன. ஐசோடோப்பு பகுப்பாய்வின் மூலம் தொல்பொருள் தளம் ஒன்றிலிருந்து பெறப்படும் முட்டைகள் வெவ்வேறு இடங்களிலிருந்து தோன்றியதைக் காட்டுகிறது. வளர்க்கப்பட்ட தீக்கோழிகளின் முட்டைகளைவிடக் காடுகளில் சேகரிக்கப்பட்ட முட்டைகளே அதிகம் என்றும், இம்முட்டைகளைச் சேகரிப்பது அபாயகரமானது எனக் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.[13]

இன்று, தீக்கோழி முட்டைகள் ஒரு ஆடம்பர உணவாக உள்ளது.<[14]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Harrison, C.; Greensmith, A. (1993). Bunting, E.. ed. Birds of the World. New York, NY: Dorling Kindersley. பக். 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-56458-295-9. https://archive.org/details/birdsofworld0000harr/page/39. 
  2. Davies, S.J.J.F. (2003). "Birds I Tinamous and Ratites to Hoatzins". Grzimek's Animal Life Encyclopedia (2nd) 8. Ed. Hutchins, Michael. Farmington Hills, MI: Gale Group. 99–101. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7876-5784-0. 
  3. Bertram, B.C.R. (1979). "Ostriches recognise their own eggs and discard others". Nature 279 (5710): 233–234. doi:10.1038/279233a0. பப்மெட்:440431. Bibcode: 1979Natur.279..233B. 
  4. Hyde, Kenneth (2004). Zoology: An Inside View of Animals (3rd ). Dubuque, IA: Kendall Hunt Publishing. பக். 475. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7575-0170-8. 
  5. 5.0 5.1 Perrins, Christopher (1987). Harrison, C.J.O.. ed. Birds: Their Lifes, Their Ways, Their World. Reader's Digest Association, Inc.. பக். 168–170. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-89577-065-3. https://archive.org/details/birdstheirlifeth00came/page/168. 
  6. 6.0 6.1 Nell, Leon (2003). The Garden Route and Little Karoo. Cape Town: Struik Publishers. பக். 164. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86872-856-5. https://books.google.com/books?id=Sjatn8zolvsC&pg=PA164. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Ostrich". Firefly Encyclopedia of Birds. (2003). Buffalo, NY: Firefly Books, Ltd.. 34–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55297-777-4. 
  8. "Do ostriches really bury their heads in the sand?". Science World British Columbia. 11 December 2015. பார்க்கப்பட்ட நாள் 2 January 2017.
  9. Brothwell, Don R.; Patricia Brothwell (1997). Food in Antiquity: A Survey of the Diet of Early Peoples. Johns Hopkins University Press. பக். 54–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-5740-9. 
  10. 10.0 10.1 Gordon Campbell, ed. (2006), "Ostrich eggs", The Grove Encyclopedia of Decorative Arts, Oxford University Press.
  11. Yusuf Fadl Hasan (1967), The Arabs and the Sudan: From the Seventh to the Early Sixteenth Century (Edinburgh University Press), pp. 64–66.
  12. Tom Devonshire Jones; Linda Murray; Peter Murray, eds. (2013), "Ostrich eggs", The Oxford Dictionary of Christian Art and Architecture (2nd ed.), Oxford University Press.
  13. Addley, Esther (9 April 2020). "British Museum looks to crack mystery over decorated ostrich eggs". தி கார்டியன். https://www.theguardian.com/culture/2020/apr/09/british-museum-looks-to-crack-mystery-over-decorated-ostrich-eggs. 
  14. Roux, Michel; Martin Brigdale (2006). Eggs. Wiley. பக். 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-471-76913-2. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீக்கோழி_முட்டை&oldid=3652249" இலிருந்து மீள்விக்கப்பட்டது