சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி
Endoscopy image of multiple small ulcers in the distal duodenum in a patient with Zollinger–Ellison syndrome
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉட்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E16.4
ஐ.சி.டி.-9251.5
மெரிசின்பிளசு000325
ஈமெடிசின்med/2437 ped/2472
பேசியண்ட் ஐ.இசொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி
ம.பா.தD015043

சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி (Zollinger–Ellison syndrome) என்பது புத்திழையப் பெருக்கத்தால் இரைப்பையில் மிகையாக அமிலம் சுரக்கப்பட்டு வயிற்றுப் புண் ஏற்படுதல் ஆகும். இது ஒரு நரம்பிய அகஞ்சுரப்பியப் புத்திழையப் பெருக்கம் ஆகும். காசுத்திரின் எனும் இயக்குநீரைச் சுரக்கவல்ல காசுத்திரின் புத்திழையத்தால் இந்நோய் ஏற்படுகின்றது.[1] இரையகச் சுவரணுக்கள் (parietal cell) இரையகக்காடியைச் (ஐதரோகுளோரிக் காடி) சுரப்பதற்கு காசுத்திரினின் தூண்டல் தேவையானதாகும்.

சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறி தன்னிச்சையாக அல்லது மரபணுப் பிறழ்ச்சியின் காரணமாக ஏற்படலாம். பன்மடிய அகஞ்சுரப்பிய புத்திழையப் பெருக்கம் வகை I (Multiple endocrine neoplasia type 1 / MEN-1 கூட்டறிகுறி) எனப்படும் அகஞ்சுரப்பியத் தொகுதியில் ஏற்படும் மரபியல் ஆட்சியுடைக் கூட்டறிகுறி நோயில் கணையம், முன்சிறுகுடல், நிணநீர்க் கணுக்கள் ஆகியனவற்றிலும் காசுத்திரின் புத்திழையத்தால் காசுத்திரின் சுரக்கப்படலாம். இவற்றை விட இதயம், சூலகம், பித்தப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற பகுதிகளிலும் இது ஏற்படலாம்.[2]

அறிகுறிகள்[தொகு]

வயிற்று வலியும் வயிற்றுப்போக்கும் இதனது பொதுவான அறிகுறிகள் ஆகும். [1] இரவில் உணவின் பொழுது அல்லது உண்ட பிற்பாடு ஏற்படும் உணவுக்குழாய் வலி, குமட்டல், குருதி வாந்தி, பசியின்மை ஆகியனவும் சொளிங்கர்-எலிசன் கூட்டறிகுறியில் காணப்படலாம்.

அறுதியிடல்[தொகு]

அகநோக்கி மூலம் வயிற்றுப் புண் இருப்பது அறுதியிடப்பட்ட பின்னர் காசுத்திரின் அளவு அறியப்படும். செக்கிரெடின் சுரக்கப்படும் அமிலத்தைக் கட்டுப்படுத்துவதில் துணை புரிகின்றது. எனினும் இந்நோயில் செக்கிரெடின் கொடுக்கப்பட்ட பின்னரும் காசுத்திரின் அளவு மாறாது இருத்தல் இந்நோயை அருதிய்ட உதவுகின்றது.

சிகிச்சை[தொகு]

குறிப்பிட்ட பகுதியில் மட்டும் ஏற்படக்கூடிய புத்திழையப் பெருக்கம் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்பட முடியும். ஆனால் பரவியுள்ள புத்திழையப் பெருக்கம் அறுவைச்சிகிச்சை மூலம் அகற்றப்படமுடியாது. இந்நிலையில் அமிலம் சுரத்தலைத் தடுத்தலிற்குரிய மருந்துகள் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகின்றது.

உசாத்துணைகள்[தொகு]