சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது (Outstanding Parliamentarian Award) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் ஒட்டுமொத்த பங்களிப்பிற்காக இந்திய நாடாளுமன்றத்தின் பதவியிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இந்திய நாடாளுமன்றக் குழுவினால் வழங்கப்படும் விருது ஆகும். இதனை 1991 முதல் 1996 வரை மக்களவையின் பேரவைத் தலைவராக இருந்த சிவராஜ் பாட்டீல் 1995-ல் நிறுவினார்.[1]

விருது பெற்றவர்கள்[தொகு]

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதுகள் வென்றவர்களின் பட்டியல்
ஆண்டு பரிசு பெற்றவர்கள்
1995 சந்திர சேகர்[1]
1996 சோம்நாத் சாட்டர்ஜி[1]
1997 பிரணாப் முகர்ஜி[1]
1998 எஸ். ஜெய்பால் ரெட்டி [1]
1999 லால் கிருஷ்ண அத்வானி[1]
2000 அர்ஜுன் சிங்[1]
2001 ஜஸ்வந்த் சிங் [1]
2002 மன்மோகன் சிங் [1]
2003 சரத் பவார்
2004 சுஷ்மா சுவராஜ்
2005 ப.சிதம்பரம்
2006 மணி சங்கர் ஐயர்
2007 பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி [2]
2008 மோகன் சிங் [2]
2009 முரளி மனோகர் ஜோஷி [2]
2010 அருண் ஜெட்லி
2011 கரண் சிங்
2012 சரத் யாதவ்
2013 நஜ்மா எப்துல்லா
2014 உக்கும்தேவ் நாராயண் யாதவ்
2015 குலாம் நபி ஆசாத்
2016 தினேஷ் திரிவேதி
2017 பருத்ருகரி மகதப்[3]

விமர்சனம்[தொகு]

பிரதான அரசியல் கட்சிகளின் குறிப்பிட்ட மூத்த தலைவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 'சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது' வழங்குவதற்கான சேவையின் அவசியம், தீவிரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 "Indian Parliamentary Group". பார்க்கப்பட்ட நாள் 7 November 2012.
  2. 2.0 2.1 2.2 "Dasmunsi, M M Joshi to get Outstanding Parliamentarian award". http://timesofindia.indiatimes.com/india/Dasmunsi-M-M-Joshi-to-get-Outstanding-Parliamentarian-award/articleshow/6266603.cms. 
  3. "Rajya Sabha Congratulates Best Parliamentarian Awardees". https://www.ndtv.com/india-news/rajya-sabha-congratulates-best-parliamentarian-awardees-1894066. 
  4. "Need for 'please-all' Parliamentarian Award questioned". The Hindu. 27 March 2013. http://www.thehindu.com/news/national/need-for-pleaseall-parliamentarian-award-questioned/article4551806.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]