மணிசங்கர் அய்யர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மணிசங்கர் அய்யர் | |
![]() முன்னாள் மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சர் |
|
| தொகுதி | மயிலாடுதுறை |
|---|---|
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 4, 1941 லாகூர் |
| வாழ்க்கைத் துணை |
சுனித் |
| பிள்ளைகள் | 3மகள்கள் |
| இருப்பிடம் | டில்லி |
| இணையதளம் | www.manishankaraiyar.com |
மணிசங்கர் அய்யர் ஆங்கிலம் Mani Shankar Aiyar இந்திய அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை நியமன உறுப்பினர் ஆவார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள காருகுடி கிராமத்தை பூர்வீகமாகக்கொண்ட இவர் லாகூரில் 10-04-1941ல் பிறந்தார். அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராகவும் , அகில இந்திய காங்கிரஸ் செயலாளராகவும்,1991,1999, 2004 ஆகிய மூன்றுமுறை மயிலாடுதுறை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 2004-2009 வரை மத்திய எண்ணெய் வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
