சார்ட்ரிட்ஜின் லாட வெளவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார்ட்ரிட்ஜின் லாட வெளவால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ரைனோலோப்பிடே
பேரினம்:
ரைனோலோபசு
இனம்:
ரை. சார்ட்ரிட்ஜி
இருசொற் பெயரீடு
ரைனோலோபசு சார்ட்ரிட்ஜி
கி. ஆண்டர்சன், 1918
சார்ட்ரிட்ஜி லாட வெளவால் பரம்பல்

சார்ட்ரிட்ஜின் லாட வெளவால் (Shortridge's horseshoe bat)(ரைனோலோபசு சார்ட்ரிட்ஜி) என்பது வடகிழக்கு இந்தியா, வடக்கு மியான்மர் மற்றும் தெற்கு சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட லாட வௌவால் ஆகும். இது முதன்முதலில் 1918-ல் நுட் ஆண்டர்சன் என்பவரால் விவரிக்கப்பட்டது. மேலும் 2003ஆம் ஆண்டு வரை இந்த இரண்டு சிற்றினங்களும் ஒரே இடத்தில் சேகரிக்கப்படும் வரை பிளைத்தின் லாட வௌவால் சிற்றினத்தின் துணையினமாகக் கருதப்பட்டது . [2]

விளக்கம்[தொகு]

இது நடுத்தர அளவிலான நீளமான தாடை மற்றும் மூக்கின் இலையுடன் இதன் நாசியை முழுமையாக மூடாது காணப்படும். இது ஒப்பீட்டளவில் வெளிறிய அடிப்பகுதியுடன் பழுப்பு நிற ரோமங்களைக் கொண்டுள்ளது.[3]

வரம்பு மற்றும் காப்பு நிலை[தொகு]

சீனாவில், யுன்னான், சிச்சுவான், குயிசூ, ஹுனான், குவாங்சி, ஊபேய், ஆய்னான், குவாங்டொங் மற்றும் புஜியான் மாகாணங்களில் இச்சிற்றினங்கள் காணப்படுகின்றன. இது இந்தியாவின் வடக்குப் பகுதிகளிலும் மியான்மரிலும் காணப்படுகிறது. ரை. சார்ட்ரிட்ஜியின் வாழ்விடத்தில் வரையறுக்கப்பட்ட தரவு உள்ளது. ஆனால் பர்மாவில் உள்ள டிப்டெரோகார்ப் காட்டிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மக்கள்தொகை தரவு இல்லாத போதிலும், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் இதைத் தரவுகள் போதாது எனப் பட்டியலிட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sun, K. (2020). "Rhinolophus shortridgei". IUCN Red List of Threatened Species 2020: e.T136631A21987430. doi:10.2305/IUCN.UK.2020-2.RLTS.T136631A21987430.en. https://www.iucnredlist.org/species/136631/21987430. பார்த்த நாள்: 19 November 2021. 
  2. Csorba, G.; Ujhelyi, P.; Thomas, P. (2003). Horseshoe Bats of the World: (Chiroptera: Rhinolophidae). Alana Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780953604913.
  3. 3.0 3.1 Smith, Andrew T.; Xie, Yan; Hoffmann, Robert S.; Lunde, Darrin; MacKinnon, John; Wilson, Don E.; Wozencraft, W. Chris, eds. (2010). A Guide to the Mammals of China. Princeton University Press. p. 342. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781400834112.