கோத்தா திங்கி நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா திங்கி
Kota Tinggi
கோத்தா திங்கி நகரம்
கோத்தா திங்கி நகரம்
கோத்தா திங்கி Kota Tinggi is located in மலேசியா மேற்கு
கோத்தா திங்கி Kota Tinggi
கோத்தா திங்கி
Kota Tinggi
ஆள்கூறுகள்: 1°44′0″N 103°54′0″E / 1.73333°N 103.90000°E / 1.73333; 103.90000
நாடு Malaysia
மாநிலம் ஜொகூர்
நகரத் தோற்றம்1950களில்
நகரத் தகுதி1990
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு81xxx
இணையதளம்http://www.mdkt.gov.my/

(ஜொகூர் மாநிலத்தில் கோத்தா திங்கி எனும் பெயரில் கோத்தா திங்கி மாவட்டம்; கோத்தா திங்கி நகரம்; என இரு இடங்கள் உள்ளன.)

கோத்தா திங்கி நகரம் என்பது (மலாய்: Pekan Kota Tinggi; ஆங்கிலம்: Kota Tinggi Town; சீனம்: 哥打丁宜) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், கோத்தா திங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். ஜொகூர் பாரு நகருக்கு 42 கி.மீ. வடக்கே அமைந்து உள்ளது. மெர்சிங் நகரம் மிக அருகில் உள்ள நகரமாகும்.[1]

செடிலி அல்லது தஞ்சோங் செடிலி எனும் ஒரு சிறிய மீன்பிடி நகரம், கோத்தா திங்கி நகரத்திற்கு வடகிழக்கில் 37 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த மீன்பிடி நகரம் தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரையில் இரண்டாவது பெரிய மீன்பிடி துறைமுகமாகும்.

வரலாறு[தொகு]

கோத்தா திங்கியின் வரலாறு 1529-ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. ஏனெனில் 1528 முதல் 1564 வரை ஜொகூரை ஆட்சி செய்த ஜொகூர் சுல்தான் அலாவுதீன் ரியாட் ஷா என்பவரால் கோத்தா திங்கி நகரம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

முன்பு காலத்தில் கோத்தா திங்கியில் பல கோட்டைகள் கட்டப்பட்டன. காரா கோட்டை (1529), சாயோங் கோட்டை (1536), பத்து கோட்டை (1540), செலுயுட் கோட்டை (1564), பத்து சாவார் கோட்டை (1587), தௌகிட் கோட்டை (1623), கோத்தா திங்கி கோட்டை (1685), பஞ்சோர் கோட்டை (1716) என எட்டு கோட்டைகள்.[2] இவற்றுள் சில கோட்டைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

ஜொகூர் சுல்தானகம் கோத்தா திங்கியில் நிறுவப் பட்டதால் கோத்தா திங்கி ஒரு வரலாற்று நகரம் என்று அழைக்கப் படுகிறது. பல வரலாற்றுக் கல்லறைகள் இங்கு காணப் படுகின்றன. சுல்தான் முகமட் மங்காட் டி ஜுலாங் கல்லறை (Sultan Mahmud Mangkat Di Julang Mausoleum); பெண்டஹாரா துன் ஹபீப் அப்துல் மஜித் கல்லறை; லக்சமணா பெந்தான் கல்லறை; போன்ற கல்லறைகள் இங்கு தான் உள்ளன.

கோத்தா திங்கி வெள்ளம்[தொகு]

ஜொகூர் ஆறு
ஒரு கிராமவாசியின் வீடு வெள்ளத்தில் மூழ்கியது

2006 டிசம்பர் 18-ஆம் தேதி தொடங்கி 2007 ஜனவரி 13-ஆம் தேதி வரை மலேசியாவில் ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. சிங்கப்பூர்; ஜொகூர்; பகாங்; மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களையும் பேரழிவிற்கு உட்படுத்திய அந்த வெள்ளத்தில் கோத்தா திங்கி நகரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 100,000 பேர் மீட்பு மையங்களில் புகலிடம் அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. சில நாட்களுக்கு முன்பாக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் நாடுகளை உத்தோர் சூறாவளி (Typhoon Utor) தாக்கியது. அதன் காரணம் சராசரிக்கும் மேலாக பெய்த மழையால் வெள்ளம் ஏற்பட்டது.[3] இந்தச் சூறாவளியின் காரணமாகச் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவின் சில பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.

கோத்தா திங்கி நகரம் வெள்ளத்தில் மூழ்கியது[தொகு]

முதல் வெள்ளம் 19 டிசம்பர் 2006-இல் தொடங்கியது. கோத்தா திங்கி நகரத்தை முழுமையாக மூழ்கடித்தது. வெள்ள அளவு 4.90 மீட்டர் (16.1 அடி) உயரத்திற்கு உயர்ந்தது. இரண்டாவது வெள்ள அலை 5.45 மீட்டர் (17.9 அடி) உயரத்தையும் தாண்டியது.[4]

கோத்தா திங்கி நகரம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நீருக்கு அடியில் மூழ்கி இருந்தது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மற்ற நகரங்களில் இருந்தும் தனிமைப் படுத்தப்பட்டது.[5]

கோத்தா திங்கி நீர்வீழ்ச்சி[தொகு]

கோத்தா திங்கி நகரில் இருந்து வடமேற்கே 16 கி.மீ. (10 மைல்) தொலைவில் உள்ள லோம்பாங் எனும் இடத்தில் கோத்தா திங்கி நீர்வீழ்ச்சி உள்ளது. ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 60 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. உள்ளூர் சுற்றுலா தலங்களில் மிகப் பிரபலமான நீர்வீழ்ச்சி ஆகும்.[6] முந்தஹாக் (Gunung Muntahak) எனும் மலையின் அடிவாரத்தில் இந்த நீர்வீழ்ச்சி உள்ளது.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. Govt to upgrade public facilities in Tanjung Sedili, Jason Bay.
  2. Sejarah Kota Tinggi dan perkembangannya dicatatkan bermula dari tahun 1529.
  3. "Tuesday's heavy rainfall third highest in 75 years". Archived from the original on 2009-04-11. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
  4. Typhoon Utor to blame. The flood havoc seen in Johor and other states is the result of a new weather phenomenon.
  5. More than 21,000 people have been evacuated in Malaysia's southern Johor state after continuous rains, causing what officials say are the worst floods in years.
  6. Kota Tinggi Waterfall is located 15km from Kota Tinggi town and around 60km from Johor Bahru.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்தா_திங்கி_நகரம்&oldid=3552093" இலிருந்து மீள்விக்கப்பட்டது