கூடலூர், கோயம்புத்தூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூடலூர் நகராட்சி (GUDALUR MUNICIPALITY) , தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் வடக்கு வட்டத்தில் அமைந்துள்ள ஓர் நகராட்சி ஆகும்.[1] 29.2 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கூடலூர் இந்நகராட்சியானது, 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை 38,859 ஆகும். இதில் ஆண்கள் 19,707 மற்றும் பெண்கள் 19,152 ஆகும். கூடலூர் நகராட்சியில் 10 குடியிருப்புப் பகுதிகள் உள்ளது. அவைகள்: 1 செல்வபுரம், 2 திருமலைநாயக்கன்பாளையம், 3. சாரங்க நகர் 4. சாமிசெட்டிபாளையம் 5 ஜி. கவுண்டன்பாளையம். 6. தேவயாம்பாளையம் 7. புதுப்புதூர் 8. பழைய புதூர் 9.தெக்குப்பாளையம் 10. ராவுத்தக்கொல்லனூர்.

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்[தொகு]

16 அக்டோபர் 2021 அன்று கூடலூர் பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[2][3]

அமைவிடம்[தொகு]

கூடலூர் நகராட்சி, மாவட்டத் தலைமையிடமான கோயம்புத்தூர் நகரத்திலிருந்து, கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், 23 கிலோ மீட்டர் தொலைவிலும். பெரியநாயக்கன்பாளையத்திற்கு தெற்கு 4 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 22 வார்டுகளும், 10,897 வீடுகளும் கொண்ட கூடலூர் நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 38,859 ஆகும். இதில் ஆண்கள் 19,707 மற்றும் பெண்கள் 19,152 ஆகும். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3490 (8.98%) ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 972 வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 85.25% ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 93.97%, இசுலாமியர்கள் 1.21%, கிறித்துவர்கள் 4.58% மற்றவர்கள் 0.24% ஆக உள்ளனர்.[4]

நகராட்சியாக தரம் உயருதல்[தொகு]

16 அக்டோபர் 2021 அன்று கூடலூர் பேரூராட்சியை நகராட்சியாக 33 முதல்நிலை பேரூராட்சிகளை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[5][6]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]