கோட்டூர்

ஆள்கூறுகள்: 10°32′04″N 76°58′39″E / 10.5344°N 76.9774°E / 10.5344; 76.9774
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டூர்-மலையாண்டிபட்டினம்
பேரூராட்சி
கோட்டூர்-மலையாண்டிபட்டினம் is located in தமிழ் நாடு
கோட்டூர்-மலையாண்டிபட்டினம்
கோட்டூர்-மலையாண்டிபட்டினம்
இந்தியா, தமிழ்நாட்டில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 10°32′04″N 76°58′39″E / 10.5344°N 76.9774°E / 10.5344; 76.9774
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்30,000-இற்கும் மேல்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்642 114
தொலைபேசி குறியீட்டு எண்04259 is the telephone code
வாகனப் பதிவுTN 41

கோட்டூர் (ஆங்கிலம்:Kottur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°14′N 78°03′E / 9.23°N 78.05°E / 9.23; 78.05 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 39 மீட்டர் (127 அடி) உயரத்தில் இருக்கின்றது. இதே பெயரில் புதுகோட்டை மாவட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஊர்கள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,999 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கோட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோட்டூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மருத்துவமனை[தொகு]

அரசு மருத்துவமனை, கோட்டூரின் பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சசைக்காக, 40 கி.மீ. சுற்றுவட்டாரத்திலிருந்து மக்கள் வருகின்றனர்.

பள்ளிகள்[தொகு]

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. 3 தனியார் பள்ளிகள்

காவல் நிலையம்[தொகு]

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு காவல் நிலையம் கட்டப்பட்டது. இந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு, அரசு மருத்துவமனை எதிரெ புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

நூலகம்[தொகு]

50,000க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட மிகப் பழமையான நூலகம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தை, பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர்நிலைகள்[தொகு]

கோட்டூரிலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில், ஆழி ஆற்றை தடுத்து அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து ஆண்டு முழுவதும் கேரளாவிற்கு நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் செல்லும் ஆழியாறு, கேரளாவிற்குள் செல்லும் போது, அப்பகுதி மக்களின் சோகத்தை போக்கும் முக்கியத்துவம் இந்த ஆற்றிற்கு இருப்பதால், ஆற்றிற்கு ‘சோகநாசினி’ என்று பெயரிட்டு உள்ளனர். இந்த ஆறு கோட்டூரின் தென் பகுதியில் 2 கி.மீ. தூரத்தில் செல்கிறது.

சந்தை[தொகு]

ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் வாரச் சந்தை நடக்கிறது. சுற்றியுள்ள, கிராம விவசாயிகள் இந்த சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வருகின்றனர். கோட்டூரை சுற்றியுள்ள பொங்காளியூர், சங்கம்பாளையம், சோமந்துறை சித்தூர், ஆத்துப்பாறை, நறிக்கல்பதி, அங்களக்குறிச்சி உள்ளிட்ட 30 கிராங்களைச் சேர்நத மக்கள் இந்த வாரச்சந்தைக்கு வருகின்றனர்.

  1. "Kottur". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 20, 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டூர்&oldid=3862241" இலிருந்து மீள்விக்கப்பட்டது