குன்னுவாரன் கோட்டை
குன்னுவாரன்கோட்டை | |||||||
— கிராமம் — | |||||||
அமைவிடம் | 10°06′20″N 77°46′34″E / 10.1056°N 77.7760°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திண்டுக்கல் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||||||
ஊராட்சி மன்றத் தலைவர் | |||||||
மக்கள் தொகை | 3,978 (2001[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 232.39 மீட்டர்கள் (762.4 அடி) | ||||||
குறியீடுகள்
|
குன்னுவாரன்கோட்டை (Kunnuvarankottai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஓர் ஊர் ஆகும். நிலக்கோட்டை வருவாய் வட்டத்தின் 14 ஆவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:14) ஆகும்.[4][5]
முக்கிய பயிர்[தொகு]
இங்கு நெல் (பாரம்பரிய நெல் ரகங்கள்), பருத்தி, மிளகாய் அதிகமாக விளைகின்றன. இது வைகை ஆறு பாயும் பகுதி என்பதால் வேளாண்தொழில் நல்லமுறையில் நடக்கிறது.
அமைவிடம்[தொகு]
வத்தலக்குண்டுலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் வத்தலக்குண்டுலிருந்து சுமார் 13 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 685 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து வட கிழக்கே சுமார் 6 கி.மீ தூரத்தில் வைகை ஆறு ஓடுகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, குன்னுவாரன் கோட்டை கிராமத்தில் 3978பேர் வசிக்கின்றார்கள்.இதில் ஆண்கள் 2111,பெண்கள்1867 பாலின விகிதம் 884. எழுத்தறிவு பெற்றவர்கள் 2101பேர். இதில் 1299 பேர் ஆண்கள்; 802 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 59.57. ஆறு வயதுக்குட்பட்டோர் மொத்தம் 451 ஆண் குழந்தைகள் 217,பெண் குழந்தைகள்234 ஆவர்.[6]
கோயில்கள்[தொகு]
இவ்வூரில், சிறப்பு வாய்ந்த குன்னுவாரங்கோட்டை காசி விசாலாட்சி விசுவநாதர் கோயில் மற்றும் ஸ்ரீ மண்டு பிடாரிஅம்மன் திருக்கோவில் ஆகியவை உள்ளன.
நிர்வாக அலகு[தொகு]
- மாவட்டம்: திண்டுக்கல்
- வருவாய் கோட்டம்: திண்டுக்கல்
- வட்டம்: நிலக்கோட்டை
- வருவாய் கிராமம்: குன்னுவாரன் கோட்டை
- ஊராட்சி ஒன்றியம்: நிலக்கோட்டை
- ஊராட்சி மன்றம்(பஞ்சாயத்து):கூவனூத்து - KOOVANUTHU
இதையும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2014-01-13.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் சனவரி 11, 2014.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)