கற்றாழை
| கற்றாழை | ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ஆலோ சக்கோட்ரீனா
|
||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||
|
கற்றாழை (Aloë) நானூறு பூக்கும் சாற்றுத் தாவர இனங்கள் கொண்ட பேரினமாகும். இந்த வகை தாவரங்களிலேயே மிகவும் பிரபலமான தாவரம் ஆலோ வேறா அல்லது "உண்மையான கற்றாழை" ஆகும்.
இந்த இனத்தாவரம் ஆப்பிரிக்காவில் அதிகமாக வளரக்கூடியதாக இருக்கிறது. இது பொதுவாக, தென்னாப்பிரிக்காவின் கேப் மாநிலத்திலும், ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல பகுதியின் மலைகளிலும், ஆப்ரிக்காவின் தீவுகள், அராபியத் தீபகற்பம், மடகாஸ்கர் போன்ற அண்டைப் பகுதிகளிலும் காணப்படுகிறது.
ஏ.பி.ஜி II அமைப்பு (2003), இந்த வகை தாவர இனத்தை ஆஸ்ஃபோடெலீசி என்ற குடும்ப பிரிவில் வைத்தது. கடந்தகாலத்தில் இந்த வகை தாவரம், அலோசி குடும்பங்கள் மற்றும் லில்லிசீ அல்லது லில்லி குடும்பத்தில் இணைக்கப்பட்டிருந்தது. காஸ்டீரியா , ஹாவார்தியா மற்றும் நிஃபோஃபியா போன்ற இனங்களுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துப்போகும் தாவர இனங்களுக்கு இதே போன்ற வளர்ச்சி இருக்கும். இந்த இனங்களும் பிரபலமாக சோற்றுக் கற்றாழைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இந்த வகை தாவரம் சிலநேரங்களில் அமெரிக்க கற்றாழை (கருங்கற்றாழை அமெரிக்கானா) என்றும் அழைக்கப்படுகிறது. இது அகவாசி என்ற வேறுபட்ட குடும்ப இனத்தைச் சேர்ந்ததாகும்.
பெரும்பாலான கற்றாழை இனங்களுக்கு ரோஜா இதழ்கள் போன்ற பெரிய அமைப்பும், தடிமனான சதையுள்ள இலைகளும் இருக்கும். இதன் இலைகள் அதிகமாக நீட்டாகவும் கூர்மையாகவும், அதனுடைய ஓரங்களில் முட்களுள்ளதாகவும் இருக்கும். கற்றாழையின் பூக்கள், குழாய் வடிவத்திலும், அதிகமாக மஞ்சள், இளம் சிவப்பு அல்லது சிவப்பு நிறங்களிலும், அடர்த்தியான கொத்துகளாகவும், சாதாரணமாக அல்லது கிளைகளுடன் இலையில்லாத தண்டுகளாகவும் இருக்கும்.
பெரும்பாலான கற்றாழை இனங்கள் தண்டுகள் இல்லாமல் காணப்படும். இது தரையில் இருந்து நேரடியாக ரோஜா இதழ் போன்ற அமைப்பில் வளரும்; மற்ற வகைகளில், கிளைகளுடன் கூடிய அல்லது கிளைகள் இல்லாத தண்டு இருக்கலாம். இதில் சதையுள்ள இலைகள் இருக்கலாம். அவை சாம்பல் நிறத்திலிருந்து ஆழமான பச்சை வரை நிறத்தில் வித்தியாசப்படுகின்றன. சிலநேரங்களில் அவை ஒரே நிறமாகவோ பல வண்ணங்களோடோ இருக்கலாம். தென்னாப்பிரிக்காவின் வளரக்கூடிய சில வகை சோற்றுக் கற்றாழைகள் மரங்கள் போன்றும் இருக்கும்.[1]
பொருளடக்கம் |
[தொகு] பயன்கள்
கற்றாழை இனங்கள், அதிகமாக தோட்டங்களிலும் பாணைகளிலும் ஒரு அலங்கார செடிகளாக தான் வளர்க்கப்படுகின்றன. கற்றாழை இன செடிகள் பல, மிகவும் அழகு நிறைந்ததாகவும் அலங்கார செடியாகவும் இருக்கும். சதைபற்றான தாவரங்களை சேகரிப்பவர்களுக்கு இந்த வகை தாவரம் மிகவும் மதிப்பு வாய்ந்ததாக காணப்படும். ஆலோ வேறா மனிதர்களின் உடலுக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இதில் சில மருந்துவ குணங்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இந்த கூற்று அறிவியல் சார்ந்த மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளால் ஆதரிக்கப்படுகின்றன. இலைகளில் உள்ள களிமத்தைக் (ஜெல்) கொண்டு ஒரு வழு வழுப்பான க்ரீம் தயாரிக்கப்படுகிறது. இது வேனிற்கட்டி போன்ற எரிகாயங்களை குணமாக்குகிறது. இவற்றை கொண்டு சில சிறப்புவாய்ந்த சோப்பு வகைகளும் தயாரிக்கப்படுகின்றன.
[தொகு] வரலாற்று ரீதியான பயன்பாடுகள்
கற்றாழை இனங்கள் மனிதர்களால் வரலாற்று ரீதியாக பல வகைகளில் பயன்படுத்தப்படுவது ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. மற்றவையோடு ஒப்பிடும் போது குறைவாக இருப்பினும், மருத்துவம் சார்ந்த பயன்பாடுகளின் ஆவணங்கள் கிடைக்கக்கூடியதாக உள்ளது.[2]
கற்றாழையில் 300 இனங்கள் இருப்பினும், சில கற்றாழை இனங்களே பாரம்பரியமாக மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆலோவேறா, கற்றாழை இனத்திலேயே மிகவும் பொதுவாக மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் தாவரமாகும். இதில் ஆலோ பெரியீ (இது வடகிழக்கு ஆப்ரிக்காவில் காணப்படுகிறது) மற்றும் ஆலோ ஃபெராக்ஸும் (இது தென்னாப்ரிக்காவில் காணப்படுகிறது) சேர்க்கப்படுகிறது. கிரேக்கர்களும் ரோமர்களும் காயங்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆலோ வேறாவை பயன்படுத்தினர். இடைக்காலங்களில், இலைகளின் உள்ளே காணப்பட்ட மஞ்சள் நிற திரவம் பேதி ஊக்கியாக பயன்படுத்தப்பட்டது.[சான்று தேவை] பேதியை ஏற்படுத்தும் தன்மையை உடைய பதப்படுத்தப்பட்ட கற்றாழை பொதுவாக மலமிளக்கியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் பதப்படுத்தப்பட்ட ஆலோ வேறா சாறு, பேதியை ஏற்படுத்தும் தன்மையுடையதாக இருக்கவில்லை.
சில வகைகள், குறிப்பாக ஆலோ வேறா , மாற்று மருந்தாகவும், வீட்டு முதல் மருத்துவமாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஓரளவு தெளிவுள்ள உட்புற தாவரத்திசுக்கூழ்மமும், கற்றாழை தாவரத்தை அடிப்பதினால் வெளியாகும் மஞ்சள் நிற அலோயின் பிசினும், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை ஆற்றுவதற்காக உடலுக்கு வெளிப்புறமாக பயன்படுத்தப்படுகிறது. செரிமானக் கோளாறுகளை நீக்குவதற்காக, ஆலோ வேறா சாறு பொதுவாக மூலிகை மருந்தாக உட்கொள்ளப்படுகிறது "aloe for heartburn". "aloe alt med". "Aloe IBS study".. ஆலோ வேறா மருத்துவத்தை மற்ற சாதாரணமான நெறிமுறைகளின் சிகிச்சையோடு ஒப்பிடும் போது, காயங்களை ஆற்றுவதை குறிப்பிடத்தக்க அளவு மெதுவாக செய்கிறது என்று சில நவீன ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன.[3] ஆலோ வேறாவிற்கு அதிகமான மருத்துவ பயன்கள் இருப்பதாக எந்த வித ஆதாரத்தையும், மற்ற தோராயமாக்கப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மருத்துவ சோதனைகளின் திறனாய்வுகள் கொடுக்கவில்லை.[4][5]
இன்றைய சூழலில், ஆலோ வேறா, மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது மற்றும் வெளிப்புறமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இலைகளில் காணப்படும் கூழ்மம், சிறிய எரிகாயங்கள், காயங்கள் மற்றும் படைநோய், படர்தாமரை போன்ற பல தோல் நிலைகளையும் ஆற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆலோ வேறா செடியிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட ஆலோ வேறா சாறு, பலவகையான செரிமான நிலைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உட்கொள்ளப்படுகிறது. 1950களில், பல மேற்கத்திய நாடுகளில், இந்த வகை மூலிகை மருத்துவ பயன்பாடு பிரபலமானது. கூழ்மத்தின் தாக்கம் உடனே நிகழும்; இது காயங்களின் மேலே ஒரு மெல்லிய தோல் போன்றதை ஏற்படுத்தி, நோய்த்தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்று கூறப்படுகிறது.[3]
கற்றாழை கூழ்மத்தை உட்கொள்ளுவதனால் ஏற்படும் சாத்தியமான பயன்பாடுகளை குறித்த சில ஆய்வுகள் உள்ளன. கற்றாழையில் உள்ள பொருட்கள் கட்டிகள் வளர்வதைத் தடுக்கும்.[6] விலங்கு மாதிரிகளை கொண்டு செய்யப்பட்ட சில ஆய்வுகள், கற்றாழையின் சாற்றில் குறிப்பிடத்தக்க அளவு ஆண்டி-ஹைப்பர்க்ளைசிமிக் பயன் இருப்பதாகக் கூறுகின்றன. இது டைப் II நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டுகின்றன. இந்த ஆய்வுகள், மனிதர்களில் செய்யப்பட்டு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.[7]
[தொகு] ஓ.டி.சி மலமிளக்கி பொருட்களில் உள்ள அலோயின்
மருந்துக்கடைகளின் மருந்துச்சீட்டு இல்லாமல் நேரடியாக வாங்கும் மருந்து பொருட்களில் மலமிளக்கி பொருட்களாக கற்றாழை செடியில் உள்ள மஞ்சள் நிற தாவர இனப்பாலான அலோயினை பயன்படுத்துதலை, 2002 ஆம் ஆண்டு மே 9ம் தேதி U.S. உணவு மற்றும் மருந்து வழங்குதல் நிறுவனம் இறுதிகட்ட விதியாக தடை செய்தது.[8] இப்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான கற்றாழை சாற்றில் குறிப்பிடத்தக்க அளவு அலோயின் இருப்பதில்லை.
[தொகு] வேதியியல் பண்புகள்
டபுல்யூ. ஏ. ஹென்ஸ்டோன் படி, அலோயின்களின் இரண்டு பிரிவுகள் கண்டறியப்பட்டுள்ளது: (1) நட்டாலியன்கள், நைட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து, பிக்ரிக் மற்றும் ஆக்ஸாலிக் அமிலத்தைக் கொடுக்கிறது. இது நைட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து சிவப்பு நிறத்தை கொடுப்பதில்லை; (2) பார்பலாயின்கள், நைட்ரிக் அமிலத்துடன் சேர்ந்து ஆலோயடிக் அமிலம் (C7H2N3O5), க்ரைசாமிக் அமிலம் (C7H2N2O6), பிக்ரிக் மற்றும் ஆக்ஸாலிக் அமிலங்களைக் கொடுக்கிறது. இது அமிலத்தினால் சிகப்பு நிறமாகிறது. இரண்டாவது குழு, a-பார்பலாயின்களாக பிரிக்கப்படலாம். இது பார்படாஸ் கற்றாழை யிலிருந்து பெறப்படுகிறது. இது சூடேற்றி உலர வைக்கும் போது சிகப்பு நிறமடைகிறது. b-பார்பலாயின்கள், சோகோடிரைன் மற்றும் ஸான்ஸிபார் கற்றாழை யிலிருந்து பெறப்படுகிறது. இது சாதாரண நைட்ரிக் அமிலத்தினால் சூடேற்றும் போது அல்லது உலர வைப்பதில் புகையமிலத்தினால் சிகப்பு நிறமடைகிறது. நட்டாலியன் (2C17H13O7·H2O) ஆழமான மஞ்சள் நிறத்தை உருவாக்குகிறது. பார்பலாயின் (C17H18O7) அரியப்பளிங்குகள். கற்றாழை இனங்களுக்கு துரிதமாக ஆவியாகக்கூடிய எண்ணெயின் வாசனையுள்ளது. இது, அதற்கே உரிய வாசனையாகும்.[சான்று தேவை]
[தொகு] பிரபலமான கலாச்சாரம்
நமிபியாவின் குடிமை ஹெரால்டிரியில் இருப்பது போல ஆலோ ருப்ரோலுடீ ஹெரால்டிரியில் நிறைந்து காணப்படுகிறது.[9]
[தொகு] இனங்கள்
கற்றாழை இனத்தில், சுமார் 400 இனங்கள் உள்ளன. முழுமையான பட்டியலை பார்க்க, கற்றாழை பேரினத்தின் இனங்களின் பட்டியலை பார்க்கவும். இதில் உள்ளடங்கும் இனங்களாவன:
- ஆலோ வேறா - உடல்நல பராமரிப்பு மற்றும் உடல்நல பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது
- ஆலோ அர்போரெசென்ஸ் - உடல்நல பராமரிப்பில் பயன்படுத்தப்படுகிறது
- ஆலோ அரிஸ்டாட்டா - பந்த செடி, இழை வார் கற்றாழை
- ஆலோ டிக்கோடோமா - க்வீவர் மரம் அல்லது கோக்கெர்பூம்
- ஆலோ நீரீன்சிஸ்
- ஆலோ வெரீகட்டா - கௌதாரி மார்புடைய கற்றாழை , புலி கற்றாழை
- ஆலோ பார்பாடென்சிஸ் - குருத்து கற்றாழை , பொதுவான கற்றாழை , மஞ்சள் கற்றாழை , மருத்துவ குணம் நிறைந்த கற்றாழை . இது ஆலோ வேறாவின் பழைய பெயராகும்.
- ஆலோ வைல்டீ
[தொகு] முதன்மையற்ற நிகழ்வு
தென் காகாசஸ் பகுதியில் உள்ள ஜார்ஜியாவின் ஒரு தன்னாட்சி பகுதியான பாட்டம்மினால், 1919 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அஞ்சல் தலையில் காணப்பட்ட ஓர் கற்றாழை மரம்.
[தொகு] மேலும் காண்க
- கற்றாழை இனங்களின் பட்டியல்
- தெற்கத்திய ஆப்ரிக்க உள்ளூர் மரங்களின் பட்டியல்
[தொகு] குறிப்புதவிகள்
- ↑ கற்றாழை மரங்களின் படங்கள்.
- ↑ ரெனால்ஸ், டி (எட்) ஆலோஸ்: த ஜீனஸ் ஆலோ . CRC ப்ரஸ். ISBN 978-0-415-30672-0
- ↑ 3.0 3.1 Schmidt JM, Greenspoon JS (1991). "Aloe vera dermal wound gel is associated with a delay in wound healing". Obstet Gynecol 78 (1): 115–7. PMID 2047051.
- ↑ Richardson J, Smith JE, McIntyre M, Thomas R, Pilkington K (2005). "Aloe vera for preventing radiation-induced skin reactions: a systematic literature review". Clin Oncol (R Coll Radiol) 17 (6): 478–84. PMID 16149293.
- ↑ Ernst E, Pittler MH, Stevinson C (2002). "Complementary/alternative medicine in dermatology: evidence-assessed efficacy of two diseases and two treatments". Am J Clin Dermatol 3 (5): 341–8. doi:10.2165/00128071-200203050-00006. PMID 12069640.
- ↑ Cosmetic Ingredient Review Expert, Panel (2007). "Final report on the safety assessment of Aloe andongensis extract, Aloe andongensis leaf juice, Aloe arborescens leaf extract, Aloe arborescens leaf juice, Aloe arborescens leaf protoplasts, Aloe barbadensis flower extract, Aloe barbadensis leaf, Aloe barbadensis leaf extract, Aloe barbadensis leaf juice, Aloe barbadensis leaf polysaccharides, Aloe barbadensis leaf water, Aloe ferox leaf extract, Aloe ferox leaf juice, and Aloe ferox leaf juice extract". Int. J. Toxicol. 26 Suppl 2: 1–50. doi:10.1080/10915810701351186. PMID 17613130.
- ↑ Tanaka M, Misawa E, Ito Y, Habara N, Nomaguchi K, Yamada M, Toida T, Hayasawa H, Takase M, Inagaki M, Higuchi R (2006). "Identification of five phytosterols from Aloe vera gel as anti-diabetic compounds". Biol. Pharm. Bull.=) 29 (7): 1418–22. doi:10.1248/bpb.29.1418. PMID 16819181.
- ↑ Food And Drug Administration,, HHS (2002). "Status of certain additional over-the-counter drug category II and III active ingredients. Final rule". Fed Regist 67 (90): 31125–7. PMID 12001972.
- ↑ "NAMIBIA - WINDHOEK". பார்த்த நாள் 2008-01-24.
[தொகு] புற இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: Aloe |