ஏபெல் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஏபெல் பரிசு (Abel Prize) என்பது நார்வே மன்னரால் ஆண்டுதோறும் உலகளாவிய கணிப்பில் சிறந்த கணிதவியலாளருக்கு வழங்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு விருதாகும். 2003ம் ஆண்டிலிருந்து நார்வே நாட்டின் 19வது நூற்றாண்டின் சிறந்த கணித இயலராகவும் உலகக்கணித மேதைகளில் ஒருவராகவும் திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் ஏபெல் என்பவரின் நினைவாக நார்வே அரசினரால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

சுவீடனாலும் நார்வேயினாலும் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசு கணிதத்தை உள்ளடக்கவில்லை என்பதால் சோஃபஸ் லை (Sophus Lie) என்பவர் கணிதத்திற்கு தனியே வழங்க வேணும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இரண்டாம் ஆஸ்கார் மன்னர் இதற்காக நிதியையும் ஒதுக்க திட்டங்கள் வரைந்தார். ஆனாலும் 1905இல் சுவீடனும் நார்வேயும் பிரிந்ததில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டிருந்தது.

[தொகு] ஏபெல் விருதாளர்கள்

நார்வே நாட்டின் அறிவியல் கழகம் இந்த விருதைப் பெறும் சிறந்த கணிதவியலரைத் தெரிவுசெய்கிறது. இவ்விருது ஏறத்தாழ நோபல் பரிசின் பெறுமதியை ஒத்தது. ஏபல் பரிசின் தற்போதைய மதிப்பு $875,000 அமெரிக்க டாலர்கள். இது வரையில் இப்பரிசைப் பெற்றவர்கள்:

ஆண்டு விருதாளர்(கள்) தேசியம் Citation
2003 ஜீன்-பியேர் செரே பிரான்சின் கொடி பிரான்ஸ் "இடவியல், இயற்கணித வடிவவியல், எண் கோட்பாடு இவை உள்ளிட்ட பல கணிதப்பிரிவுகள் தற்கால உருவங்களை அடைய அடிக்கல் நாட்டி வழிகோலியதற்காக".
2004 மைக்கேல் அட்டீயா
ஐசடோர் சிங்கர்
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
அட்டீயா-சிங்கர் குறியெண் தேற்றம் என்பதை உண்டாக்கி, நிறுவலும் படைத்து, அதன் மூலம் இடவியல், வடிவவியல், பகுவியல் இவைகளை ஒன்று சேர்த்ததற்காகவும் கணிதவியலுக்கும் இயற்பியலின் தத்துவ அடித்தளங்களுக்கும் பாலமமைத்த புதுமைக்காகவும்.”
2005 பீட்டர் டி. லாக்ஸ் அங்கேரியின் கொடி அங்கேரி / Flag of the United States ஐக்கிய அமெரிக்கா பகுதி வகையீட்டுச் சமன்பாடுகளின் கோட்பாடு, பயன்பாடு, தீர்வுக் கணிப்பு இவைகளுக்கெல்லாம் ஒரு ராஜபாட்டையைத் திறந்துவிட்டதற்காக.”
2006 லெனார்ட் கார்ல்சன் சுவீடன் கொடி சுவீடன் இசைப்பகுவியலுக்கும் இயக்கவியல் திட்டக் கோட்பாட்டிற்கும் அவர் அளித்திருக்கும் கருவூலப் பங்களிப்பிற்காகவும் அவைகளின் ஆழத்திற்காகவும்”.
2007 எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் இந்தியாவின் கொடி இந்தியா / Flag of the United States ஐக்கிய அமெரிக்கா நிகழ்தகவுக் கோட்பாட்டிற்கு அவர் செய்த அடித்தளப் பங்களிப்புகளுக்காகவும், குறிப்பாக "பெரிய விலக்கங்கள் கோட்பாடு”.
2008 ஜான் க்ரிக்ஸ் தாம்ப்சன்
ஜாக் டிட்ஸ்
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா;
பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் / பிரான்சின் கொடி பிரான்ஸ்
“இயற்கணிதத் துறையில் குறிப்பாக குலக்கோட்பாட்டுத்துறைக்கு அவர்களுடைய சாதனைநிறைந்த பங்களிப்புகளுக்காக”.
2009 மிகயில் குரோமோவ் இரசியாவின் கொடி இரசியா / பிரான்சின் கொடி பிரான்ஸ் “வடிவவியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக”
2010 ஜான் டேட் Flag of the United States ஐக்கிய அமெரிக்கா "எண்ணியலில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதற்காக"

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஏபெல்_பரிசு&oldid=1040073" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்