உரூத் தூரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரூத் தூரர்
Ruth Durrer
பிறப்பு 1958 (அகவை 65–66)
கெர்ன்சு
Alma materசூரிச் பல்கலைக்கழகம்
துறை ஆலோசகர்நார்பெர்ட் சுட்டிராமன்

உரூத் தூரர் (Ruth Durrer)(பிறப்பு 1958) ஜெனீவா பல்கலைக்கழகத்தில் அண்டவியல் பேராசிரியராக உள்ளார். அவர் அண்ட நுண்ணலை பின்னணி, பிரேன் அண்டவியல், திரள்நிலை ஈர்ப்பு ஆகியவற்றில் பணியாற்றுகிறார்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் கெர்ன்ஸில் பிறந்தார்.[1] அவர் தனது உயர்நிலைப் பள்ளி பட்டயத்தை கான்ட்டொனல்லசு இலெகிரெர்செமினாரில் பெற்றார். இவர் சூரிச் பல்கலைக்கழகத்தில் படித்தார்.[1] 1988 ஆம் ஆண்டில் சூரிச் பல்கலைக்கழகத்தில் நோர்பர்ட் சுட்டுர்ரூமனுடன் சிற்றுலைவுக் கோட்பாட்டில் த முனைவர் பட்டத்தை முடித்தார்.[2][3] 1989 ஆம் ஆண்டில் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்பு அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் முதுமுனைவர் ஆராய்ச்சியாளராக இருந்தார்.[4] இவர் 1991 இல் சூரிச் நகருக்குத் திரும்பினார், தன் முதுமுனைவர் முனைவர் பட்டத்தை முடித்தார்.[2]

ஆராய்ச்சியும் தொழிலும்[தொகு]

தூரர் 1992 இல் சூரிச் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும் , 1995 இல் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் முழு பேராசிரியராகவும் பணியில் அமர்த்தப்பட்டார்.[2] அவர் கோட்பாட்டு இயற்பியலுக்கான பெரிமீட்டர் நிறுவனத்தில் உறுப்பினராக உள்ளார்.[5] அவர் அண்ட நுண்ணலை பின்னணியிலும் திரள்நிலை ஈர்ப்பிலும் வேலை செய்கிறார்.[6][7] திரள்நிலை ஈர்ப்பு என்பது திரள் ஈர்ப்பன்கள்வழி விரிவடைந்து வரும் அண்டத்தை விளக்குகிறது. இது பெருநிலை அளவுகளில் ஈர்ப்பை வலுவிழக்கச் செய்கிறது.[8] தூரர் பொது சார்பியலுக்கான ஒரு செய்முறையில் அண்டவியல் நோக்கீடுகளைப் பயன்படுத்துகிறார்.[9]

இடவியல் குறைபாடுகள் பற்றிய கோட்பாட்டுப் புரிதலுக்கு தூரர் விரிவாக பங்களித்துள்ளார். அண்ட நுண்ணலை பின்னணியின் கோணத் திறன் நிறமாலையின் ஒலி உச்சங்களை அண்ட கட்டமைப்புகள் அடக்க முடியும் என்பதை இவர் காட்டினார்.[10] இந்த முடிவுகள் , கட்புல அண்டத்தில் பொருளின் பரவலுக்கு அண்ட கட்டமைப்புகள் பொறுப்பல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றன. தொடக்க கால ழண்டத்தில் அண்டவியல் பொருள்நிலை மாற்றங்களை அறிய நிலக்கோள ஆய்வக அடிப்படையிலான செய்முறைகளைப் பயன்படுத்த முடியும் என்பதை நிறுவ அவர் நீல் துரோக் உடன் பணிபுரிந்தார்.[11] சர வலைப்பின்னல்களின் அளவீட்டு தீர்வுகளைப் படிக்க, நீர்மப் படிகங்களைப் பயன்படுத்துவதும் இதில் அடங்கும்.[11] தொடக்க கால அண்டத்தில்த்தில் அடர்த்தி அலைவுகள்(ஏற்ற இறக்கங்கள்) அண்டவியல் காந்தப்புலங்களுக்கு வழிவகுக்கும் என்பதையும் அவர் நிறுவியுள்ளார்.[12][13][14] இந்த முதன்மையான காந்தப்புலங்களின் அளவிடுதல் பண்புகளை காரணமுடைமை வாதங்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்பதை அவர் காட்டினார்.[15]

60 பில்லியன் மண்டலங்களாகப் பிரித்து, ஒரு விரிவான.விண்வெளிப் பகுதியை தூரர் ஆய்வு செய்தார். மேலும் இதற்காக, தனிப்பட்ட துகள்களின் இயக்கத்தைப் படிக்க, ஒரு மீக்கணினியில் சி++ நூலக இலாட் ஃபீல்ட் 2 நிரலைப் பயன்படுத்தினார்.[16] நியூட்டனின் முறைகளின் கணிப்புடன் ஒப்பிடுகையில் மெட்ரிக் விண்வெளியில் உள்ள தொலைவைக் கணக்கிட ஐன்ஸ்டீனின் சமன்பாடுகளைப் பயன்படுத்தினார்.[16] அவர் இருண்ட ஆற்றலையும் ஆராய்ந்துள்ளார்.[17]

தூரர் 2012 ஆம் ஆண்டில் சுவிசு தேசிய அறிவியல் அறக்கட்டளையால் கல்விசார் வலையத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] பொது சார்பியல், ஈர்ப்புக்கான தூய, பயன்பாட்டு இயற்பியல் பன்னாட்டுக் கழகத்தின் குழுவில் உறுப்பினராக உள்ளார்.[18] பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகம் , பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் , பாரிசு- சுது பல்கலைக்கழகம் , கலிலியோ கலிலி நிறுவனம் ஆகியவற்றில் வருகை தரும் கல்விப் பதவிகளில் இருந்துள்ளார்.[1]

புத்தகங்கள்[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

அவரது தகைமைகளும் விருதுகளும் பின்வருமாறு:

  • 1992 சுவிசு அறிவியல் கல்வ்க்கழக சேப்லி விருது[20]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தூரருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.[1] அவர் ஜெர்மன் , ஆங்கிலம் , பிரெஞ்சு சுவிசு ஜெர்மன் மொழிகளில் பேசுகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Prof. Ruth Durrer - AcademiaNet". www.academia-net.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  2. 2.0 2.1 2.2 "Ruth Durrer | Cosmology and Astroparticle Physics - University of Geneva". cosmology.unige.ch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  3. "Ruth Durrer - The Mathematics Genealogy Project". www.genealogy.ams.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
  4. "Ruth Durrer". Institute for Advanced Study (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  5. "Ruth Durrer | Perimeter Institute". perimeterinstitute.ca. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  6. "Ruth Durrer | SwissMAP". www.nccr-swissmap.ch. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  7. "Cosmology and the cosmic microwave background | Cours de physique théorique". courses.ipht.cnrs.fr. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  8. "Ruth Durrer". www.colloquium.phys.ethz.ch (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  9. "Testing General Relativity with Cosmological observations - Ruth Durrer". Media Hopper Create - The University of Edinburgh Media Platform (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  10. Durrer, Ruth; Gangui, Alejandro; Sakellariadou, Mairi (1996-01-22). "Doppler Peaks in the Angular Power Spectrum of the Cosmic Microwave Background: A Fingerprint of Topological Defects". Physical Review Letters 76 (4): 579–582. doi:10.1103/PhysRevLett.76.579. பப்மெட்:10061495. Bibcode: 1996PhRvL..76..579D. 
  11. 11.0 11.1 Yurke, Bernard; Turok, Neil; Durrer, Ruth; Chuang, Isaac (1991-03-15). "Cosmology in the Laboratory: Defect Dynamics in Liquid Crystals" (in en). Science 251 (4999): 1336–1342. doi:10.1126/science.251.4999.1336. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:17816188. Bibcode: 1991Sci...251.1336C. 
  12. Durrer, Ruth (2006-02-10). "Is the Mystery of Cosmic Magnetic Fields Solved?" (in en). Science 311 (5762): 787–788. doi:10.1126/science.1122395. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:16469908. http://archive-ouverte.unige.ch/unige:946. 
  13. "North of the Big Bang". www.newscientist.com. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  14. "Members in the Media". www.aps.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  15. Durrer, Ruth; Caprini, Chiara (2003-11-19). "Primordial magnetic fields and causality". Journal of Cosmology and Astroparticle Physics 2003 (11): 010. doi:10.1088/1475-7516/2003/11/010. பன்னாட்டுத் தர தொடர் எண்:1475-7516. Bibcode: 2003JCAP...11..010D. 
  16. 16.0 16.1 "Spacetime and Gravitational Waves Yield a New View of the Universe". The Daily Galaxy (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-03-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  17. Durrer Ruth (2011-12-28). "What do we really know about dark energy?". Philosophical Transactions of the Royal Society A: Mathematical, Physical and Engineering Sciences 369 (1957): 5102–5114. doi:10.1098/rsta.2011.0285. பப்மெட்:22084297. Bibcode: 2011RSPTA.369.5102D. 
  18. "AC2: Members | IUPAP: The International Union of Pure and Applied Physics". iupap.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-29.
  19. Reviews of The Cosmic Microwave Background:
  20. "Ruth Durrer". Institute for Advanced Study (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூத்_தூரர்&oldid=3846012" இலிருந்து மீள்விக்கப்பட்டது