இறைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கடவுள் என்ற பொதுவான நம்பிக்கையில் பெண்பால் கடவுள்களை இறைவி என வழங்குகின்றனர்.

இந்து மதம், கிறித்துவ மதம் போன்றவற்றில் பெண் கடவுளை வணங்கும் முறை உள்ளது. ஆனால் சமணம், பௌத்தம் போன்ற சில மதங்கள் பெண்ணை கடவுளாக வணங்குவதில்லை.

பொருளடக்கம்

[தொகு] இந்து மதம்

இந்து மதத்தில் கடவுள்கள் இல்லற வாழ்க்கை வாழ்பவர்களா இருக்கிறார்கள். தம்பதி சமேதமாக இருப்பதால், இந்து மதத்தில் பெண் கடவுள்களுக்கு மனைவி, தாய், மகள் என உறவுகளும் இருக்கின்றன. சக்தியின் வடிவமாக பார்வதியும், செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமியும், கல்விக்கு தெய்வமாக சரஸ்வதியையும் இந்துக்கள் வணங்குகின்றார்கள்.

[தொகு] கிறித்துவ மதம்

கிறித்துவ மதத்தில் ஏசுவின் அன்னை மேரியை தெய்வமாக வணங்குகின்றார்கள். சில இடங்களில் குழந்தை ஏசுவுடன் சேர்த்தும், சில இடங்களில் தனித்தும் வணங்குகின்றார்கள். மேரிக்கென தனி ஆலயங்களும் அமைக்கப்படுகின்றன.

[தொகு] தமிழ் சமயம்

பெண்ணை வழிபடும் சமூகமாக தமிழ் சமூகம் இருந்ததுள்ளது. பாலை நிலத்தில் கொற்றவை என்ற பெண் தெய்வத்தினை மக்கள் வழிபட்டனர். அது மட்டுமன்றி கன்னிகளை வழிபடும் முறையும் பரவலாக இருந்துள்ளது. நல்லதங்காள், நவ கன்னி, சப்த கன்னி என வறுமை, சாதி கொடுமைகளில் இறந்தவர்களையும் வணங்குகின்றர்.

[தொகு] வீட்டு தெய்வம்

தங்கள் வீடுகளில் சிறுவயதில் இறந்த பெண்களையோ, கன்னிகளையோ வணங்கும் முறை தமிழ்நாட்டில் இருக்கிறது. இதனை வீட்டு தெய்வம் என்கின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இறைவி&oldid=1103607" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்