திருமால்
|
||||||||||||||||||||
திருமால் அல்லது விஷ்ணு இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களுள் ஒருவர். சிவனும், பிரம்மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது. விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்று அழைக்கப்படுகிறார். இந்துசமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
பொருளடக்கம் |
விஷ்ணுவின் அவதாரங்கள் [தொகு]
உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர்.
தசாவதாரம் [தொகு]
திருமாலும், திருமகளும் பாற்கடலில் தனித்திருக்கும் வேளையில் சில முனிவர்கள் விஷ்ணுவை காண வந்தார்கள். பக்த முனிவர்களை தடுத்தனர் இரு வாயிற்காவலர்கள். இறைவனின் தரிசனத்திற்கு வந்த தங்களை தடுத்தமையால் கோபம் கொண்ட முனிவர்கள் வாயிற்காவலர்களை கொடூர அசூரர்களாக பிறக்கும் படி சாபமிட்டனர். இதையறிந்த திருமால் தன்னுடைய வாயிற்காவலர்கள் அரக்கர்களாக பிறக்கும் போது, அவர்களை கொன்று தன்னை சரணடையும் படி செய்ததாக தசவதாரங்களுக்கு காரணம் சொல்லப்படுகிறது.
தசாவதரங்கள் என்று கூறப்படுவன,.
- மச்ச அவதாரம்
- கூர்ம அவதாரம்
- வராக அவதாரம்
- நரசிம்ம அவதாரம்
- வாமண அவதாரம்
- பரசுராம அவதாரம்
- இராம அவதாரம்
- பலராம அவதாரம்
- கிருஷ்ண அவதாரம்
- கல்கி அவதாரம்
வட இந்தியர் சிலர் பலராமருக்கு பதிலாக புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர். பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.
சிவனுடனான தொடர்பு [தொகு]
சைவக்கடவுளான சிவபெருமானின் மனைவியான சக்தியின் அண்ணன் என்று விஷ்ணு போற்றப்படுகிறார். அதன் காரணமாக சிவமைந்தர்களான விநாயகருக்கும், முருகனுக்கும் மாமனாக அறியப்படுகிறார்.
தாருகாவனத்தில் ரிஷிகளின் ஆணவத்தினை அடக்க சிவபெருமான் பிட்சாடனார் வடிவெடுத்து சென்றபோது, திருமால் மோகினி வடிவெடுத்து சென்றார். இவர்கள் இருவருக்கும் ஐயப்பன் பிறந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. [1]
மேற்கோள்கள் [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||