இசுடோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
படம்: இசுடோனால் ஒருங்கவைவு அமைக்கப்பட்ட நிவ்க்ளியோசொம் விளக்கும் படம்.

இசுடோன் என்பது நிறப்புரி யெய் சுருள் சுருளாக சுற்றி கட்டமைக்க பயன்படும் ஒரு புரதம் ஆகும். இசுடோனால் ஒருங்கவைவு அமைக்கப்பட்ட நிறப்புரிக்கு நிறமியன் எனப்பெயர். நிறமியனில் மரபணு பகுதிகள், மரபணுயற்ற மற்றும் துணை வரிசைகள் (gene coding, non-coding sequence and satellite sequences) என ஒரு நீண்ட மெல்லிய இழை அல்லது நூலான அமைப்பு ஆகும். மரபணுவற்ற எவ்வித முக்கியத்துவம் இல்லை என் முதலில் கருதப்பட்டது. பின் குறு ஆர்.என்.ஏ க்களின் கண்டுபிடிப்பால் அவைகளின் முக்கிய பணிகள் பற்றி அறியப்பட்டது. அனைத்து நிறப்புரியில் உள்ள டி.என்.ஏ க்களை, ஒரு மெல்லிய நூலாக பார்த்தோம் என்றால், அவைகள் மிக நீண்ட தொலைவில் செல்லும் தன்மை உடையது. ஒரு மர கம்பத்தில் சுற்றி இறுக்கப்பட்ட நூல் கண்டை போல், டி.என்.ஏ க்களை ஒரு சிறு உயிரணுக்களில் , அதுவும் உயிரணுவின் கருவில் சுற்றி இறுக்கப்பட்ட அமைப்பாக மாற்றும் தன்மை இசுடோனுக்கு உள்ளது. இசுடோன் புரதத்தில் அர்சினைன், லைசின் போன்ற நேர்மின்மம் கொண்ட அமினோ காடிகள் மிகையாக உள்ளதால், எளிதாக எதிர்மின்மம் கொண்ட நிறப்பிரியில் பிணைகின்றன. மேலும் இப்புரதம் மரபணு வெளிபடுதலை கட்டுப்படுத்துகின்றன. இப்புரதங்கள் மெய்க்கருவுயிரிகளில் ஒத்த ( Homology) புரத அமைப்பை கொண்டுள்ளது. இக்குறிப்பு படிவளர்ச்சியில் இப்புரதங்கள் ஒரு உயிரினத்தில் தோன்றியவை என உறுதிப்படுத்துகின்றன.

நடுவ இசுடோன்களால்  சுற்றி இறுக்கப்பட்ட சுருள் அமைப்பு.


வகைகள்: [தொகு]

இசுடோன் ஆறு வகைகளை கொண்டுள்ளது (H1, H2A, H2B, H3, H4, and H5). இவ்வாறும் மேலும் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.

௧. நடுவ இசுடோன் - core Histone- (H2A, H2B, H3 and H4 )

௨. இணைவி இசுடோன் - Linker Histone- ( H1 and H5 )

இணைவி இசுடோன்

எட்டு நடுவ இசுடோன் மூலக்கூறுகள் 146 இணை துகள்களை (146bp) இறுக்கமாக சுற்றி அமையும். இவ்வாறு அமையும் அமைப்புக்கு நிவ்க்ளியோசொம் (Necleosome) எனப்படும். பின் இணைவி இசுடோன் வெளிப்பகுதியில் 50 இணைதுகளுடன் (50bp) பிணைந்து ஒரு கட்டமைக்கப்பட்ட அமைப்பை ஏற்படுத்தும். இவ் அமைப்பிற்கு நிறமியன் எனப்பெயர்.இவ்வாறு அமைக்கப்பட்ட அமைப்பிற்கு முதனிலை அமைப்பு எனப்பெயர்.இரண்டாம் நிலை அமைப்பில் நிவ்க்ளியோசொம் அமைப்புகள் சுருள் சுருளகாக சுற்றி இறுக்கப்பட்ட அமைப்பாகும். இறுதி நிலையில் முழு அளவில் சுற்றி இறுக்கப்பட்ட இறுக்கமான ஒருங்கவைவு ஆகும்.


நிறமியன் ஒருங்கமைப்புகள் (Chromatin regulation): [தொகு]

இசுடோன் உற்பத்திக்கு பின், அதனின் அமைப்புகளில் பல மாற்றங்கள் நடைபெறும். இவைகளுக்கு புரத உற்பத்தி -பின் மாற்றங்கள் (Post-translation modification) எனப்பெயர். இம் மாற்றங்கள் இசுடோனின் நிறமியனில் பிணையும் ஆற்றலை பாதிக்க வல்லன. மேலும் இசுடோனில் ஏற்படும் மெத்தைலேற்றம், இசுடோன் அசிட்டைல்லேற்றம், அசிட்டைல்நீக்கம் (அல்லது அசிட்டைவிலக்கம்), யூபிக்கியுட்டினேற்றம் ( methylation, acetylation, deacetylation, phosphorylation, ubiquitination) போன்ற மாற்றங்கள் நிறமியனில் பிணையும் தன்மையெய் பாதிப்பவை. யுபிகுயிட்டிநேசன் என்பது புரத அழிவு நிகழ்வு ஆகும். அசிட்டைல்லேற்றம் என்பது மிகையான மரபணு வெளிபடுதலையும், அசிட்டைல்நீக்கம் என்னும் நிகழ்வு செயலற்ற நிறமியன் ஆகும் தன்மையெய் குறிக்கும். மேலும் பல புற்று நோய்களில் செயலற்ற நிறமியனை, செயலாக்க நிறமியனாக மாற்ற அசிட்டைல்நீக்கம் தடுப்பூட்டிகள் (Deacetylation inhibitor) என்னும் மருந்து கொடுக்கப்படுகின்றன. மேலும் இம்மருந்துகள் மூளையில் காயங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க வல்லன (எ.கா. வல்புரோயிக் காடி, சோடியம் பினைல் பியுட்ட்ரட், phenylbutyrate and valproic acid).

கலைச்சொற்கள்: [தொகு]

நிறப்புரி- Chromosome

நிறமியன்- chromatin

குறு ஆர்.என்.ஏ- micro RNA

மரபணு பகுதிகள்- gene coding region

மரபணு சாராப் பகுதி- gene non-coding region

துணை வரிசைகள்- satellite sequences

நடுவ இசுடோன்- core Histone

இணைவி இசுடோன் - Linker Histone

மெத்தைலேற்றம்-methylation,

இசுடோன் அசிட்டைல்லேற்றம், அசிட்டைல் நீக்கம்- histone acetylation and deacetylation

யூபிக்கியுட்டினேற்றம் அல்லது புரத அழிவு குறியீடு- ubiquitination

"http://ta.wikipedia.org/w/index.php?title=இசுடோன்&oldid=1353588" இருந்து மீள்விக்கப்பட்டது