குறு ஆர்.என்.ஏ
'குறு ஆர்.என்.''' எ''' ௨௧- ௨௨ (21-22 nucleotide) கரு அமிலம் அளவுள்ள, ஓரிழை உடைய ஆர்.என்.எ ஆகும். இவைகள் மரபணு வெளிப்படுதலின் அளவுகளை (gene expression) கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறது . இவை வளர்சிதை மாற்றங்கள் (developmental regulation), புற்றுநோய், இதய, மூளை தொடர்பான வளர்ச்சிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இதை பற்றிய மிகையான ஆய்வுகள் தற்பொழுது நடைபெறுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] உற்பத்தி மற்றும் முதிர்வாக்கம் (Formation and Processing)
இவைகள் பொதுவாக மரபணு அற்ற (non-coding region or introns) பகுதிகளான ஆர்.என்.எ வில் உருவாக்கம் செய்யப்படுகிறது. மரபு ஈரிழையில் இருந்து ரிபோ கரு அமிலம் நகலாக்கத்தில் மரபணு அற்ற பகுதிகள் நிறைந்து காணப்படும். இவைகள் முந்திய ஆர்.என். எ (precursor RNA or non-matured RNA) அல்லது முதிர்வற்ற ரிபோ கரு அமிலம் என அழைக்கப்படும். இந் முதிர்வற்ற ரிபோ கரு அமிலத்தில் நெகிழ்வு தன்மை மிகுந்து இருப்பதால், ஊசி-வளைவுகள் (stem-loop) உருவவாதொடு , தனக்குள்ளே இணைவுகளை ஏற்படுத்தி ஈரிழையான அமைப்புகளை உருவாக்குகின்றன. இவ் ஈரிழை அமைப்புகளை இட்ரோச (Drosha) என்ற நொதி வெட்டி ௭௦ (70 nucleotide) அளவுள்ள முந்திய குறு ஆர்.என்.எ (pre-miRNA or pre microRNA) உருவாக்குகிறது. இவைகள் உட்கருவில் இருந்து சைடோப்லசம் கடத்தப்பட்டு, 21-22 அளவுள்ள குறு ஆர்.என்.எ வாக முதிர்வாக்கம் செய்யப்படுகிறது. இதற்க்கு டைசர், எக்ஸ்போர்டின் (Dicer, Exportin) போன்ற நொதியும், காரணியும் செயலாற்றுகிறது. குறு ஆர்.என்.எ பல புரதங்களோடு சேர்க்கப்பட்டு (Argonate and Fragmentation retardation protein) ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை (RISC, RNA-induced silencing complex) மாற்றப்பட்டு, மரபணு அளவை (gene expression ) குறைக்கின்றன.
[தொகு] செயலாக்கம் (Mechanisms)
குறு ஆர்.என்.எ தாவரங்களிலும், விலங்குகளிலும் இரு வகையான செயலாக்கத்தின் படி மரபணு அளவை குறைக்கின்றன. சில வேளைகளில் விலங்குகளில் , இரு வகையான முறைகளாலும் மரபணு அளவை குறைப்பதற்கு சில ஆதாரங்கள் உள்ளன என்றாலும், அவைகள் ஒரு சிலனவே உள்ளது.
தாவரங்களில் குறு ஆர்.என்.எ , தனக்கு உரிய செய்தி ஆர்.என்.எ க்களில் (target mRNA) மிக நேர்த்தியான (perfect complementarity) பிணைப்புகளை கொண்டுள்ளதால், முழுமையான மரபணு வெளிப்படுத்தலை கட்டுக்குள் கொண்டுவருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு முழுமையான அழிவு ஆர்.என்.எ அளவில் முடிக்கப்படும் (post-transcription level).
விலங்குகளில் குறு ஆர்.என்.எ, தனக்கு உரிய செய்தி ஆர்.என்.எ க்களில் (target mRNA at 3' UTR) மிக குறைவான (imperfect complementarity) பிணைப்புகளை கொண்டுள்ளதால், இவைகள் குறிபிட்ட மரபணுவின் (target mRNA) புரத சேர்க்கையேய் உற்பத்தியெய் தடுக்குகின்றன (blocking the protein translation). இவ்வழியாக குறு ஆர்.என்.எ அளவுகளில் (ஏற்றமோ அல்லது இறக்கமோ) சிறிய அளவுகளில் மாற்றம் ஏற்ப்பட்டாலும், ஒரு மரபணு அளவுகளில் ஏற்படும் மாற்றங்களினால் இடர்வுகள் ஏற்படுகின்றன.
[தொகு] காணும் முறைகள்
நார்தர்ன் படிவு- Northern blot
மாற்றப்பட்ட அளவு காண்- பி.சி.ஆர் - (modified qRT-PCR)
குறு ஆர்.என்.ஏ குறு வரிசை- miRNA micro array
[தொகு] வெளி இணைப்புகள்
http://microrna.sanger.ac.uk/sequences/ http://mami.med.harvard.edu/