பேச்சு:இசுடோன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகிழ்நன், வியப்பூட்டும் செய்திகள் அடங்கிய கட்டுரை. Histone என்னும் புரதப்பொருள்தானே இது? ஆங்கில விக்கியில் கீழ்க்காணுமாறு எழுதியுள்ளார்கள்: In biology, histones are the chief protein components of chromatin. They act as spools around which DNA winds, and they play a role in gene regulation. Without histones, the unwound DNA in chromosomes would be very long. For example, each human cell has about 1.8 meters of DNA, but wound on the histones it has about 90 millimeters of chromatin, which, when duplicated and condensed during mitosis, result in about 120 micrometers of chromosomes.[1] இங்கே 1.8 மீட்டர் நீளம் என்கிறார்களே. இது வேறா? விளக்க வேண்டுகிறேன். என்னுடைய குறைக்கடத்திக் கருவித் (semiconductor devices) துறையில் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் (தொகுசுற்று) கட்டைவிரல் நகம் அளவுள்ள சிலிக்கான் சில்லில் கிலோமீட்டர் நீளம் உள்ள மின்கடத்தி "இழை"கள் இருக்கும். அதுவே பெரும் வியப்பாக இருக்கும். நீங்கள் புவியில் இருந்து நிலா வரையிலும் நீளும் என்று கூறும் செய்தியை உறுதிப்படுத்த வேண்டுகிறேன். புவிக்கும் நிலாவுக்கும் இடையே சராசரியாக 384,403 கி.மீ உள்ளது. எத்தனை மரபணுக்கள் இருக்கும் என்பன போன்ற கணக்குகள் வழி இதனை சரி பார்க்கலாம்--செல்வா 03:41, 30 ஜூலை 2009 (UTC).

thanks selva,

I will verify this. I am sure that it is not 1.8 meters. If you look the whole chromosomal (24pair or 48 monomer) DNA length (as a thread), certainly it will reach moon. i think i studied from molecular biology written by Kline Smith. Tomorrow i will verify about this and change.

thanks

நன்றி மகிழ்நன். --செல்வா 04:22, 30 ஜூலை 2009 (UTC)

சில வேதியியல் சொற்களின் தமிழாக்கம்[தொகு]

மெத்திலேசன், அசிட்டிலேசன் , டிஅசிட்டிலேசன், யுபிகுயிட்டிநேசன் ( methylation, acetylation, deacetylation phosphorylation, ubiquitination) என்பதை விட இவற்றை மெத்தைலேற்றம், அச்சிட்டைலேற்றம், அசிட்டைல்நீக்கம் (அல்லது அசிட்டைவிலக்கம்), யூபிக்கியுட்டினேற்றம் எனலாம் அல்லவா. மெத்தைல் குழுவை சேர்ப்பதுதானே மெத்தைலேசன். ஆக்சிசனேற்றம் என்பது போல இவை பல்வேறு வேதி வினைக்குழுக்களை ஏற்றுவது அல்லது நீக்குவது தானே? இதே போல deacetylase என்பதைக் கூட அசிட்டைல்நீக்கு நொதி எனலாம். -ஏசு என்று முடியும் பொருள்கள் நொதிகள். -ஏசன் (-ation) என்று முடியும் சொற்கள் அவ்வவ் வேதி வினைக்குழு ஏற்றத்தைக் குறிக்கும். இக் கருத்துகளை எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன். இப்படி ஏற்றம், நீக்கம், நொதி என்னும் சொற்களின் பயன்பாட்டால் என்ன நிகழ்கின்றது என சட்டென விளங்கிக்கொள்ளலாம். --செல்வா 18:28, 30 ஜூலை 2009 (UTC)

இசுட்டோன்?[தொகு]

இசுட்டோன்?--ரவி 06:15, 31 ஜூலை 2009 (UTC)

ஆம் இது இசுட்டோன் என்று இருக்கலாம், ஆனால், Stone என்பதோடு முரணும். எப்படி ஆங்கிலத்தில் வல்லி, வள்ளி அல்லது வலை-வளை என்பதை வேறுபடுத்திக்காட்ட முடியாதோ, அது போல இதுவும் ஒன்று என்று கொள்ளலாம். வேண்டும் எனில் இஃகிசுட்டோன் (ஒலிப்பு ihisutone)- இதில் இடையே வரும் "சு" குற்றியலுகரமாக வழங்கும். இப்படி பெய்யொலிகளுக்கு இடையே உயிரொலி பெய்து எழுதுவது தமிழ் இயல்பு. இஃகிட்டோன் என்றும், காற்றொலி சகரத்தை விட்டுவிட்டும், கூறலாம். ஆகசுட்டு (August) என்பதை பேரா. மு. இளங்கோவன் போன்றவர்கள் ஆகத்து என்று தமிழ்ப்படுத்துகிறார்கள். அதுவும் நல்ல முறை. --செல்வா 15:46, 31 ஜூலை 2009 (UTC)

கலைச்சொல்[தொகு]

செய்மதி வரிசைகள்- satellite sequences என்பதை துணை வரிசைகள், கிளை வரிசைகள் என்பது போல பொருத்தமான ஒன்றால் குறிக்க வேண்டும். செய்மதி என்பது நிலாவைக் போல செயற்கையாக புவியைச் சுற்றி வரும் கலத்துக்கு மட்டுமோ அல்லது அது போல பிறகோள்களைச் சுற்றி வர செலுத்தப்படும் செயற்கைத் துணைக்கோள்களை மட்டுமோதான் குறிப்பது சரியாக இருக்கும். செய்மதி என்பது உள்ள செய் என்பது செயற்கை என்பதால் இங்கே செய்மதி பொருந்தாது. செய்மதி என்பது செயற்கைத் துணைக்கோள். எனவே துணை--> துணை வரிசைகள் என்னும் சொல்லாட்சி சரியான பயன்பாடாக இருக்கும் என நினைக்கிறேன். எண்ணிப்பாருங்கள்.--செல்வா 15:46, 31 ஜூலை 2009 (UTC)

அன்பின் செல்வா நான் சிறு பிள்ளை. மேலும் அபபடியே ஆங்கில வார்த்தைகளை நேரடியாக நம் தமிழுக்கு மாற்றுவது என்பதும் சரியாகபடாது. மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு சொல்லும் பொருளுடன், தூய தமிழுடன் இருந்தால் மிக்க மகிழ்ச்சியே.. முடிவில் அணியாவது நம் தமிழ் தான். --Munaivar. MakizNan 21:54, 31 ஜூலை 2009 (UTC)

நாம் எல்லோருமே அப்படித்தான், மகிழ்நன். நாம் கற்றுக்கோண்டிருக்கும் வரை நாம் வாழ்கிறோம். மேலும் மேலும் இயன்றவாறு செப்பம் சேர்த்துக் கொண்டே போவதும் நல்லதுதானே? --செல்வா 13:45, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
இன்னொன்று மகிழ்நன், "மரபணுயற்ற பகுதிகள்- gene non-coding region" என்னும் கலைச்சொல்லை. மரபணு சாராப் பகுதி(/தொடர்) எனலாமா? இன்னும் ஒன்று. அசிட்டைல் ஏற்றம் என்று பிரித்து எழுத வேண்டும் அல்லது அசிட்டைலேற்றம் எனறு சேர்த்து எழுத வேண்டும்.--செல்வா 13:45, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

வழிமொழிகிறேன்

--Munaivar. MakizNan 13:50, 1 ஆகஸ்ட் 2009 (UTC)

நன்றி மகிழ்நன். --செல்வா 14:00, 1 ஆகஸ்ட் 2009 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இசுடோன்&oldid=411086" இலிருந்து மீள்விக்கப்பட்டது