இசுடோன் அசிட்டைல்லேற்றமும் அசிட்டைல் நீக்கமும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசுடோன் அசிட்டைல்லேற்றமும் அசிட்டைல் நீக்கமும் (Histone acetylation and deacetylation) என்பது இசுடோன் புரதத்தின் லைசின் அமினோ காடியில் ஏற்படும் மாற்றம் ஆகும். இசுடோன் அசிட்டைல்லேற்றம் அசிட்டைல்டிரன்சுபெரசு (HAC, Histone acetyltransferase) என்னும் நொதியும் அசிட்டைல்நீக்கத்தை இசுடோன் டிஅசிட்டேலேசு (HDAC, Histone deacetylase) என்ற நொதியும் மாற்ற வினையில் ஈடுபடுகின்றன. அசிட்டைல்லேற்றத்தால் இசுடோன் புரதம் எதிர்மின்மம் கொண்டவையாக மாறிவிடும். இதனால் எதிர்மின்மம் கொண்ட நிறப்புரியில் தளர்வு நிலையேய் இசுடோன் அடைவதால் மிகையான மரபணு வெளிப்படும். மாறாக அசிட்டைல்நீக்கத்தால் இசுடோன் நேர்மின்மத்தோடு, எதிர்மின்மத்தை கொண்ட நிறப்புரியில் இறுக்கமான அமைப்பை உருவாக்குவதால் மரபணு வெளிப்பாடு மட்டுபடுத்தப்படும்.