அரேபிய ஐந்து விரல் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரேபிய ஐந்து விரல் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
யூ. எஹ்ரென்பெர்கி
இருசொற் பெயரீடு
யூப்லிக்டிசு எஹ்ரென்பெர்கி
பீட்டர்சு, 1863
வேறு பெயர்கள் [2]

இராணா எஹ்ரென்பெர்கி பீட்டர்சு, 1863
இராணா சையனோபிலிக்டிசு சிற். எஹ்ரென்பெர்கி பார்க்கர், 1941

யூப்லிக்டிசு எஹ்ரென்பெர்கி (Euphlyctis ehrenbergii) என்பது அரேபிய ஐந்து விரல் தவளை அல்லது அரேபியச் சறுக்கு தவளை என்று அழைக்கப்படுகிறது. இது டைகுரோகுளோசிடே குடும்பத்தில் உள்ள யூப்லிக்டிசு பேரினத்தினைச் சார்ந்த தவளைச் சிற்றினம் ஆகும். இது சவூதி அரேபியா மற்றும் யெமனில் உள்ள தென்மேற்கு அரேபியத் தீபகற்பத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். இது யூப்லிக்டிசு சயனோபிலிக்டிசின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது இது தனிச் சிற்றினமாகக் கருதப்படுகிறது.[2] எஹ்ரென்பெர்கி என்ற சிற்றினப் பெயர் கிறிஸ்டியன் காட்பிரைட் எஹ்ரென்பெர்க் (1795-1876), எனும் செருமனிய இயற்கை விஞ்ஞானியைக் கௌரவப்படுத்தும் வகையில் இடப்பட்டது.[3]

யூ. எஹ்ரென்பெர்கி யேமன் மற்றும் சவுதி அரேபியாவின் செங்கடல் கடற்கரையில் நிரந்தர மற்றும் தற்காலிக நீர்ப் பகுதிகளில் காணப்படுகிறது. இது பாசனப் பகுதிகளிலும் காணப்படலாம்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Theodore Papenfuss, Steven Anderson, Sergius Kuzmin, Andrew Gardner (2004). "Euphlyctis ehrenbergii". IUCN Red List of Threatened Species 2004: e.T58261A11758492. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58261A11758492.en. https://www.iucnredlist.org/species/58261/11758492. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2018). "Euphlyctis ehrenbergii (Peters, 1863)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
  3. Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2013). The Eponym Dictionary of Amphibians. Pelagic Publishing. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-907807-42-8. https://books.google.com/books?id=QJY3BAAAQBAJ&pg=PA62. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரேபிய_ஐந்து_விரல்_தவளை&oldid=3420140" இலிருந்து மீள்விக்கப்பட்டது