அந்தராக்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தராக்னி
Antaragni
நிகழ்நிலைசெயலில்
வகைகலாச்சார திருவிழா
காலப்பகுதிவருட
நிகழ்விடம்இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூர்
அமைவிடம்(கள்)கான்பூர்
நாடுஇந்தியா
இயக்கத்திலுள்ள ஆண்டுகள்1965–முதல்
துவக்கம்1965; 59 ஆண்டுகளுக்கு முன்னர் (1965)
மிக அண்மைய8 ஏப்ரல் 2022 – 10 ஏப்ரல் 2022
வருகைப்பதிவு130,000+ (2019)
புரவலர்கள்இந்தியத் தொழில்நுட்பக் கழகம், கான்பூர்
மாணவர்கள்
வலைத்தளம்
antaragni.in

அந்தராக்னி (Antaragni)(பொருள்:"நெருப்பு உன்னுள்") என்பது கான்பூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் நடைபெறும் வருடாந்திர கலாச்சார விழாவாகும். இந்த விழா வழக்கமாக அக்டோபர் மாதத்தில் நடைபெறும்.[1] 1965ஆம் ஆண்டு முதல் நான்கு நடக்கும் விழாவாக இது நடைபெறுகிறது. இத்திருவிழாவின் போது இந்தியாவிலுள்ள 350 கல்லூரி மாணவர்கள் பங்கேற்கின்றன. அண்மைக்காலத்தில் பார்வையாளர்களையும் பல ஆண்டுகளாக ஊடக கவனத்தையும் ஈர்த்துள்ளது.[2] இது தொழில்முறை நிகழ்ச்சிகள், போட்டிகள், இசை நிகழ்ச்சிகள், டிஸ்கோ ஜாக்கி, அழகு நயப்புக் காட்சி, இந்திய நாட்டுப்புற நடனங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

2006ஆம் ஆண்டு அந்தராக்னியில் விசுவ மோகன் பட் நிகழ்ச்சி நடத்தினார்

அந்தராக்னி 1965-ல் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார நிகழ்வாகத் தொடங்கியது. திருவிழா தொடங்கப்பட்ட 27 ஆண்டுகளுக்குப் பிறகு, 1993ஆம் ஆண்டில் கல்பெசுட் என்பதிலிருந்து அந்தராக்னி எனப் பெயர் மாற்றப்பட்டது.  திருவிழா முழுக்க முழுக்க இதொக கான்பூர் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படுகிறது.[3] அந்தராக்னி குழுவின் தலைவராக ஆசிரியர் ஒருவர் செயல்படுவார்.  350க்கும் மேற்பட்ட இந்தியக் கல்லூரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளன.

சிறப்பு நிகழ்ச்சிகள்[தொகு]

  • 2006 – விசுவ மோகன் பட், அசுடாட் டெபூ.[4]
  • 2016 – மைக் கேண்டிசு, சார்டெக், பேய் உயிர்த்தெழுதல், மேட்பாய் மிங்க், அட்னான் சாமி.[5]
  • 2017 – டி.ஜெ. கேஎசுஎச்எம்ஆர், விசால்-சேகர், யூபோரியா, இசுகைகார்போர்
  • 2018 – அமித் திரிவேதி, டிஜெ குயின்டினோ, தி லோக்கல் ட்ரயின், குத்ரி கோவன்
  • 2019 – சங்கர் மகாதேவன், எஹ்சான் நூரானி, லாய் மென்டோன்சா
  • 2020 - நகைச்சுவை நடிகர்கள் அபிஷேக் உப்மன்யு, ஆகாஷ் குப்தா, மற்றும் ஹர்ஷ் குஜ்ரால் ; தி யெல்லோ டைரி மற்றும் சோனு நிகம் இசையமைப்பாளர்கள்
  • 2021 – ரித்விசு, சுனிதி செளஹான்

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்[தொகு]

  • இந்தியா ஊக்கமூட்டுகிறது- அரசியல்வாதிகள், தலைவர்கள் மற்றும் ஊடகப் பிரமுகர்களை உள்ளடக்கிய அரசியல் மன்றம்.[6] இளைஞர்களின் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து சமூக தொடர்புடைய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. கடந்த ஆண்டுகளில், மாணவர் சமூகத்தின் பங்கேற்பைக் கண்டது. இந்த நிகழ்வின் பேச்சாளர்களில் தெலுங்கு திரைப்பட இயக்குநர் சேகர் கம்முலா, மத்திய இடைநிலை கல்வி நிறுவனத் தலைவர் வினீத் ஜோஷி மற்றும் நடிகை, பாடகி மற்றும் சமூக ஆர்வலர் வசுந்தரா தாஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
  • கவி சம்மேளனம் - கவிதைப் போட்டி. இதில் ஓவியர், பேராசிரியர், கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர் ரஹத் இந்தோரி மற்றும் கவிஞர் கிர்த்தி காலே உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
  • திரைப்பட தயாரிப்பு போட்டிகள் - நடுவர்களாக அப்பாஸ் டைரேவாலா மற்றும் லவ் ரஞ்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
  • இந்தி இலக்கிய நிகழ்வுகள் - நடுவர்களில் இந்தி எழுத்தாளர்கள் நசிரா ஷர்மா, லீலாதர் ஜகுடி மற்றும் ரவீந்திர பிரபாத் ஆகியோர் அடங்குவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. RnM Team (23 October 2007). "Big FM ties up with IIT Kanpur's annual festival- Antaragni 07". Radioandmusic.com. பார்க்கப்பட்ட நாள் 14 September 2010.
  2. Rao Jaswant Singh (27 October 2007). "Antaragni spreads at IIT, Kanpur". Expressindia.com. Archived from the original on 25 October 2008. பார்க்கப்பட்ட நாள் 14 September 2010.
  3. "Nominations: Core Team, Antaragni'14 | Students' Senate, IIT Kanpur". students.iitk.ac.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 8 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 10 October 2018.
  4. HT Correspondent (27 October 2006). "Antaragni-06 from Nov 2". Hindustantimes.com. Archived from the original on 25 January 2013. பார்க்கப்பட்ட நாள் 14 September 2010.
  5. "Antaragni to begin at IIT-K from October 20 - Times of India". http://timesofindia.indiatimes.com/city/kanpur/Antaragni-to-begin-at-IIT-K-from-October-20/articleshow/54930530.cms. "Antaragni to begin at IIT-K from October 20 - Times of India". The Times of India. Retrieved 7 February 2017.
  6. "Vote Politics hitting Democracy", Hindustan Times (2008.10.26, Kanpur, pg 5)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தராக்னி&oldid=3682798" இலிருந்து மீள்விக்கப்பட்டது