இந்திய மேலாண்மை கழகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மேலாண்மை கழகங்கள் (இ.மே.க) (ஐ.ஐ.எம்), இந்தியாவிலுள்ள சிறப்பான பட்டமேற்படிப்பு மேலாண்மை பள்ளிகளாகும்.அவை மேலாண்மை கல்வி வழங்குவது, ஆய்வுகள் மேற்கொள்வதுடன் இந்திய பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் மேலாண்மை தொடர்பான கருத்துரைகள் வழங்கி வருகின்றன. இந்திய மாணவர்களில் அறிவில் சிறந்தவர்களைக் கண்டெடுத்து அவர்களுக்கு உலகின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வியை அளித்து இந்திய பொருளாதாரத்தின் பல துறைகளிலும் சிறப்பான வழிகாட்டிடும் மேலாளர் வளத்தை அமைத்திடும் நோக்கத்துடன் இந்திய அரசு|இந்திய அரசால் இக்கழகங்கள் உருவாக்கப்பட்டன.[1] இ.மே.கழகங்கள் நாட்டின் தலைசிறந்த மேலாளர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பதுடன் உருவாகும் புதிய துறைகளிலும் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறது.[1] இவை உலகின் தலைசிறந்த மேலாண்மை கல்விக்கூடங்களுக்கிணையாக கல்வி வழங்கல், ஆய்வுகள் மற்றும் தொழில்முறை கருத்துரைகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மை பள்ளிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.[2] இக்கழக முன்னாள் மாணவர்கள் உலகளவில் தமது தரத்தை நிலைநாட்டியுள்ளனர்.

அனைத்து இ.மே.கழகங்களும் நடுவண் அரசின் உடமைகளாக நிதி பெற்று முழுமையான தன்னாட்சி பெற்ற கல்விக்கூடங்களாக விளங்குகின்றன.அவை நிறுவப்பட்ட வரிசையில் அமைந்துள்ள இடங்கள்: கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, லக்னோ, கோழிக்கோடு, இந்தூர் மற்றும் சில்லாங்.இவை முதுகலை வணிக நிர்வாகம்|MBAவிற்கு இணையான பட்டமேற்படிப்பு மேலாண்மை பட்டயங்களை (PGDIM)வழங்குகின்றன. இவற்றின் பெல்லோஷிப் பட்டங்கள் முனைவர் பட்டத்திற்கிணையானவை.இவை கட்டமைக்கப்பட வணிகத்துறையன்றி பிற வணிக மற்றும் மேலாண்மை செய்யப்படாத துறைகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு விவசாயம்,ஊரக வளர்ச்சி,பொது வினியோக அமைப்பு, ஆற்றல், நலக்கல்வி, இருப்பிடங்கள் என பல்வேறு துறைகளில் முன்னேற்ற வழிகளுக்கான கருத்துரைகள் வழங்கி வருகிறது.

இந்திய மேலாண்மை கழகங்களின் அமைவிடம்[தொகு]

இந்தியா முழுவதுமுள்ள 13 இந்திய மேலாண்மை கழகங்களின் (இ.மே.க)(ஐ.ஐ.எம்) பட்டியல்

இந்திய மேலாண்மை கழகம் (நிறுவப்பட வரிசையில்)
சீர் எண் தமிழ்ப் பெயர் ஆங்கிலப் பெயர் குறுகிய பெயர் துவங்கப்பட்ட ஆண்டு இருப்பிடம் மாவட்டம் மாநிலம் அதிகாரப்பூர்வ இணையத்தளம்
1 இந்திய மேலாண்மை கழகம் கொல்கத்தா Indian Institute of Management Calcutta IIM-C 1961 ஜோகா, கொல்கத்தா கொல்கத்தா மாவட்டம் மேற்கு வங்காளம் iimcal.ac.in
2 இந்திய மேலாண்மை கழகம் அகமதாபாத் Indian Institute of Management Ahmedabad IIM-A 1961 வசுதிரபூர், அகமதாபாத் அகமதாபாத் மாவட்டம் குஜராத் iima.ac.in
3 இந்திய மேலாண்மை கழகம் பெங்களூரு Indian Institute of Management Bangalore IIM-B 1973 பிலேகஹல்லி, பெங்களூரு பெங்களூரு நகர மாவட்டம் கருநாடகம் iimb.ac.in
4 இந்திய மேலாண்மை கழகம் லக்னோ Indian Institute of Management Lucknow IIM-L 1984 லக்னோ லக்னோ மாவட்டம் உத்தரப் பிரதேசம் iiml.ac.in
5 இந்திய மேலாண்மை கழகம் கோழிக்கோடு Indian Institute of Management Kozhikode IIM-K 1996 கோழிக்கோடு கோழிக்கோடு மாவட்டம் கேரளம் iimk.ac.in
6 இந்திய மேலாண்மை கழகம் இந்தூர் Indian Institute of Management Indore IIM-I 1998 இந்தூர் இந்தூர் மாவட்டம் மத்தியப் பிரதேசம் iimidr.ac.in
7 இந்திய மேலாண்மை கழகம் சில்லாங் Indian Institute of Management Shillong IIM-S 2007 நோங்திம்மை, சில்லாங் கிழக்கு காசி மலை மாவட்டம் மேகாலயா iimshillong.ac.in
8 இந்திய மேலாண்மை கழகம் ரோதக் Indian Institute of Management Rohtak IIM-R 2010 ரோதக் ரோதக் மாவட்டம் அரியானா iimrohtak.ac.in
9 இந்திய மேலாண்மை கழகம் ராஞ்சி Indian Institute of Management Ranchi IIM-Ranchi 2010 ராஞ்சி ராஞ்சி மாவட்டம் சார்க்கண்ட் iimranchi.ac.in
10 இந்திய மேலாண்மை கழகம் ராய்ப்பூர் Indian Institute of Management Raipur IIM-Raipur 2010 ராய்ப்பூர் ராய்ப்பூர் மாவட்டம் சத்தீசுகர் iimraipur.ac.in
11 இந்திய மேலாண்மை கழகம் திருச்சிராப்பள்ளி Indian Institute of Management Tiruchirappalli IIM-T 2011 துவாக்குடி,திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ்நாடு iimtrichy.ac.in
12 இந்திய மேலாண்மை கழகம் உதய்ப்பூர் Indian Institute of Management Udaipur IIM-U 2011 உதயப்பூர் உதயப்பூர் மாவட்டம் இராச்சசுத்தான் iimu.ac.in
13 இந்திய மேலாண்மை கழகம் காஷிப்பூர் Indian Institute of Management Kashipur IIM-Kashipur 2011 காஷிப்பூர் உதம் சிங் நகர் மாவட்டம் உத்தராகண்டம் iimkashipur.ac.in

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Technical Education". Archived from the original on 2009-01-22. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23.
  2. "The Hindu : Buzzing about a B-school". Archived from the original on 2009-11-26. பார்க்கப்பட்ட நாள் 2009-12-23. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

இதனையும் பார்க்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]