ஸ்ரீகுப்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீகுப்தர்
நிறுவனர், குப்த வம்சம்
ஆட்சிக்காலம்கி பி 240-2800
பின்னையவர்கடோற்கஜன்
குழந்தைகளின்
பெயர்கள்
கடோற்கஜன்
அரசமரபுகுப்த வம்சம்

ஸ்ரீகுப்தர் (Śri Gupta) (ஆட்சிக் காலம்:கி பி 240- 280)[1]வட இந்தியாவில் கப்த வம்சத்தை நிறுவியர் ஆவார். வடக்கு அல்லது நடு வங்காளமே குப்தர்களின் தாயகமாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இரண்டாம் சந்திரகுப்தரின் மகள் பிரபாவதி குப்தரின் கல்வெட்டுக் குறிப்புகளின் படி, மன்னர் ஸ்ரீகுப்தர், குப்த வம்சத்தை நிறுவியதாக அறியப்படுகிறது.

நாளாந்தா பல்கலைக் கழகத்தில் பௌத்த சமயக் கல்வி கற்க, சீனாவிலிருந்து வரும் பௌத்த பிக்குகள் தங்குவதற்கான, ஸ்ரீகுப்தர் நாளந்தாவிற்கு அருகில் மிருகசிகாவனம் (Mṛgaśikhāvana) எனும் பௌத்த விகாரை ஒன்று கட்டிக் கொடுத்து, அருகில் உள்ள 40 வருவாய் கிராமங்களையும் இவ்விகாரைக்கு தானமாக வழங்கினார் என, கி பி 690-இல் நாளாந்தாவிற்கு வருகை புரிந்த சீன பௌத்த அறிஞர் யிஜிங் (Yijing) தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.[2]:35

சமயம்[தொகு]

ஸ்ரீகுப்தர் வைணவ சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும், தமது இராச்சியத்தில் சமணம் மற்றும் பௌத்த சமயங்களின் நடவடிக்கைகளை ஆதரித்தார்.[2]:44

மேற்கோள்கள்[தொகு]

  1. Mookerji, Radha Krishna. (1995). The Gupta Empire (5th ed.). Motilal Banarsidass. p. 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120804401.
  2. 2.0 2.1 Narain, A.K. (1983). Bardwell L. Smith (ed.). Essays on Gupta Culture: Religious Policy and Toleration in Ancient India with Particular Reference to the Gupta Age. Motilal Banarsidass Publications. pp. 17–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8364-0871-3. பார்க்கப்பட்ட நாள் 29 September 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீகுப்தர்&oldid=3415099" இலிருந்து மீள்விக்கப்பட்டது