உள்ளடக்கத்துக்குச் செல்

வானீல ஈபிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானீல ஈபிடிப்பான்
வானீல ஈபிடிப்பான் படம் ரிச்சர்டு பவுடெலர் சார்ப்பி, 1888
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
யூட்ரிகோமியாசு

மெய்சி, 1939
இனம்:
யூ. ரோலேயி
இருசொற் பெயரீடு
யூட்ரிகோமியாசு ரோலேயி
மெய்யர், 1878
வேறு பெயர்கள்

ஜியோசெபாலசு ரோலேயி

வானீல ஈபிடிப்பான் (Cerulean flycatcher)(யூட்ரிகோமியாசு ரோலேயி) நடுத்தர அளவிலான (18 செ.மீ. நீளம்), பிரகாசமான நீல நிற இறகுகளுடன் கூடிய நீல குருவியாகும். இது ஒரு வெள்ளை கண்வளையத்துடன், அடர் பழுப்பு கருவிழி, நீலம் கலந்த கருப்பு அலகு மற்றும் வெளிர் நீல-சாம்பல் அடிப்பகுதியினை கொண்டது. இளஞ்சிவப்பு நிறத்தில் குட்டையான வால் மற்றும் சாம்பல் நிற அடிப்பகுதியைக் கொண்டுள்ளது. இது யூட்ரிகோமியாசு என்ற பேரினத்தின் ஒரே உறுப்பினராக இருந்தது. இது ஒரு மோனார்க் ஈபிடிப்பானை ஒத்திருந்தாலும், இது உண்மையில் விசிறிவால் குருவிகளுடன் தொடர்புடையது.

வகைப்பாட்டியல்

[தொகு]

இதனுடைய விலங்கியல் பிரித்தானிய ஆய்வாளர் மற்றும் பறவையியல் வல்லுநரான ஜார்ஜ் டாசன் ரவுலியின் நினைவாக இடப்பட்டது. வானீல ஈபிடிப்பான் முதலில் ஜியோசெபசு பேரினத்தில் விவரிக்கப்பட்டது. மேலும் சமீபகாலம் வரை வானீல அரசவால் ஈபிடிப்பான் என்று அறியப்பட்டது. இதனுடைய வேறு பெயர்களாக ரவுலியின் ஈபிடிப்பான் மற்றும் ரவுலியின் அரசவால் ஈபிடிப்பான் ஆகியவை உள்ளன. ஆரம்பத்தில் மோனார்க்கிடேயில் வகைப்படுத்தப்பட்டாலும், 2017ஆம் ஆண்டு டி.என்.ஏ. வரிசைமுறை ஆய்வில், இது ரைபிதுரிடே (விசிறிவால் குருவி) உறுப்பினராக கண்டறியப்பட்டு, இது கீட்டோரிங்கசு மற்றும் லாம்ப்ரொலினே உடன் துணைக் குடும்பமான ரைபிதுரிடேயில் (சில நேரங்களில் ஒரு தனித்துவமான குடும்பமாக கருதப்படுகிறது) வகைப்படுத்தப்பட்டது.[2] இந்த வகைப்பாட்டினை பன்னாட்டு பறவையிலாளர்கள் சங்கம் ஏற்றுக்கொண்டது. இந்த சிற்றினமானது "வானீல அரசவால் ஈபிடிப்பான்" என்பதிலிருந்து "வானீல ஈபிடிப்பான்" என்று மறுபெயரிட்டார்.[3]

பரவல்

[தொகு]

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசிக்கு அப்பால் உள்ள சாங்கிஹே தீவில் வானீல ஈபிடிப்பான் காணப்படுகிறது. முன்னர் 1873-ல் சேகரிக்கப்பட்ட ஒற்றை மாதிரியிலிருந்து மட்டுமே அறியப்பட்டது. இந்த அரிய பறவை அக்டோபர் 1998-ல் தெற்கு சங்கிஹேவில் உள்ள சஹேந்தருமான் மலையின் காடுகள் நிறைந்த பள்ளத்தாக்குகளைச் சுற்றி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

நடத்தை மற்றும் சூழலியல்

[தொகு]

உணவு

[தொகு]

வானீல ஈபிடிப்பானின் உணவில் முக்கியமாகப் பூச்சிகள் மற்றும் பிற சிறிய முதுகெலும்புகள் உள்ளன.

அச்சுறுத்தல்கள்

[தொகு]

தற்போதைய வாழ்விட இழப்பு, இதன் எண்ணிக்கை அளவு மற்றும் வரையறுக்கப்பட்ட வரம்பு ஆகியவற்றின் காரணமாக, வானீல ஈப்பிடிப்பான் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின், செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் மிக அருகிய இனமாக மதிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2018). "Eutrichomyias rowleyi". IUCN Red List of Threatened Species 2018: e.T22707085A134416536. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22707085A134416536.en. https://www.iucnredlist.org/species/22707085/134416536. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. Jønsson, Knud Andreas; Blom, Mozes P.K.; Päckert, Martin; Ericson, Per G.P.; Irestedt, Martin (March 2018). "Relicts of the lost arc: High-throughput sequencing of the Eutrichomyias rowleyi (Aves: Passeriformes) holotype uncovers an ancient biogeographic link between the Philippines and Fiji" (in en). Molecular Phylogenetics and Evolution 120: 28–32. doi:10.1016/j.ympev.2017.11.021. பப்மெட்:29199105. 
  3. "Taxonomic Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-14.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வானீல_ஈபிடிப்பான்&oldid=3925696" இலிருந்து மீள்விக்கப்பட்டது