உள்ளடக்கத்துக்குச் செல்

யூரியா நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரியா நைட்ரேட்டு
Structural formulae of the ions in urea nitrate
Ball-and-stick models of the ions in urea nitrate
இனங்காட்டிகள்
124-47-0 N
ChemSpider 29035 N
InChI
  • InChI=1S/CH4N2O.HNO3/c2*2-1(3)4/h(H4,2,3,4);(H,2,3,4) N
    Key: AYTGUZPQPXGYFS-UHFFFAOYSA-N N
  • InChI=1/CH4N2O.HNO3/c2*2-1(3)4/h(H4,2,3,4);(H,2,3,4)
    Key: AYTGUZPQPXGYFS-UHFFFAOYAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31295
  • C(=O)(N)N.[N+](=O)(O)[O-]
பண்புகள்
CH5N3O4
வாய்ப்பாட்டு எடை 123.068 கி/மோல்
அடர்த்தி 1.69 கி/செமீ3
உருகுநிலை 163 °C (325 °F; 436 K)
15 கி/100 கி
கரைதிறன் ஆல்ககாலில் கரையக்கூடியது[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

யூரியா நைட்ரேட்டு (Urea nitrate) உரத்தை அடிப்படையாகக் கொண்ட வெடிபொருள் ஆகும். ஆப்கானித்தான், பாக்கித்தான், ஈராக் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் நடைபெறக்கூடிய உலகின் அனைத்து நாடுகளிலும் கையெறி வெடிகுண்டாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு வேதிச் சேர்மமாக உள்ளது. இது நன்கறியப்பட்ட அமோனியம் நைட்ரேட்டு போன்ற வெடிபொருட்களுக்குச் சமமான அளவுக்கு அழிக்கும் வலிமை வாய்ந்ததாக உள்ளது.  இதன் வெடித்தல் திசைவேகமானது 11155 அடி/விநாடி முதல் 15420அடி/விநாடி வரை உள்ளது.[2]

யூரியா நைட்ரேட்டானது யூரியா மற்றும் நைட்ரிக் அமிலம் இவற்றிற்கிடையேயான ஒரே ஒரு படிநிலையில் நடைபெறும் வினை மூலம் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு வெப்பம் விடு வினையாக இருப்பதால் வினை நடைபெறும் கொள்கலனை குளிர்விப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

யூரியா நைட்ரேட்டின் வெடித்தலானது வெடிப்பு மூடி என்ற அமைப்பைப் பயன்படுத்தி தொடங்கப்படலாம்.

வேதியியல்[தொகு]

யூரியாவானது ஒரு  கார்பனைல் தொகுதியைக் கொண்டுள்ளது. அதிக எதிர்மின்னி கவர்தன்மை உள்ள ஆக்சிசன் அணுவானது கார்பனிடமிருந்து எதிர்மின்னிகளை தன்பால் ஈர்த்து ஆக்சிசனைச் சுற்றிலும் அதிக எதிர்மின்னி அடர்த்தியை உருவாக்குகிறது. இதன் காரணமாக ஆக்சிசன் அணுவானது பகுதியளவு எதிர்மின்சுமையைக் கொண்டு ஒரு முனைவுறு பிணைப்பை உருவாக்குகிறது. நைட்ரிக் அமிலமானது அருகாமையில் இருக்கும் போது இது அயனியாக்கத்தில் ஈடுபடுகிறது. உருவாக்கப்படுகின்ற ஐதரசன் நேர்மின் அயனியானது ஆக்சிசனை நோக்கி கவரப்பட்டு ஒரு சகப்பிணைப்பை உருவாக்குகிறது.[எதிர்மின்னி கவர்பொருள் H+]. எதிர்மின்தன்மையுள்ள  NO3 அயனியானது ஐதரசன் நேர் அயனியை நோக்கி கவரப்படுகிறது. இதன் காரணமாக ஒரு அயனிப்பிணைப்பு எறப்பட்டு யூரியா நைட்ரேட்டு என்ற சேர்மமானது உருவாகிறது.

(NH2)2CO (நீரிய) + HNO3 (நீரிய) → (NH2)2COHNO3 (தி)

இந்த சேர்மமானது, தொழில்முறையில்லாத வெடிபொருள் ஆர்வலர்களால் மிகவும் விரும்பப்படும் ஒரு முதன்மை வெடிபொருளாக உள்ளது. இச்சேர்மத்தைத் தொகுப்பு முறையில் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் எளிதில் கிடைப்பனவாக இருப்பதாலும், அமோனியம் நைட்ரேட்டுடன் ஒப்பிடும் போது வெடிக்கச் செய்வதற்கான தொடக்க நிலை இமைப்பு இச்சேர்மத்தில் எளிதாக இருப்பதாலும், இவ்வாறான பங்களிப்பில் அமோனியம் நைட்ரேட்டை அடிப்படையாகக் கொண்ட வெடிபொருட்களுக்கு மாற்றுப் பொருளாக உள்ளது.   

மேற்கோள்கள்[தொகு]

  1. http://cameochemicals.noaa.gov/chemical/12966
  2. "Explosives - ANFO (Ammonium Nitrate - Fuel Oil)". GlobalSecurity.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரியா_நைட்ரேட்டு&oldid=2749119" இலிருந்து மீள்விக்கப்பட்டது