மேரி கசாட்
மேரி கசாட் Mary Cassatt | |
---|---|
1913இல் நாற்காலியில் அமர்ந்துள்ளவாறு இருக்கும் மேரி கசாட்டின் ஒரே புகைப்படம். | |
பிறப்பு | மேரி இசுடீவன்சன் கசாட் மே 22, 1844 அலகெனி, பிலடெல்பியா, அமெரிக்கா. |
இறப்பு | சூன் 14, 1926 பாரிசுக்கு அருகில், பிரான்சு | (அகவை 82)
கல்வி | பென்சில்வேனியா நுண்கலை அகதாமி, ஜீன் லியோன் ஜேர்மி |
அறியப்படுவது | ஓவியக் கலை |
அரசியல் இயக்கம் | உணர்வுப்பதிவுவாதம் |
கையொப்பம் |
மேரி ஸ்டீவன்சன் கசாட் (Mary Stevenson Cassatt) (மே 22,1844-ஜூன் 14,1926) ஒரு அமெரிக்க ஓவியரும் மற்றும் அச்சுத் தயாரிப்பாளரும் ஆவார்.[1][2] இவர் பென்சில்வேனியாவின் அலெகேனியில் (இப்போது பிட்ஸ்பர்க்க்கிற்கு வடக்கு பக்கத்தின் ஒரு பகுதி) பிறந்தார். பெரும்பாலும் பெண்களின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையின் படங்கள் இவரால் உருவாக்கப்பட்டன. இளம் பருவத்தினருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு இவர் சிறப்பு முக்கியத்துவம் கொடுத்தார்.
அச்சுக்கலையில் சிறந்து விளங்கியம் மேரி பிராக்வெமண்ட் மற்றும் பெர்ட்டே மோரிசோட் ஆகியோருடன் இவரையும் குறிப்பிடுவர்.[3]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]கசாட் பென்சில்வேனியாவின் அலெகேனி நகரில் ஒரு உயர்-நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். இது இப்போது பிட்ஸ்பர்க்கின் ஒரு பகுதியாக இருக்கிறது.[4] இவரது தந்தை இராபர்ட் சிம்ப்சன் கசாட் (பின்னர் கசாட்) ஒரு வெற்றிகரமான பங்குத் தரகராகவும் மற்றும் நில ஊக வணிகராகவும் இருந்தார். தாய் கேத்தரின் கெல்சோ ஜான்ஸ்டன் ஒரு வங்கியாளர்களின் குடும்பத்தில் இருந்து வந்தவர். மேரி குடும்பத்தின் உயர் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப வளர்க்கப்பட்டார். மேரியின் பள்ளிப் பாடங்கள், வீட்டு வேலைகள், பூத்தையல், இசை, ஓவியம் வரைதல் ஆகிய நோக்கத்துடன் இருந்தது. கசாட்டின் குடும்பம் 1850களில் ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தது. இவர் ஐரோப்பாவில் ஐந்து ஆண்டுகள் கழித்தார். பின்னர், இலண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் உட்பட பல ஐரோப்பியத் தலைநகரங்களுக்குச் சென்றார். இந்த காலகட்டத்தில்தான் மேரி ஓவியம் மற்றும் இசையில் தனது முதல் பாடங்களைக் கற்றுக்கொண்டார்.
ஓவியம் கற்றல்
[தொகு]பதினாறு வயதில், மேரி கசாட் பிலடெல்பியாவில் உள்ள பென்சில்வேனியா நுண்கலை அகாதமியில் சேர்ந்தார். இருப்பினும் அக்காலச் சமூகம் பெண்கள் ஒரு தொழிலைத் தொடர அனுமதிக்கவில்லை. அங்கிருந்த ஆண் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு தோழர்களின் அணுகுமுறை இவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. மேலும், போதிய பாடத்திட்டம் இல்லாததை உணர்ந்த மேரி தனது படிப்பை தொடர ஐரோப்பாவிற்குத் திரும்ப முடிவு செய்தார். அங்கு தனது முன்னாள் ஆசிரியர்களுடன் பணிபுரிந்தார். இந்த முடிவுக்கு குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மேரி கசாட் 1866 இல் பாரிசு திரும்பி, இலூவரில் உள்ள தனியார் கலைப் பள்ளிகளில் தனது படிப்பைத் தொடங்கினார். 1868 ஆம் ஆண்டில், பிரெஞ்சு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்திர கண்காட்சியான பாரிஸ் சலோனில் கண்காட்சிக்காக மேரியின் உருவப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. தனது தந்தையால் நிராகரிக்கப்பட்ட இவர், மேரி இசுடீவன்சன் என்ற பெயரில் ஓவியத்தை காட்சிப்படுத்தினார். இந்த கண்காட்சியின் மூலம் மேரி கசாட் அதிக கவனத்தைப் பெற்றார்.
அமெரிக்க வாழ்க்கை
[தொகு]1870 இல் பிரான்சு-புருசியாவிற்குமான போர் ஆரம்பித்தவுடன், மேரி கசாட் அமெரிக்காவிலிருக்கும் தனது பெற்றோரிடம் திரும்பினார். வெளிநாட்டில் வாழ்ந்தபோது இவருக்கு இருந்த கலை சுதந்திரம் பிலடெல்பியாவில் இல்லை. ஓவியம் வரைவதற்குத் தேவையான பொருட்களைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட்டார். கலை தொடர்பான எந்த உதவியும் செய்ய இவரது தந்தை மறுத்துவிட்டார். நிதி காரணங்களால், இவர் தனது ஓவியங்களை நியூயார்க்கில் விற்க முயன்றார். ஆனால் அம்முயற்சியில் தோல்வியடைந்தார். 1871 ஆம் ஆண்டு சிகாகோவில் உள்ள ஒரு வியாபாரியின் உதவியுடன் ஓவியங்களை மறுவிற்பனை செய்ய முயன்றபோது தீயில் எரிந்து நாசமானது. 1871 இலையுதிர்காலத்தில் ஐரோப்பாவிற்குத் திரும்பிய சில மாதங்களுக்குப் பிறாகு கசாட்டின் வாய்ப்புகள் பிரகாசமாகத் தொடங்கின. திருவிழாவின் போது “இரண்டு பெண்கள் பூக்களை வீசுவது” போன்ற இவரது ஓவியம் 1872 ஆம் ஆண்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. 1874 இல், இவர் பிரான்சில் குடியேற முடிவு செய்தார். பாரிசில் ஒரு காட்சிக்கூடத்தைத் திறந்தார்.[5]
இறப்பு
[தொகு]மேரி கசாட் ஜூன் 14,1926 அன்று பாரிஸில் இறந்தார். இவரது ஓவியங்கள் பெருநகரக் கலை அருங்காட்சியகம், வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் மற்றும் புரூக்ளின் அருங்காட்சியகம் போன்ற இடங்களில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.[6]
மேரி கசாட் வரைந்த ஒரு சில புகைப்படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mary Cassatt Self-Portrait" (in en). National Portrait Gallery (Smithsonian Institution). http://npg.si.edu/object/npg_NPG.76.33.
- ↑ "Mary Cassatt's Women Didn't Sit Pretty - The American painter depicted women caring for children, not posing for the male gaze. New exhibitions and books reappraise her legacy 100 years later.". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2024/05/16/arts/design/mary-cassatt-philadelphia-museum.html.
- ↑ Moffett, Charles S. (1986). The New Painting: Impressionism 1874–1886. San Francisco: The Fine Arts Museums of San Francisco. pp. 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88401-047-3.
- ↑ Roberts, Norma J. (1988). The American Collections. Columbus: Columbus Museum of Art. p. 36. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-918881-20-5.
- ↑ MacPherson, Karen (June 20, 1999). "Lasting impressions: National Gallery exhibition displays different hues of Mary Cassatt". Post-gazette.com. Archived from the original on January 25, 2021. பார்க்கப்பட்ட நாள் June 23, 2020.
- ↑ "Woman Bathing (La Toilette)". www.metmuseum.org. பார்க்கப்பட்ட நாள் January 25, 2020.
நூற்பட்டியல்
[தொகு]- Barter, Judith A. (October 15, 1998). Mary Cassatt, modern woman (1st ed.). Art Institute of Chicago in association with H.N. Abrams. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0810940895.
- Bullard, John E. (1972). Mary Cassatt: Oils and Pastels. Watson-Guptill Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8230-0569-0. LCCN 70-190524.
- Duranty, Louis Edmund (1990) [1876]. La Nouvelle peinture : À propos du groupe d'artistes qui expose dans les galeries Durand-Ruel, 1876 (in பிரெஞ்சு). Paris: Echoppe. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2905657374. LCCN 21010788.
- Mathews, Nancy Mowll (1994). Mary Cassatt: A Life. New York: Villard Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-394-58497-3.
- Mathews, Nancy Mowll (1998). Mary Cassatt: A Life. New Haven: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-585-36794-1.
- McKown, Robin (1972). The World of Mary Cassatt. New York: Thomas Y. Crowell Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-690-90274-7.
- Kloss, William (1985). Treasures from the National Museum of American Art. Washington: National Museum of American Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87474-594-8.
- Pollock, Griselda; Florence, Penny (2001). Looking back to the Future. Amsterdam: G+B Arts International. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-5701-122-1.
- Pollock, Griselda (1998). "Mary Cassatt: Painter of Women and Children". In Milroy, Elizabeth; Doezema, Marianne (eds.). Reading American Art. New Haven: Yale University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-07348-5.
- Shackelford, George T.M. (1998). "Pas de Deux: Mary Cassatt and Edgar Degas". In Barter, Judith A.. (ed.). Mary Cassatt, modern woman. New York: Harry N. Abrams, Inc. pp. 109–43. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0810940895. LCCN 98007306.
- வார்ப்புரு:White - America's most noteworthy railroaders(mentions family relationship to Alexander Cassatt)
மேலும் படிக்க
[தொகு]- Adelson, Warren; Bertalan, Sarah; Mathews, Nancy Mowll; Pinsky, Susan; Rosen, Marc (2008). Mary Cassatt: Prints and Drawings from the Collection of Ambroise Vollard. New York: Adelson Galleries. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9815801-0-6.
- Barter, Judith A., et al. Mary Cassatt: Modern Woman. Exhibition catalogue. New York: Art Institute of Chicago in association with Harry N. Abrams, Inc., 1998.
- Breeskin, Adelyn D. Mary Cassatt: A Catalogue Raisonné of the Oils, Pastels, Watercolors, and Drawings. Washington, DC: Smithsonian Institution Press, 1970.
- Conrads, Margaret C. American Paintings and Sculpture at the Sterling and Francine Clark Art Institute. New York: Hudson Hills Press, 1990.
- Pinsky, Susan; Rosen, Marc; Adelson, Warren; Cantor, Jay E.; Shapiro, Barbara Stern (2000). Mary Cassatt: Prints and Drawings from the Artist's Studio. Princeton, NJ: Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-08887-X.
- Pollock, Griselda. Mary Cassatt: Painter of Modern Women. World of Art. London: Thames and Hudson, 1998.
- Stratton, Suzanne L. Spain, Espagne, Spanien: Foreign Artists Discover Spain 1800–1900. Exhibition catalogue. New York: The Spanish Institute in association with the Equitable Gallery, 1993.
- Weinberg, H Barbara (2009). American impressionism and realism . New York: The Metropolitan Museum of Art. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300085699 (see index)
வெளி இணைப்புகள்
[தொகு]வெளி ஒளிதங்கள் | |
---|---|
Cassatt's The Child's Bath | |
Cassatt's In the Loge | |
Cassatt's Woman with a Pearl Necklace in a Loge | |
Cassatt's The Loge
All from Smarthistory |
- Mary Cassatt Biography
- Mary Cassatt's Cat Paintings
- A finding aid to the Mary Cassatt letters, 1882–1926 at the Archives of Art, Smithsonian Institution
- Mary Cassatt at the National Gallery of Art
- Mary Cassatt Gallery at MuseumSyndicate.com பரணிடப்பட்டது மே 27, 2009 at the வந்தவழி இயந்திரம்
- Mary Cassatt at the WebMuseum.
- Mary Cassatt at Hill-Stead Museum, Farmington, Connecticut at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது சனவரி 19, 2012)
- Mary Cassatt prints at the National Art History Institut (INHA) in Paris (in பிரெஞ்சு மொழி)
- The Havemeyer Family Papers relating to Art Collecting Mary Cassatt was a close personal friend of Louisine Havemeyer and acted as an art collecting advisor and buying agent for the Havemeyer family. This archival collection includes original letters from Mary Cassatt to Louisine and Henry Osborne Havemeyer.
- The foundation in France for the remembrance of Mary Cassatt, located in the village of Mesnil-Theribus, where Cassatt lived and is buried
- Bibliothèque numérique de l'INHA – Estampes de Mary Cassatt (in பிரெஞ்சு மொழி)