மான்சா மாவட்டம், பஞ்சாப்
மன்சா மாவட்டம்
Mansa district ਮਾਨਸਾ ਜ਼ਿਲ੍ਹਾ | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
Headquarters | மன்சா |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,174 km2 (839 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 7,68,808 |
• அடர்த்தி | 350/km2 (900/sq mi) |
மொழிகள் | |
• ஆட்சிமொழி | பஞ்சாபி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-PB |
வாகனப் பதிவு | PB-31 |
பாலின விகிதாசாரம் | 1000/880 ♂/♀ |
எழுத்தறிவு | 63% |
இணையதளம் | www |
மான்சா மாவட்டம் (Mansa district) வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் மான்சா ஆகும்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]மான்சா மாவட்டம் மான்சா, புத்லதா, சர்துல்கர் என மூன்று வருவாய் வட்டங்களையும்; மான்சா, பிக்கி, புத்லதா, சர்துல்கர் மற்றும் ஜுனீர் என ஐந்து ஊராட்சி ஒன்றியங்களையும்; 240 கிராமங்களையும் கொண்டது.
மக்கள் தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 7,68,808 உள்ளது.[1] கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 11.62% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 350 மக்கள் வாழ்கின்றனர்.
மொழிகள்
[தொகு]பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.
புவியியல்
[தொகு]முக்கோண வடிவத்தில் அமைந்த மான்சா மாவட்டம், வடக்கில் பர்னாலா மாவட்டம் வடமேற்கில் பதிண்டா மாவட்டம் வடகிழக்கில் சங்கரூர் மாவட்டம், தெற்கில் அரியானா மாநிலம் எல்லைகளாக கொண்டுள்ளது.
பொருளாதாரம்
[தொகு]மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மைத் தொழிலை குறிப்பாக பருத்தி வேளாண்மைத் தொழிலை நம்பியுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Census 2011". www.census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 22 January 2012.