உள்ளடக்கத்துக்குச் செல்

மறதிநோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதுமை மறதி
Dementia

Classification and external resources
ஐ.சி.டி.-10 F00.-F07.
ஐ.சி.டி.-9 290-294
DiseasesDB 29283
MedlinePlus 000739
MeSH D003704

மறதிநோய் (Dementia என்பது நினைவு, சிந்தனை, நடத்தையில் ஏற்படும் சீர்குலைவையும், அதனால் நாளாந்த செயற்பாடுகளில் ஏற்படும் சீர்குலைவையும் காட்டும் நோய்க் கூட்டறிகுறியாகும்.[1] இதன் காரணமாக ஒருவரில் ஞாபகம், மொழித்திறன், காட்சிப் புலனுணர்வு, பிரச்சனை தீர்கும் திறன், சுய மேலாண்மை, கவனக்குவிப்பு, கவனம் செலுத்தல் போன்ற தொழிற்பாடுகளில் குறைபாடு ஏற்படும்.[2] முதுமை மறதி என்பது வயதானவர்களிடையே அதிக அளவில் காணப்பட்டாலும், அது எந்த வயதினரையும் பாதிக்கக் கூடியதே.[1] உலகளவில் 50 மில்லியன் மனிதர்களுக்கு இந்த நிலை இருப்பதாகவும், 10 மில்லியன் பேர் ஒவ்வொரு வருடமும் புதிதாக இந்நிலைக்கு ஆட்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.[1] அல்சைமர் நோயே இந்நிலைக்கான முதன்மைக் காரணியாகவும் 60-70% மானோருக்கான காரணியாகவும் இருக்கிறது.[1] உலகளவில், வயது முதிர்ந்தோர் ஆற்றலின்மை உள்ளவர்களாயிருப்பதற்கும், ஏனையோரில் தங்கியிருப்பதற்கும் மறதிநோயே முக்கிய காரணியாக இருக்கின்றது.[1] இந்த நோய் காரணமாக நோய்க்குட்பட்டவர்களுடன், அவர்களைப் பராமரிப்போர், குடும்பத்தினர், சமூகத்தினர் அனைவருக்கும் உடல், உள, சமூக, பொருளாதாரப் பிரச்சனைகள் தோன்றுகின்றது..[1]

ஒரு தீவிரமான உளவியல் குறைபாடாகும். இது நிலைத்ததாகவோ, அதாவது மூளையில் ஏற்படும் காயத்தினால் உருவாவதாகவோ அல்லது வளரக்கூடியதாகவோ இருக்கலாம்; அல்லது, உளவியல் செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஏற்பட்ட பாதிப்பு அல்லது குறைபாட்டால் உடலானது இயல்பான முதுமையடைதலில் இருந்து அதிகரித்த அளவில் முதிர்வது ஆகியவற்றால் விளையலாம். இதனை ஒத்த அறிகுறிகள் "சேதன மூளை நோய்க்கூட்டறிகுறி" (Organic brain syndrome) அல்லது கோளாறு ஆகியவற்றாலும் விளையலாம். ஆயினும், அவை இளைய வயதினரிடையே வேறு பெயர்களில் வழங்கப்படும் இந்த நோயே ஆகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை, இந்த முதுமை மறதி நோயைப் பற்றிய மிக அதிகமான மூட நம்பிக்கைகள் இருந்தன.

இது மூளையின் தொழிற்பாட்டை பாதிக்கும் வேறு நோய்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றது. ஞாபகமறதி என்பது படிப்படியாக மூளையின் சிந்திக்கும் ஆற்றல், நினைவில் நிறுத்தல் போன்ற தொழிற்பாடுகள் குறைவடைந்து செல்வதைக் குறிக்கும். இந்த ஞாபக மறதிக்கு காரணமாக கூறப்படும் பொதுவான காரணிகள்.

  • அல்சைமர்ஸ் நோய்
  • மூளைக்கான குருதி வழங்கல் பாதிப்படைதல்
  • மூளைக் கட்டிகள்
  • தலையில் ஏற்படும் விபத்துக்கள்
  • தொற்றுக்கள்
  • நீண்ட கால, அதிகரித்த மதுபாவனை
  • அகஞ்சுரக்கும் தொகுதியின் நீர்குலைவு
  • விற்றமின் குறைபாடுகள்

முதுமை மறதி என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோய்க்குறியீடு (குறியீடுகள் மற்றும் அறிகுறிகளின் தொகுப்பு) எதையும் கொண்டிருக்காத குறைபாடாகும், இதில் ஞாபகத்திறன், கவனம், மொழி மற்றும் சிக்கல் தீர்த்தல் போன்றவற்றில் உளவியல் குறைபாடானது ஏற்படக்கூடும். குறைந்தபட்சம் 6 மாத கால அளவுக்கு இந்த பாதிப்பு தொடர்ந்தால் மட்டுமே சோதனை மூலமாக இந்நோயைக் கண்டறிய முடியும்[3]; குறுகிய கால அளவுக்கு நீடிக்கும் கவனிப்பு திறனில் ஏற்படும் மங்குதல், குறிப்பாக சில வாரங்களுக்கு குறைவான கால அளவுக்கு ஏற்படுபவை உளத்தடுமாற்றம் (delirium) என்றழைக்கப்பட வேண்டும். எல்லாவகையான பொது கவனிப்பு திறன் மங்குதல் குறைபாடுகளிலும், உயர் மனநிலை செயல்பாடுகள் முதலில் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக, இந்நிலையின் பிந்தைய காலகட்டத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் நேரம் (வாரத்தின் எந்த நாள், மாதத்தின் எந்த நாள், அல்லது எந்த ஆண்டு போன்றவற்றில் குழப்பம்), இடம் (அவர்கள் இருக்கும் இடத்தை அறியாத நிலை) மற்றும் மனிதர்கள் (தன்னையும் தன்னை சுற்றியுள்ளவர்களையும் அறியாத நிலை) போன்ற பல நிலைகளில் குழப்பமடைந்திருப்பாகள். முதுமை மறதியானது, பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நிலை வரையிலும் சிகிச்சையளிக்கப்படக் கூடியது, ஆனால் பொதுவாக இதன் வேறுபட்ட காரணிகளால் தீர்க்க முடியாத நோயாகவுள்ளது.

பொதுவான அறிகுறிகள்:

  • தெரிந்த நபர்களின் பெயர், வாழ்விடம் மறந்து போதல்.
  • ஆரம்பத்தில் அண்மைக்கால சம்பவங்களே மறக்கும். பின் காலம் செல்லச் செல்ல பழைய சம்பவங்களும் மறந்து போகும்.
  • வயது மறந்து போகும்.
  • சொற்கள் மறந்து போகும்.
  • புதிய மனிதர்கள் அல்லது புதிய சூழலை சந்திக்கும்போது குழப்பம் ஏற்படும்.
  • நடத்தையில் மாற்றங்கள் ஏற்படும்.
    • அடிக்கடி கோபப்படல்
    • பொருத்தமற்ற பாலியல் வெளிப்பாடுகள்
    • தனிநல சுகாதார பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க தவறுதல்
  • புதிய விடயங்களை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படல்.

இந்த அறிகுறிகள் மன அழுத்தம் போன்ற வேறு நோய்களின்போதும் ஏற்படலாம்.

முதுமை மறதியின் அறிகுறிகள் மீளக்கூடியவையாக அல்லது மீளவியலாதவையாக வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடு இந்நோயின் நோய்க்காரணிகளின் அடிப்படையில் அமைந்ததாகும். முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதத்திற்கும் குறைவானவர்களே சிகிச்சையின் மூலமாக சரிசெய்யக்கூடிய காரணிகளைக் கொண்டுள்ளனர். காரணிகளில் பல வேறுபட்ட நோய்ச் செயற்பாடுகள் உள்ளன, அதேபோல அறிகுறிகளிலும் பல வேறுபாடுகள் உள்ளன. எடுத்துக் காட்டாக, மூச்சுவிடுவதில் சிரமம், மஞ்சள் காமாலை, அல்லது காமாலை ஆகியவை பல நோய்க்காரணிகளைச் சார்ந்து உருவாகக்கூடியவை. நோய் வரலாற்றினைக் கவனமாக ஆராயாது, உளத்தடுமாற்றம் என்ற குறுகிய கால நோய்க்குறியீடு (பெரும்பாலும் சில நாட்கள் முதல் வாரங்கள் வரை நீடிக்கக்கூடியது) எளிதாக முதுமை மறதி என்று தவறாக கருதப்படுகிறது. ஏனெனில் இவ்விரண்டு நோய்களிலும் ஒத்த அறிகுறிகள், நோய் பாதிப்பின் கால அளவு ஆகியவை காணப்படுகின்றன. மேலும் உளத்தடுமாற்ற நோயானது உண்மையில், பரிவு நரம்பு மண்டலத்தின் (sympathetic nervous system) அதிகரித்த செயற்பாட்டுடன் தொடர்புடையது. மன அழுத்தம், மனநோய்கள் போன்ற மனநலக்குறைவும், உளத்தடுமாற்றம் மற்றும் முதுமை மறதி ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்தி அறிய வேண்டிய அறிகுறிகளை அளிக்கலாம்.[4]. மது போன்றவற்றின் தொடர்ச்சியான பயன்பாடு மற்றும் தொடச்சியான தூக்கமின்மை ஆகியனவும் முதுமை மறதியை ஒத்ததான அறிகுறிகளை ஆரம்பகட்டத்தில் தரக்கூடும்.

பெரும்பாலானவை முற்றாக குணப்படுத்த முடியாதவையாகவே இருக்கின்றன. ஆனாலும் அகஞ்சுரக்கும் தொகுதி சீர்குலைதல், விற்றமின் குறைபாடுகள், மூளைக்கட்டிகள், தொற்றுக்களால் ஏற்பட்டிருப்பின் அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மூலம் இந்நோயைக் குணப்படுத்த முடியும். அல்சைமர்ஸ் நோயால் இந்த ஞாபகமறதி ஏற்படுமாயின் தவிர்த்தல் கடினம். ஆரோக்கியமான வாழ்க்கை முறை, அதிகளவில் மதுபானம் பாவித்தல் தவிர்த்தல், புகைப்பிடித்தலை தவிர்த்தல், நாளாந்த உடற்பயிற்சி, கொழுப்பு குறைந்த ஆகாரம் போன்றவையும் இந்நோயை தவிர்க்க உதவும்.

குணப்படுத்த முடியாதவற்றை, சிகிச்சை மூலம், நோய் அறிகுறிகளையும், நோய் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்தி வைக்க முடியும். நோயாளியை தகுந்த முறையில் பராமரித்தலும் மிகவும் முக்கியமாகும். அது கடினமானதும்கூட. குறுக்கெழுத்துப் போட்டிகள், சிறிய கணிதச் செயற்பாடுகள், விளையாட்டுகள் போன்றவை நோய் அதிகரிப்பதைத் தடுக்கும் பயனுள்ள செயற்பாடுகளாகும்.

குறிகளும் அறிகுறிகளும்

[தொகு]

முதுமை மறதி என்பது நினைவாற்றலைச் சார்ந்த ஒரு பிரச்சனையே அல்ல. ஆயினும் முதுமை மறதியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் மனநிலை மற்றும் நடத்தை தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்படுவதால், அவர்களை முறையான பராமரிப்பாளர்கள் கொண்ட ஒரு காப்பகத்தில் அனுமதிப்பது தேவையாகலாம்.

முதுமை மறதி கொண்டவர்களில் 20-30% பேரை மன அழுத்தம் தாக்குகிறது மற்றும் சுமார் 20% பேரை மனச்சோர்வு நோய் தாக்குகிறது.[5] மனநோய்களும் (பெரும்பாலும் தீய நிகழ்வுகள் பற்றிய பிரமைகள்) மற்றும் தீவிர மன அழுத்தம்/பிடிவாதம் போன்றவை முதுமை மறதி நோயுடன் தொடர்புறுகின்றன. ஒருவர் முதுமை மறதியினால் அவதியுறுவதாக இருப்பினும், இந்நோய்கள் ஒவ்வொன்றினையும் தனித்தனியாக ஆராய்ந்து, சிகிச்சை அளித்தல் வேண்டும்.[6]

தனக்கும் பிறருக்கும் ஏற்படக்கூடிய ஆபத்துகள்

[தொகு]

முதுமை மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டுவதால் அவருக்கும் அவருடன் செல்பவர்களுக்கும் மிகத் தீவிரமான காயம் அல்லது மரணத்தையோ கூட விளைவிக்ககூடும் என்று கனடியன் மருத்துவக் கழக இதழ் தெரிவிக்கிறது. அத்தகைய ஒருவர் வாகனம் ஓட்டுவதை நிறுத்துவது எப்போது அவசியமாகிறது என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து தெரிவிக்க வேண்டும்.[7]

ஐக்கிய அமெரிக்க நாடுகளில், ஃப்ளோரிடா மாநிலத்தில் பேக்கர் சட்டமானது குடிமக்களில் எவராவது முதுமை மறதி அல்லது மனநல குறைபாடுகள் கொண்டவர் என்று கருதப்படின், அவரிடம் சட்ட அமலாக்கத்தையும், மனநல ஆய்வையும் மேற்கொள்வதை அனுமதிக்கிறது.

ஐக்கிய இராச்சியத்தில், தமக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் உள்ள, மனநல குறைபாடுகளைக் கொண்ட நபர்கள் மனநலச் சட்டம் 1983 என்பதன் கீழ் காவலின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஆய்வு, கவனிப்பு மற்றும் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள். இது கடைசி வழிமுறையே. நோயாளி தம்மைக் கவனித்துக்கொள்ளும் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் இருந்தால், இது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் வாகனமோட்டும் மற்றும் வாகன உரிம முகமை (Driving and vehicle Licensing Agency) இவ்வாறு குறிப்பிடுகிறது: முதுமை மறதியால் பாதிக்கப்பட்டவர்கள், குறிப்பாக குறைந்த நேர ஞாபகத்திறன் இழப்பு, குழப்பம், உள்ளுணர்வு அல்லது கணிக்கும் திறன் இன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, வண்டியோட்டுவதற்கான தகுதி எதையும் பெறாமல் இருக்கின்றனர் - மேலும் இம்மாதிரியான நிலைகளில், முகமைக்குச் செய்தி தெரிவிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமம் திரும்பப்பெறப்பட வேண்டும். இருப்பினும், குறைவான அளவில் பாதிப்பு கொண்ட மற்றும் ஆரம்பகட்ட நோயாளிகள் அவர்களது மருத்துவ அறிக்கை பெறப்படும் வரையிலும் அனுமதி பெறுகின்றனர்.

நோய் கண்டறிதல்

[தொகு]

முதுமை மறதி நோயின் வகைகளை அவை பெருமூளையின் மேலுறைப் பகுதியில் எவ்வாறு பாதிப்படைந்துள்ளன என்பதன் அடிப்படையில் வேறுபடுத்தி அறிய முறைப்படி நோய் கண்டறிதல் அவசியம். இதற்கு குறைந்தபட்சம் ஒரு வல்லுனரைக் கலந்தாலோசிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, முதியோர் மருந்தளிப்பு வல்லுனர், முதியோர் மனநல மருத்துவர், நரம்பியல் வல்லுனர், நரம்பிய உளவியல் வல்லுனர் அல்லது முதியோர் உளநல மருத்துவர் போன்றோர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். இருப்பினும், ஓரளவு நம்பகத்தன்மை கொண்ட, சில சுருக்கமான சோதனைகள் (5-15 நிமிடங்கள்) உள்ளன. அவற்றை அலுவலகம் அல்லது வேறு இடத்தில் மேற்கொள்ளலாம். மேலும் அவற்றின் மூலம் நோயாக மாறக்கூடிய மனநலக் குறைபாடுகளின் நிலையைக் கண்டறியலாம். இந்தச் சோதனைகளில், சுருக்கமான மனநிலை சோதனை ஸ்கோர் (Abbreviated Mental Test Score - AMTS), சிறு மனநிலை பரிசோதனை (Mini Mental State Examination - MMSE), மாற்றப்பட்ட சிறு மனநிலை பரிசோதனை (Modified Mini-Mental State Examination - 3MS),[8] மனநிலை திறன்கள் கண்டறிதல் உபகரணம் (CASI),[9] மற்றும் கடிகாரம் வரைதல் சோதனை ஆகியவை சில எடுத்துக்காட்டுகளாகும்.[10] ஏஎம்டிஎஸ் மதிப்பெண்கள் ஆறுக்கு குறைவாகவும் (மொத்தம் பத்துக்கு) எம்எம்எஸ்ஈ (30க்கு) 24 மதிப்பெண்களுக்கும் குறைவாகவும் இருப்பின், மேலும் ஆய்வு தேவைப்படுவதாக அறியலாம். ஒரு மனிதரின் கல்வி மற்றும் இதர பின்னணி நிலைகளின் அடிப்படையில் இந்த மதிப்பெண்களை பகுத்தாய வேண்டும்; எடுத்துக்காட்டாக, மிகவும் தீவிரமாக மன அழுத்தத்தில் உள்ளவரோ அல்லது அதிகப்படியான வலியைக் கொண்டவரோ மனத்திறன் சோதனைகளில் சிறப்பான் செயல்திறனைக் கொண்டிருப்பார் என்று எதிர்பார்க்க முடியாது.

சிறு மனநிலை பரிசோதனை

[தொகு]

[http://www.ahrq.gov/clinic/uspstfix.htm U.S. தடுப்புச் சேவைகள் பணிக்குழு (Preventive Services Task Force(USPSTF)), மனநல குறைபாட்டின் சோதனைகளை மதிப்பாய்வு செய்து, பின்வருவனவற்றைக் கூறியது:[11]

  • எம்எம்எஸ்ஈ
உணர்திறன் 71% முதல் 92%
கவனிப்பு திறன் 56% முதல் 96%

திருத்தப்பட்ட சிறு மனநிலை பரிசோதனை (3எம்எஸ்)

[தொகு]

இதன் நகல் ஒன்று நேரடிக் கணினி முறைமையின் வழி கிடைக்கப் பெறுகிறது.[12] திருத்தப்பட்ட சிறு மனநிலைப் பரிசோதனையில் இவை காணப்படுவதாக, பரந்துபட்ட பகுப்பாய்வு கூறுகிறது:[13]

உணர்திறன் 83% முதல் 93.5%
கவனிப்பு திறன் 85% முதல் 90%

சுருக்கமான மனநிலை சோதனை ஸ்கோர் (Abbreviated mental test score)

[தொகு]

ஒரு பரந்துபட்ட ஆய்வில் பின்வரும் முடிவுகள் பெறப்பட்டன:[13]

உணர்திறன் 73% முதல் 100%
தனித்தன்மை 71% முதல் 100%

அறிகுறிகளின் கால அளவு

[தொகு]

முதுமை மறதி அல்லது மூளைச் சேத நோய்க்குறித் தொகுதி போன்றவற்றைப் பகுத்தாய அவற்றின் அறிகுறிகள் 6 மாதத்திற்கும் அதிகமான காலகட்டத்திற்கு இருந்திருத்தல் தேவை.

பிற சோதனைகள்

[தொகு]

பல வேறு சோதனைகளும் ஆய்வு செய்யப்பட்டன, அதில் [14][15][16] கடிகாரம் வரைதல் சோதனையும் அடங்கும் (எடுத்துக்காட்டு படிவம்). சில சோதனைகள், எம்எம்எஸ்ஈ முறைமைக்கு சிறப்பான மாற்று வழிகளாக இருந்தாலும், தற்காலத்தில் எம்எம்எஸ்ஈ முறைமையே சிறந்த நோய் பகுப்பாய்வைத் தருகிறது. ஆனாலும், எம்எம்எஸ்ஈ முறைமைக்கான அணுகல் அதன் காப்புரிமை நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாகத் தற்போது குறைந்துள்ளது.[சான்று தேவை]

முதுமை மறதியைக் கண்டறிவதற்கான மற்றொரு முறையானது, அந்த நபரின் அன்றாட மனநிலை மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஒரு தகவலறியும் கேள்வித்தாளை நிரப்பும்படி கோருவதாகும். தகவலறியும் கேள்வித்தாள்கள், மனநல சோதனைகளை முழுமை செய்யும் தகவல்களை வழங்குகின்றன. இந்த வகையில் மிகவும் பிரபலமான கேள்வித்தாளானது, வயதுமுதிர்ந்தவர்களிடையே காணப்படும், மனநல வீழ்ச்சிக்கான தகவலறியும் கேள்வித்தாள் (Informant Questionnaire on Cognitive Decline in the Elderly - IQCODE) என்பதாகும்.[17]

"பொதுவான மருத்துவர் மனநல மதிப்பீடு" என்பது, நோயாளியின் மதிப்பாய்வு, தகவலறியும் கலந்துரையாடல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது. இது குறிப்பாக, முதன்மை கவனிப்பு அமைப்பாக வடிவமைக்கப்பட்டது, மேலும் இது ஒரு வலை-சார்ந்த சோதனையாகவும் கிடைக்கிறது. இதனை www.gpcog.com.au என்ற வலைமுகவரியில் அணுகலாம்.

கூடுதல் பகுப்பாய்வில், மற்றொரு தேதியில் மீண்டும் சோதித்தல், வேறு சோதனைகளைச் (சில நேரங்களில் அதிகம் சிக்கலானவை) சேர்த்துக் கொள்ளுதல் போன்றவை அடங்கும், இதற்கான எடுத்துக்காட்டுகளாவன முறையான "நரம்பிய உளவியல்" சோதனை போன்றவையாகும்.

ஆய்வகப் பரிசோதனைகள்

[தொகு]

சிகிச்சையளிக்கப்படக் கூடிய காரணங்களைச் சரி செய்ய முறையான ரத்த பரிசோதனையும் பொதுவாக செய்யப்படுகின்றன. இந்த சோதனைகளில் ஊட்டச் சத்து பி12, ஃபோலிக் அமிலம், கேடயச் சுரப்பித் தூண்டுதல், நாளமில்லா சுரப்பி இயக்குநீர், சி-இயக்குப் புரதம், முழு இரத்த எண்ணிக்கை, மின்பகுளிகள், சுண்ணாம்புச் சத்து, சிறுநீரகச் செயல்பாடு மற்றும் கல்லீரல் நொதிகள் ஆகிய சோதனைகள் அடங்கும். இவற்றில் ஏதேனும் இயல்புக்கு மாறாக கண்டறியப்பட்டால், அவை, வயதுமுதிர்ந்தோருக்கு ஏற்படும் குழுப்பம் அல்லது மனநிலைக் குலைவு போன்றவற்றின் பொதுவான காரணங்களான ஊட்டச் சத்து குறைவு, பாதிப்பு அல்லது பிற காரணங்களைச் சுட்டிக் காட்டலாம். துவக்கநிலை முதுமை மறதி நோயைக் கொண்டவர்கள் இவ்வகை பாதிப்புகளால் பெரிதும் அவதியுறுவார்கள் என்பதனால், இக்குறைபாடுகளைச் "சரிசெய்வது" பெரும்பாலும் தற்காலிகமானதாகவே இருக்கிறது.[சான்று தேவை]. இது மது அல்லது முதுமை மறதியைத் தூண்டும் பிற காரணிகளையும் சுட்டிக் காட்டலாம்.

பிம்பம் எடுத்தல்

[தொகு]

ஒரு கணினி வழிக் கதிர் வீச்சு வரைவி அல்லது காந்தப் புல பிம்பக் கதிர்வீச்சு வரைவி போன்றவை பொதுவான நோய்கண்டறியும் முறைமைகளாகும். ஆனாலும் இவ்வகை பகுப்பாய்வானது, எந்தவொரு நுணுக்கமான கவனிக்கத்தக்க கண்டறிதலையும் அளிப்பதில்லை. முதுமை மறதியுடன் தொடர்புடைய வளர்சிதை மாற்றக் குறைபாடுகளை நோயாளியின் உடலிலோ அல்லது நரம்பியல் சோதனையில் எந்தவித நரம்பு தொடர்பான சிக்கல்களையோ (பக்கவாதம் அல்லது தளர்ச்சி போன்றவற்றை) காண்பிப்பது இல்லை. இத்தகைய சோதனைகள் முதுமை மறதியின் இயல்பான காரணிகளை சுட்டிக் காட்டலாம். இவற்றைச் சரி செய்ய இயலும் மேலும் படிம உறைவு போன்றவற்றுடன் தொடர்புடைய பிற வகை முதுமை மறதியைப் பற்றிய தகவல்களைத் தரக்கூடும்.

ஒற்றை ஒளியோன் வெளியீட்டு கணினிக் கதிர்வீச்சு வரைவி (SPECT) மற்றும் பொசித்திரள் வெளியீட்டு கணினிக் கதிர்வீச்சு வரைவி (PET) ஆகியவற்றின் செயற்பாட்டு நரம்பியல் பிம்பமாக்க மாதிரிகள், நீண்டகால மனநலக் குறைபாடுகளைக் கண்டறிவதில் பயனுள்ளவையாகும்.[18] அல்சைமர் நோய் மற்றும் முதுமை மறதி ஆகியவற்றுக்கு இடைப்பட்ட வேறுபாட்டை கண்டறிவதில் ஒற்றை ஒளியோன் வெளியீட்டு கணினிக் கதிர்வீச்சு வரைவி திறன் பெற்றது.[19]

அண்மைய ஆய்வுகள், கரிமம்-11 பிட்ஸ்பர்க் சேர்மம் பி என்பதை ஒரு மாறுபாட்டு ஊடகமாக பலவகையான முதுமை மறதி நோய்களையும், குறிப்பாக அல்சைமர் நோய் முதலானவற்றைக் கண்டறிவதில் மதிப்பு மிக்கது என்று சுட்டிக் காட்டியுள்ளன. குறைந்த அளவிலான மனநலக் குறைபாட்டைக் கொண்ட நபர் இரண்டு ஆண்டுகளுக்குள், அல்சைமர் நோய்க்கு ஆளாகிறார்கள் என்பதை 86 சதவிகிதத் துல்லியத்துடன் இச்சோதனைகள் கண்டறிகின்றன என்று ஆஸ்திரேலிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் 66 நோயாளிகளிடையே நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், குறைந்த அளவிலான மனநலக் குறைபாடுகள் அல்லது குறைந்த அளவிலான முதுமை மறதி போன்றவற்றை கரிமம் -11 மற்றும் டைஹைட்ரோட்ராபெனாசைன் (DTBZ) ஆகியவற்றைப் பயன்படுத்திச் செய்த பரிசோதனைகளில் காற்பங்கை விட அதிகமான நபர்களிடம் துல்லியமான பகுப்பாய்வுகள் பெறப்பட்டதாக அறிவிக்கிறது.[20]

காரணங்கள்

[தொகு]

புரிதிறனில் பழுது

[தொகு]

ஒரே நேரத்தில், மூளையில் ஏற்படும் பலவகையான காயங்களும், சரிசெய்ய முடியாத அல்லது, நிலைபெற்று விடக் கூடிய அளவில் புரிதிறனில் பழுதுகளை உருவாக்கலாம். விபத்தினால் ஏற்படும் மூளைக் காயம் மூளையின் வெண்ணிறப் பகுதியில் பொதுவான நரம்பு வேரிழை பாதிப்பினை அல்லது பகுதி சார்ந்த பாதிப்பை உருவாக்கலாம். மூளைக்குச் செல்லும் இரத்தம் அல்லது உயிர்வாயுவில் தற்காலிகமாக ஏற்படும் குறைவானது ஹைபோசிக்-இஸ்கிமிக் எனப்படும் மூளை மற்றும் முதுகெலும்புக் காயத்தை ஏற்படுத்தக் கூடும். வாதங்கள் (இஸ்கிமிக் ஸ்ட்ரோக், அல்லது இன்ட்ராசெரிப்ரல், சப்அரக்னாய்டு, சப்ட்யூரல் அல்லது எக்ஸ்ட்ராட்யூரல் ஹெமரேஜ் போன்றவை) அல்லது மூளையை பாதிக்கும் நோய்த்தொற்றுகள் (மூளை உறை அழற்சி மற்றும்/அல்லது என்செஃபாலிடிஸ்), நீண்ட நேரத்திற்கு வலிப்பு மற்றும் தீவிர மண்டை வீக்கம் ஆகியவையும் மனநலக் குறைபாடுகளில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். அளவுக்கு அதிகமான மது அருந்தும் பழக்கம் முதுமை மறதி அல்லது கோர்ஸாக்ஃப்ஸ் மனப்பித்து போன்றவற்றை உருவாக்கலாம். பெரும்பாலான உற்சாக பானங்கள் முதுமை மறதியை உருவாக்கக் கூடும்.

மெதுவாக தீவிரமடையும் முதுமை மறதி

[தொகு]

மெதுவாக தொடங்கி பல ஆண்டுகளுக்கு பின்னர் மிகவும் தீவிரமடையும் முதுமை மறதி, நரம்புச் சிதைவு நோயால் (neurodegenerative disease) ஏற்படுகிறது, அதாவது, மூளையின் நரம்பணுக்களை அல்லது இவை தொடர்ந்து பாதிப்பதால், மெதுவான மற்றும் மீண்டும் சரி செய்ய முடியாத, நோய்களை இவை ஏற்படுத்துகின்றன. அரிதாக, சிதைவு அல்லாத நிலையில் மூளை நரம்பணுக்களில் இரண்டாம் நிலை பாதிப்புகள் மட்டுமே ஏற்படுத்துகின்றன. இந்நிலையானது சிகிச்சையளிக்கப்படும்போது, சரிசெய்யப்படலாம் அல்லது அவ்வாறு இயலாமலும் போகலாம்.

முதுமை மறதியின் காரணங்கள் பொதுவாக, நோய் அறிகுறிகள் தோன்றும் வயதைச் சார்ந்துள்ளன. வயதுமுதிர்ந்தவர்களில் (பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று வரையறுக்கப்படுகிறது) அல்சைமர் நோய் (Alzhimers' Disease), வாஸ்குலார் முதுமை மறதி (Vascular Dementia) அல்லது இவை இரண்டுமே முதுமை மறதி தோன்ற காரணமாக இருக்கின்றன. லூயி முதுமை மறதி (Dementia with Lewy bodies) என்பது மற்றொரு பொதுவான காரணமாகும், இவை முன்னரே உள்ள ஒன்றிற்கும் மேற்பட்ட காரணங்களுடன் இணைந்தும் உருவாகலாம்.[21][22][23]. சில நேரங்களில் மெதுவாக தீவிரமடையும் மனநலக் குறைபாட்டை முதன்மை அறிகுறியாக குறை கேடயச்சுரப்பி இயக்கம் விளங்குகிறது. இவ்வகைக் குறைபாட்டை சிகிச்சையின் மூலம் முழுமையாக சரி செய்ய முடியும். மிகவும் அரிதான, இயல்பு அழுத்த மண்டை வீக்கத்தினைப் பற்றி அறிந்து கொள்வதும் முக்கியமாகும், ஏனெனில் இதற்கான சிகிச்சையானது நோய்க் குறியீடுகளைக் குறைக்கவும், வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் உதவும். ஆனாலும், கணிசமான மனநலக் குறைபாடு தீவிரம் அதிகரித்தல் வழக்கத்துக்கு மாறானதே.

65 வயதை விடக் குறைவாக வயதுள்ளவர்களுக்கு முதுமை மறதி மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இதற்கு அல்சைமர் நோய் முக்கிய காரணமாக இருப்பினும், இவர்களில் பரம்பரையாகப் பெறப்படும் மரபணுக்களும் இதில் முக்கியப் பங்கு கொண்டுள்ளன. இதன் இதர காரணங்கள் முன் மூளைச் சிதைவு மற்றும் ஹண்டிங்டன்ஸ் நோய் ஆகியவையாகும்.[24]. இந்த வயதினரிடையே வாஸ்குலார் முதுமை மறதியும் ஏற்படலாம். இவற்றிற்கான காரணங்களில்,ஆண்டிபாஸ்போலிபிடு நோய்க்குறித் தொகுதி, ஹோமோசிஸ்டினுரியா மற்றும் பிங்க்ஸ்வாங்கர்ஸ் நோய் போன்றவை அடங்கும். மற்போர் அல்லது தற்காப்புக் கலை போன்றவற்றில் ஈடுபடுவதனால், அடிக்கடி தலையில் காயமடையும் வாய்ப்புள்ளவர்கள் முதுமை மறதிக்கான வாய்ப்புக்களும் அதிகமே. முன்னர், கோலியாக் நோய் மற்றும் முதுமை மறதி ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதாக முன்மொழியப்பட்டது. ஆயினும் இது இன்னமும் உறுதியாகவில்லை.

இயல்பான நுண்ணறிவைக் கொண்ட இளைஞர்கள் (40 வயது வரையில் உள்ளவர்கள்) பிற நரம்பு தொடர்பான பாதிப்புகள் அல்லது உடலின் வேறு எங்கும் நோயின் பாதிப்பைப் பெறாத நிலையில் முதுமை மறதி நோய்க்கு ஆளாவது மிகவும் அரிதானதாகும். இந்த வயதுள்ளோரில் தொடர்ந்த மனநலக் குறைபாடுகள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாவன உளவியற் குறைபாடுகள், மது அல்லது பிற போதைப் பொருட்களின் தொடர்ச்சியான பயன்பாடு அல்லது வளர்சிதை மாற்றத் தடங்கல்கள் போன்றவையே.சில மரபுக் கோளாறுகளும் இந்த வயதிலேயே நரம்பு மண்டல சிதைவுசார் முதுமை மறதியை ஏற்படுத்தக்கூடும். இவற்றில் ஃபமிலியல் அல்சைமர் நோய், மெட்டாகுரோமாடிக் லூகோடைஸ்ட்ரோபி, அட்ரீனோலூகோடைஸ்ட்ரோபி, காய்ச்சர்ஸ் நோய் டைப் 3, நைமன்-பிக் நோய் டைப் சி, பேண்தோதேனெட் கினாஸி, டே-சச்ஸ் நோய் மற்றும் வில்சன் நோய் போன்ற மரபுவழி பெறப்படும் நோய்கள் அடங்கும். வில்சன் நோயால் விளையும் மனநிலைக் குறைபாட்டினை சிகிச்சையால் மேம்படுத்தக்கூடும்.

நினைவாற்றலில் சிக்கல் அல்லது பிற மனநலக் குறைபாடுகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட மக்களில் பெரும்பாலானோர், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைத்து வயதினர் இடையிலும் காணப்படுகின்றனர். வைட்டமின் குறைபாடுகளும் நோய்த்தொற்றுகளும் எந்த வயதினருக்கும் ஏற்படலாம். அவை பெரும்பாலும் முதுமை மறதியைத் தவிர வேறு அறிகுறிகளைச் சுட்டிக் காட்டலாம். ஆனால் சில நேரங்களில் சிதைவு முதுமை மறதியைப் போன்றே அவை தோற்றமளிக்கின்றன. இவற்றில் ஊட்டச் சத்து பி12, ஃபோலேட் அல்லது நியாசின் குறைவுகள், மற்றும் நோய்த் தொற்றுக் காரணிகளான ஹெச்ஐவி, லைம் நோய், வளர்நிலை பல்நோக்கு கபாலத்தில் இரத்தக்கட்டி வீக்கம், மேக நோய் மற்றும் விப்பிள்ஸ் நோய் போன்றவை அடங்கும்.

வேகமாக தீவிரமடையும் முதுமை மறதி

[தொகு]

கிரட்ஜ்ஃபெல்ட்- யாக்கோபு நோயானது சில வாரங்கள் துவங்கி சில மாதங்களிலேயே தீவிரமடையும் முதுமை மறதியைத் தோற்றுவிக்கிறது. மெதுவாகத் தீவிரமடையும் முதுமை மறதியின் காரணங்களும் சிலநேரங்களில், வேகமாக தீவிரமடையும் முதுமை மறதியில் காணப்படுகின்றன: அல்சைமர் நோய், லூயி முதுமை மறதி, மூளயின் முன்பகுதி சிதைவு (frontal temporal lobar degeneration) (இவற்றில் பெருமூளைப் பகுதிச் சிதைவு மற்றும் சமநிலைத் தடுமாற்றதை விளைக்கும் புரோக்ரசிவ் சப்ராநியூக்ளியர் பால்ஸி ஆகியவையும் அடங்கும்).

ஆனால், மூளை வீக்கம் அல்லது சித்தப்பிரமை போன்றவையும் ஓரளவு மெதுவான முதுமை மறதியை உருவாக்கக் கூடும். இதற்குச் சாத்தியமான காரணங்களில் மூளை நோய்த்தொற்று (நச்சுயிரி காரணமான மூளை வீக்கம், துணை-தீவிர வகை மூளை வீக்கம், விப்பிள்ஸ் நோய்) அல்லது வீக்கம் (நிண நீர்க்கட்டி மூளை வீக்கம், ஹாஷிமோட்டோஸ் மூளை வீக்கம், பெருமூளைக் குழல் வீக்கம்), நிண நீர்க்கட்டிகள் அல்லது கண் அழுத்த நோய், வலிப்பு-எதிர் மருத்துவங்கள், வளர்சிதை மாற்றம் காரணமாக விளையும் கல்லீரல் செயலிழப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு மற்றும் நாள்பட்ட மூளை நடுவுறை இரத்தக்கட்டி போன்றவை அடங்கும்.

பிற நிலைகளின் ஒரு அம்சமாக முதுமை மறதி இருத்தல்

[தொகு]

முதுமை மறதியானது ஒரு பிந்தைய நிலை அல்லது சிறிய அம்சமாக மட்டுமே ஏற்படக் கூடிய பல மருத்துவ மற்றும் நரம்பியல் சூழல்கள் உள்ளன, எடுத்துக்காட்டாக, பார்கின்ஸன் நோயைக் கொண்ட நோயாளிகளில் ஒரு பகுதியினர் முதுமை மறதிக்கு ஆளாகின்றனர். இந்த பிரிவின் அளவானது பலவாறு குறிப்பிடப்படுகிறது[சான்று தேவை]. பார்கின்ஸன் நோய் கொண்டோரில் முதுமை மறதி பாதிப்பு ஏற்பட்டல், அதன் காரணமாக லூயிபொருட்களுடனான முதுமை மறதி அல்லது அல்சைமர் நோய், அல்லது இரண்டும் காரணங்களாக இருக்கக்கூடும்[25]. பார்கின்ஸன் மற்றும் வளர்நிலை சப்நியூக்ளியர் பால்ஸி மற்றும் கார்ட்டிபேசல் டிஜெனரேஷன் போன்ற நோய்க்குறியீடுகளிலும் மனநலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன (மற்றும் இதே பின்புல நோய் காரணிகள் ஃப்ரண்ட்டெம்போரல் லோபார் டிஜெனரேஷன் ஐயும் உருவாக்குகிறது). மூளையின் காயம் சார்ந்த வீக்கங்களும் நீண்டகாலமாக இருந்தால் மனநலக் குறைபாடுகளைத் தோற்றுவிக்கக் கூடும், இதில் Behçet நோய், பல ஸ்கிலரோசிஸ், சார்கோய்டோசிஸ், Sjögren இன் நோய்க்குறியீடு மற்றும் சிஸ்டமிக் லூபஸ் எரித்மாடோசஸ் போன்றவை அடங்கும். அக்யூட் போர்பைரியாகள் குழப்பங்கள் மற்றும் மனநல பாதிப்புகள் போன்றவற்றை ஏற்படுத்தினாலும், இந்த அரிய நோய்களால் முதுமை மறதி ஏற்படுவதும் மிகவும் அரிதானதாகும்[26].

மேலே குறிப்பிடப்பட்ட இவற்றைத் தவிர, முதுமை மறதியுடன் சேர்ந்து பிற நோய்களையும் ஏற்படுத்தக் கூடிய மரபுவழி நிலைகளாவன[27]:

  • அலக்ஸாண்டர் நோய் (Alexander disease)
  • கான்வன் நோய் (Canavan disease)
  • செரிப்ரோடெண்டினஸ் சாந்தோமாடோசிஸ் (Cerebrotendinous xanthomatosis)
  • டெண்டாரோருப்ரல் -பாலிடோலுசியன் அட்ரோஃபி (Dentatorubral-pallidoluysian atrophy (DRPLA))
  • ஃப்ரெஜைல் எக்ஸ்-அசோசியேடட் டிரெமர்/அடாக்ஸியா நோய்க்குறித் தொகுதி (Fragile X-associated tremor/ataxia syndrome)
  • குளூடாரிக் ஆசிடியூரியா டைப் 1 (Glutaric aciduria type 1)
  • கிராப்பேயின் நோய் (Krabbe's disease)
  • மாப்பிள் சிரப் சிறுநீர் நோய் (Maple syrup urine disease)
  • நியூரோஆகந்தோசைட்டோசிஸ் (Neuroacanthocytosis)
  • ஆர்கானிக் அசிடிமியாஸ் (Organic acidemias)
  • பெலிஸாயஸ்-மெர்ஸ்பாசெர் நோய் (Pelizaeus-Merzbacher disease)
  • யூரியா சுழற்சிக் கோளாறுகள் (Urea cycle disorders)
  • சான்ஃபிலிப்போ நோய்க்குறித் தொகுதி வகை பி (Sanfilippo syndrome type B)
  • ஸ்பைனோ செரிபெல்லார் அடாக்ஸியா வகை 2 (Spinocerebellar ataxia type 2)

தடுப்பு முறை

[தொகு]

தொடர்ந்து மிதமான அளவில் மது அருந்துதல் (பியர், ஒயின் அல்லது வடிக்கப்பட்ட சாராயங்கள்) மற்றும் மத்தியதரைக்கடல் பகுதி உணவு முறையைப் பின்பற்றுவது போன்றவை இதன் ஆபத்தைக் குறைப்பதாக தெரிகிறது.[28][29][30][31] உயர் ரத்த அழுத்தம் மற்றும் முதுமை மறதி நோய் உருவாக்கம் ஆகியவற்றுக்கு இடையே தொடர்பு இருப்பதை ஒரு ஆய்வு காண்பித்தது. லான்செட் என்ற நரம்பியல் இதழில் ஜூலை 2008 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் முதுமை மறதியை 13% வரை குறைத்ததாக கண்டறியப்பட்டது.[32][33]

மூளை நரம்புத்திசு வழி பெறப்பட்ட காரணி (Brain Derived Neurotropic Factor - BDNF) கோவையானது சில முதுமை மறதி வகைகளுடன் இணைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.[34][35][36]

ஊக்க மருந்தல்லாத வீக்கம் தணிக்கும் மருந்துகள்

[தொகு]

ஊக்க மருந்தல்லாத வீக்கம் தணிக்கும் மருந்துகள் (Non-steroidal anti-inflammatory drug)கள் (NSAIDs) அல்சைமர் மற்றும் பார்கின்ஸன் நோய்கள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கின்றன.[37] முதுமை மறதியைத் தடுப்பதற்கு ஆகும் நேர அளவு வேறுபடுகிறது, ஆனால் பெரும்பாலான ஆய்வுகளில் அது 2 மற்றும் 10 ஆண்டுகளுக்கு இடைப்பட்டதாக இருக்கிறது.[38][39][40][41][42] சிகிச்சைக்கு ஏற்ற டோஸ்களில் இது தரப்பட வேண்டும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, "பேபி ஆஸ்பிரின்" மருந்தளவுகள் முதுமை மறதியைத் தடுப்பது மற்றும் சிகிச்சை அளிப்பது ஆகியவற்றில் பயனற்றதாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[43]

அமிலாய்டு பீட்டா பெப்டைட்களையும் நியூரோஃபைரில்லரி டேங்கள்ஸ்களையும் நியூரான்களின் மேல் படிய வைப்பதன் மூலமாக அவற்றில் வீக்கங்களை அல்சைமரின் நோய் உருவாக்குகிறது. இந்த படிவுகள், உடலில் சைட்டோகைன்கள் மற்றும் அக்யூட் பேஸ் புரதங்கள் போன்றவற்றை விடுவிப்பதன் மூலமாக எரிச்சலை உருவாக்கி வீக்கத்தைத் தோற்றுவிக்கின்றன. இந்த பொருட்கள் பல ஆண்டுகளாக உடலில் சேரும்போது, அல்சைமரின் விளைவுகளுக்கு காரணமாகின்றன.[44] NSAIDகளானவை, இம்மாதிரியான வீக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களை அழித்து, சிதைவுகளிலிருந்து தடுக்கிறது.[45][46][47]

மேலாண்மை

[தொகு]

மேலே குறிப்பிடப்பட்ட சிகிச்சையளிக்கக் கூடிய வகைகளைத் தவிர வேறு எந்தவித தீர்வும் இந்நோய்க்கு கிடையாது, ஆனாலும், இந்த நோயின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் மருந்தை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.[சான்று தேவை] நோயின் ஆரம்பநிலையில் குளோனிஸ்ட்ரேஸ் தணிப்பிகள் பயன்படுகின்றன. மனநல மற்றும் நடத்தை ரீதியான இடையூடுகளும் அவசியமானவை. நோயாளியைக் கவனித்துக் கொள்பவருக்குத் தகுந்த பயிற்சியும், நோயாளிக்கு உணர்வு பூர்வமான ஆதரவு அளிக்கும் திறனும் இருத்தல் அவசியம் (வயதுமுதிர்ந்தோர் நலன் என்பதையும் காணவும்).

இருமொழிகளை அறிந்த நோயாளிகள் முதுமை மறதியால் பாதிப்படைவது, ஒருமொழி அறிந்த நோயாளிகளை விடக் குறிப்பிடத்தக்க அளவுக்கு, அதாவது சராசரியாக நான்கு ஆண்டுகள் தாமதாக இருப்பதாக ஒரு கனடிய ஆய்வு கண்டறிந்துள்ளது. முதுமை மறதியின் ஆரம்பநிலை அறிகுறிகள் ஒரு மொழியை மட்டுமே அறிந்தவர்களுக்கு சராசரியாக 71.4 வயதிலும், இரண்டு மொழிகளை அறிந்த நபர்களிடம் சராசரியாக 75.5 வயதிலும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கலாச்சார வேறுபாடுகள், புலம்பெயர்தல், முறையான கல்வி, வேலை மற்றும் பாலினம் ஆகியவையும் இவற்றைப் பாதிக்கக்கூடியதாக இருந்தன.[48]

முதுமை மறதி கொண்ட நோயாளிகளுக்கு இசைவழிச் சிகிச்சை பயனுள்ளதாக இருப்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[49][50][51][52][53]

மருந்துகள்

[தொகு]
  • அசிட்டைல்கோளினெஸ்டெரேஸ் தணிப்பிகள்

டாக்ரைன் (கோக்னக்ஸ்), டோனெபெசில் (அரிசெப்ட்), காலான்டாமைன் (ராசாடைன்), மற்றும் ரிவாஸ்டிக்மைன் (எக்ஸலான்) ஆகியவை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அல்சைமர் நோயால் ஏற்படும் முதுமை மறதிக்கான சிகிச்சைக்கு அங்கீகாரம் பெற்றுள்ளன. பார்கின்ஸன்ஸ் நோய் அல்லது இரத்தக் குழலியசார்ந்து முதுமை மறதியை ஏற்படுத்தும் பிற நோய்களுக்கு எதிராகவும் இவை பயனுள்ளதாக இருக்கக் கூடும்.[54]

  • என்-மீதைல்-டி-ஆஸ்பார்டாட் ப்ளாக்கர்ஸ். மெமாடைன் (நமண்டா) என்பது இந்த வகையைச் சார்ந்த ஒரு மருந்தாகும். அசிட்டைல்கோளினெஸ்டெரேஸ் தணிப்பிகளுடன் சேர்த்து இதனைப் பயன்படுத்தலாம்.[55][56]

அங்கீகாரம் அற்ற மருந்துகள்

[தொகு]
  • அமிலாய்டு படிவு தணிப்பிகள்

மைனோசைக்ளின் மற்றும் கிளியோகுயினோலைன் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் அமிலாய்டு படிவுகள் ஏற்படுவதைக் குறைக்க உதவும்.[57]

  • மனச்சோர்வு-எதிர் மருந்துகள்

மன அழுத்தமானது பெரும்பாலும் முதுமை மறதியுடன் இணைந்து, மனநல மற்றும் நடத்தைக் குறைபாடுகளை அதிகமாக்கக் கூடும். அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடையே, மனநல மற்றும் நடத்தைக் குறைபாடுகளை மனச்சோர்வு-எதிர் மருந்துகள் வெகுவாகக் குறைக்கின்றன,[58] ஆனால் பிற வகை முதுமை மறதி நோய்களில் இவற்றின் பயன்பாடு மிகவும் குறைவானதாக இருக்கிறது.[59]

  • பதற்ற-எதிர் மருந்துகள்

முதுமை மறதியால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் மனச்சோர்வின் அறிகுறிகளையும் கொண்டுள்ளனர். டயாஸிபாம் (வேலியம்) போன்ற பென்சோடையாசிஃபைன்ஸ் ஆகியவை மனச்சோர்வைப் போக்குவதற்காக பிற சூழல்களில் பயன்படுத்தப்பட்டாலும், முதுமை மறதியைக் கொண்ட நபர்களிடம் இம்மருந்துகள் மனக்குழப்பத்தை அதிகரிக்கவும், மனநலக் குறைபாடுகளை அதிகமாக்கவோ அல்லது மயக்கநிலைக்கு கொண்டு செல்லவோ சாத்தியம் இருப்பதால் இவைத் தவிர்க்கப்படுகின்றன. பஸ்பிரோன் (பஸ்பார்) என்பது ஆரம்பத்தில் குறைந்தது முதல் மிதமான வரையிலான மனச்சோர்வுக்கு முயற்சிக்கப்பட்டது.[சான்று தேவை] முதுமை மறதியில் பென்சோடையாசிஃபைன்ஸின் பாதிப்புகளுக்கு குறைவான ஆதாரங்களே உள்ளன, ஆனால் (குறைந்த அளவுகளில்) உளநோய்-எதிர் மருந்துகளின் பயன்பாட்டுக்கு மிகவும் உறுதியான ஆதாரங்கள் உள்ளன.[60]

  • உளநோய்-எதிர் மருந்துகள்

முதுமை மறதி தொடர்பான உளநோயால் பாதிக்கப்பட்ட நபர்களிடையே பொதுவான உளநோய்-எதிர் மருந்துகள் (ஹாலோபெரிடோல்) மற்றும் அவ்வளவு பொதுவானதாக அல்லாத உளநோய்-எதிர் மருந்துகள் (ரிஸ்பெரிடோன் போன்றவை) ஆகிய இரண்டுமே மரணத்திற்கான ஆபத்தை அதிகரிப்பதாக உள்ளன.[61] முதுமை மறதியுடன் தொடர்புடைய உளநோய்க்கு எந்தவொரு உளநோய்-எதிர் மருந்துகளைப் பயன்படுத்துவது அங்கீகரிக்கப்படவில்லை மற்றும் இந்த மருந்துகள் கொண்டு மேற்கொள்ளும் சிகிச்சையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் மற்றும் நன்மைகள் ஆகியவற்றை நன்கு பரிசீலித்த பின்னரே சிகிச்சை தீர்மானிக்கப்பட வேண்டும். மேலும், பிற சிகிச்சை முறைகள் செயலிழந்த பின்னரே இவை கருதப்பட வேண்டும். ஐக்கிய இராச்சியத்தில், 144,000 முதுமை மறதி நோயாளிகள், அவசியமின்றி இந்த மருந்துகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு ஆண்டும் இம்மருந்துகளை உட்கொள்வதால் 2000 நோயாளிகள் வரை மரணமடைகின்றனர்.[62] மரணமடைகின்றனர்.[62]

சேவைகள்

[தொகு]

முதுமை மறதி நோயாளிகளுக்கு வயது முதிர்ந்தோர் நலப்பராமரிப்பு மையங்களும், மருத்துவ மனைகளில் உள்ள சிறப்பு கவனிப்பு அலகுகளும் பிரத்தியேகமான பராமரிப்பை வழங்கக் கூடியனவாகும். முதியோர் நலப்பராமரிப்பு மையங்களில் பொதுவாக, மேற்பார்வை, உடற்பயிற்சி, உணவு மற்றும் ஓரளவுக்கு உடல்நல பராமரிப்பு ஆகியவை வழங்கப்படலாம்.

நோயின் தாக்கத்தைக் கணித்தல்

[தொகு]

தீவிரமான முதுமை மறதி நோயுற்றவர்களுக்கு, மூச்சுக்குழல் அழற்சி, காய்ச்சல் மற்றும் உணவு உட்கொள்வதில் சிக்கல்கள் போன்றவை அடிக்கடி ஏற்படக்கூடும். இந்நோய்களின் தாக்கத்துக்கு பின்பான வாழ்நாளானது 18 மாதங்கள் வரை மிகக் குறுகியதாகவும் இருக்கக்கூடும்.[63]

நோய்ப்பரவல்

[தொகு]
பாதிப்பு - 2002 -இல் ஒவ்வொரு 100,000 மக்களுக்கும், அல்சைமர் மற்றும் பிற முதுமை மறதியின் அடிப்படையிலான வாழ்க்கை ஆண்டு.[134][135][136][137][138][139][140][141][142][143][144][145][146]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Dementia". World Health Organization. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2019.
  2. "What Is Dementia? Symptoms, Types, and Diagnosis". National Institutes of Health, USA.gov. பார்க்கப்பட்ட நாள் 10 சூன் 2019.
  3. "Dementia definition". MDGuidelines. Reed Group. Archived from the original on 2009-06-29. பார்க்கப்பட்ட நாள் 2009-06-04.
  4. Gleason OC (March 2003). "Delirium". American Family Physician 67 (5): 1027–34. பப்மெட்:12643363. http://www.aafp.org/afp/20030301/1027.html. பார்த்த நாள்: 2009-06-04. 
  5. Calleo J, Stanley M (2008). "Anxiety Disorders in Later LifeDifferentiated Diagnosis and Treatment Strategies". Psychiatric Times 25 (8). http://www.psychiatrictimes.com/display/article/10168/1166976. 
  6. Shub, Denis; Kunik, Mark E (April 16, 2009). "Psychiatric Comorbidity in Persons With Dementia: Assessment and Treatment Strategies". Psychiatric Times 26 (4). http://www.psychiatrictimes.com/alzheimer-dementia/article/10168/1403050. 
  7. முதுமை மறதியால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் ஒரு வளர்ந்துவரும் சிக்கல், MD வார்ன், CBC நியூஸ், கனடா, செப்டம்பர் 19, 2007
  8. Teng EL, Chui HC (August 1987). "The Modified Mini-Mental State (3MS) examination". The Journal of Clinical Psychiatry 48 (8): 314–8. பன்னாட்டுத் தர தொடர் எண்:0160-6689. பப்மெட்:3611032. https://archive.org/details/sim_journal-of-clinical-psychiatry_1987-08_48_8/page/314. பார்த்த நாள்: 2009-06-04. 
  9. Teng EL, Hasegawa K, Homma A, et al. (1994). "The Cognitive Abilities Screening Instrument (CASI): a practical test for cross-cultural epidemiological studies of dementia". International Psychogeriatrics / IPA 6 (1): 45–58; discussion 62. doi:10.1017/S1041610294001602. பப்மெட்:8054493. 
  10. Royall, D; Cordes, J.; Polk, . M. (1998). "CLOX: an executive clock drawing task". J Neurol Neurosurg Psychiatry 64 (5): 588–94. doi:10.1136/jnnp.64.5.588. பப்மெட்:9598672. http://jnnp.bmj.com/cgi/content/full/64/5/588. 
  11. Boustani, M; Peterson, B; Hanson, L; Harris, R; & Lohr, K (3 June 2003). "Screening for dementia in primary care: a summary of the evidence for the U.S. Preventive Services Task Force". Ann Intern Med 138 (11): 927–37. பப்மெட்:12779304. http://www.annals.org/cgi/content/full/138/11/927. 
  12. "Appendix: The Modified Mini-Mental State (3MS)". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2007-09-06.
  13. 13.0 13.1 Cullen B, O'Neill B, Evans JJ, Coen RF, Lawlor BA (August 2007). "A review of screening tests for cognitive impairment". Journal of Neurology, Neurosurgery, and Psychiatry 78 (8): 790–9. doi:10.1136/jnnp.2006.095414. பப்மெட்:17178826. 
  14. Sager MA, Hermann BP, La Rue A, Woodard JL (October 2006). "Screening for dementia in community-based memory clinics" (PDF). WMJ : Official Publication of the State Medical Society of Wisconsin 105 (7): 25–9. பப்மெட்:17163083. http://www.wisconsinmedicalsociety.org/_WMS/publications/wmj/issues/wmj_v105n7/sager.pdf. பார்த்த நாள்: 2009-06-04. 
  15. Fleisher, A; Sowell, B.; Taylor, C.; Gamst, A.; Petersen, R.; Thal, . L. (2007). "Clinical predictors of progression to Alzheimer disease in amnestic mild cognitive impairment". Neurology 68 (19): 1588. doi:10.1212/01.wnl.0000258542.58725.4c. பப்மெட்:17287448. 
  16. Karlawish, J. & Clark, C. (2003). "Diagnostic evaluation of elderly patients with mild memory problems". Ann Intern Med 138 (5): 411–9. பப்மெட்:12614094. http://www.annals.org/cgi/content/full/138/5/411. 
  17. Jorm AF (September 2004). "The Informant Questionnaire on cognitive decline in the elderly (IQCODE): a review". International Psychogeriatrics / IPA 16 (3): 275–93. doi:10.1017/S1041610204000390. பப்மெட்:15559753. 
  18. Bonte, FJ; Harris TS, Hynan LS, Bigio EH, White CL 3rd (July 2006). "Tc-99m HMPAO SPECT in the differential diagnosis of the dementias with histopathologic confirmation". Clinical Nuclear Medicine 31 (7): 376–8. doi:10.1097/01.rlu.0000222736.81365.63. பப்மெட்:16785801. https://archive.org/details/sim_clinical-nuclear-medicine_2006-07_31_7/page/376. பார்த்த நாள்: 2007-12-21. 
  19. Dougall, NJ; Bruggink S, Ebmeier KP (Nov-December 2004). "Systematic review of the diagnostic accuracy of 99mTc-HMPAO-SPECT in dementia". The American Journal of Geriatric Psychiatry 12 (6): 554–70. doi:10.1176/appi.ajgp.12.6.554. பப்மெட்:15545324. 
  20. Abella HA (June 16, 2009). "Report from SNM: PET imaging of brain chemistry bolsters characterization of dementias". Diagnostic Imaging. http://www.diagnosticimaging.com/imaging-trends-advances/cardiovascular-imaging/article/113619/1423022. [தொடர்பிழந்த இணைப்பு]
  21. "Pathological correlates of late-onset dementia in a multicentre, community-based population in England and Wales. Neuropathology Group of the Medical Research Council Cognitive Function and Ageing Study (MRC CFAS)". Lancet 357 (9251): 169–75. 2001. பப்மெட்:11213093. 
  22. Wakisaka Y et al. (2003). "Age-associated prevalence and risk factors of Lewy body pathology in a general population: the Hisayama study". Acta Neuropathol 106 (4): 374–82. பப்மெட்:12904992. 
  23. White L et al. (2002). "Cerebrovascular pathology and dementia in autopsied Honolulu-Asia Aging Study participants". Ann N Y Acad Sci 977 (9): 9–23. பப்மெட்:12480729. 
  24. Ratnavalli E et al. (2002). "The prevalence of frontotemporal dementia". Neurology 58 (11): 1615–21. பப்மெட்:12058088. 
  25. Galvin JE et al. (2006). "Clinical phenotype of Parkinson disease dementia". Neurology 67 (9): 1605–11. பப்மெட்:17101891. 
  26. Gibbons D et al.. "Porphyria and dementia: a case report". Ir J Psych Med 20 (3): 96–99. http://www.ijpm.org/content/pdf/195/Dementia.pdf. பார்த்த நாள்: 2009-12-28. 
  27. Lamont P (2004). "Cognitive Decline in a Young Adult with Pre-Existent Developmental Delay – What the Adult Neurologist Needs to Know". Practical Neurology 4: 70–87. http://pn.bmj.com/cgi/content/abstract/4/2/70. 
  28. Mukamal KJ, Kuller LH, Fitzpatrick AL, Longstreth WT, Mittleman MA, Siscovick DS (March 2003). "Prospective study of alcohol consumption and risk of dementia in older adults". JAMA 289 (11): 1405–13. doi:10.1001/jama.289.11.1405. பப்மெட்:12636463. 
  29. Ganguli M, Vander Bilt J, Saxton JA, Shen C, Dodge HH (October 2005). "Alcohol consumption and cognitive function in late life: a longitudinal community study". Neurology 65 (8): 1210–7. doi:10.1212/01.wnl.0000180520.35181.24. பப்மெட்:16247047. 
  30. Huang W, Qiu C, Winblad B, Fratiglioni L (October 2002). "Alcohol consumption and incidence of dementia in a community sample aged 75 years and older". J Clin Epidemiol 55 (10): 959–64. doi:10.1016/S0895-4356(02)00462-6. பப்மெட்:12464371. https://archive.org/details/sim_journal-of-clinical-epidemiology_2002-10_55_10/page/959. 
  31. Sofi F, Cesari F, Abbate R, Gensini GF, Casini A (2008). "Adherence to Mediterranean diet and health status: meta-analysis". BMJ 337: a1344. doi:10.1136/bmj.a1344. பப்மெட்:18786971. 
  32. Fillit H, Nash DT, Rundek T, Zuckerman A (June 2008). "Cardiovascular risk factors and dementia". Am J Geriatr Pharmacother 6 (2): 100–18. doi:10.1016/j.amjopharm.2008.06.004. பப்மெட்:18675769. 
  33. Peters R, Beckett N, Forette F, et al (August 2008). "Incident dementia and blood pressure lowering in the Hypertension in the Very Elderly Trial cognitive function assessment (HYVET-COG): a double-blind, placebo controlled trial". Lancet Neurol 7 (8): 683–9. doi:10.1016/S1474-4422(08)70143-1. பப்மெட்:18614402. 
  34. Hu, Y; Russek (2008). "BDNF and the diseased nervous system: a delicate balance between adaptive and pathological processes of gene regulation.". Journal of neurochemistry 105 (1): 1–17. doi:10.1111/j.1471-4159.2008.05237.x. பப்மெட்:18208542. 
  35. Schindowski, K; Belarbi; Buée (2008). "Neurotrophic factors in Alzheimer's disease: role of axonal transport.". Genes, brain, and behavior 7 Suppl 1: 43–56. doi:10.1111/j.1601-183X.2007.00378.x (inactive 2009-10-05) . பப்மெட்:18184369. 
  36. Tapia-Arancibia, L; Aliaga, E; Silhol, M; Arancibia, S (2008). "New insights into brain BDNF function in normal aging and Alzheimer disease.". Brain research reviews 59 (1): 201–20. doi:10.1016/j.brainresrev.2008.07.007. பப்மெட்:18708092. 
  37. மேற்கு வெர்ஜீனியா உடல்நல மற்றும் மனித வளத்துறை (தொடர்புடைய ஆய்வுகளுக்கு கூடுதல் இணைப்புகளுடன்)
  38. Szekely, CA; Green; Breitner; Østbye; Beiser; Corrada; Dodge; Ganguli et al. (2008). "No advantage of A beta 42-lowering NSAIDs for prevention of Alzheimer dementia in six pooled cohort studies.". Neurology 70 (24): 2291–8. doi:10.1212/01.wnl.0000313933.17796.f6. பப்மெட்:18509093. 
  39. Cornelius, C; Fastbom; Winblad; Viitanen (2004). "Aspirin, NSAIDs, risk of dementia, and influence of the apolipoprotein E epsilon 4 allele in an elderly population.". Neuroepidemiology 23 (3): 135–43. doi:10.1159/000075957. பப்மெட்:15084783. 
  40. Etminan, M; Gill, S; Samii, A (2003). "Effect of non-steroidal anti-inflammatory drugs on risk of Alzheimer's disease: systematic review and meta-analysis of observational studies.". BMJ (Clinical research ed.) 327 (7407): 128. doi:10.1136/bmj.327.7407.128. பப்மெட்:12869452. 
  41. Nilsson, SE; Johansson; Takkinen; Berg; Zarit; Mcclearn; Melander (2003). "Does aspirin protect against Alzheimer's dementia? A study in a Swedish population-based sample aged > or =80 years.". European journal of clinical pharmacology 59 (4): 313–9. doi:10.1007/s00228-003-0618-y. பப்மெட்:12827329. https://archive.org/details/sim_european-journal-of-clinical-pharmacology_2003-08_59_4/page/313. 
  42. Anthony, JC; Breitner; Zandi; Meyer; Jurasova; Norton; Stone (2000). "Reduced prevalence of AD in users of NSAIDs and H2 receptor antagonists: the Cache County study.". Neurology 54 (11): 2066–71. பப்மெட்:10851364. 
  43. Ad2000 Collaborative, Group; Bentham; Gray; Sellwood; Hills; Crome; Raftery (2008). "Aspirin in Alzheimer's disease (AD2000): a randomised open-label trial.". Lancet neurology 7 (1): 41–9. doi:10.1016/S1474-4422(07)70293-4. பப்மெட்:18068522. 
  44. Akiyama, H; Barger; Barnum; Bradt; Bauer; Cole; Cooper; Eikelenboom et al. (2000). "Inflammation and Alzheimer's disease.". Neurobiology of aging 21 (3): 383–421. பப்மெட்:10858586. 
  45. Tortosa, E; Avila; Pérez (2006). "Acetylsalicylic acid decreases tau phosphorylation at serine 422.". Neuroscience letters 396 (1): 77–80. doi:10.1016/j.neulet.2005.11.066. பப்மெட்:16386371. 
  46. Hirohata, M; Ono; Naiki; Yamada (2005). "Non-steroidal anti-inflammatory drugs have anti-amyloidogenic effects for Alzheimer's beta-amyloid fibrils in vitro.". Neuropharmacology 49 (7): 1088–99. doi:10.1016/j.neuropharm.2005.07.004. பப்மெட்:16125740. 
  47. Thomas, T; Nadackal; Thomas (2001). "Aspirin and non-steroidal anti-inflammatory drugs inhibit amyloid-beta aggregation.". Neuroreport 12 (15): 3263–7. பப்மெட்:11711868. 
  48. "Bilingualism Has Protective Effect In Delaying Onset Of Dementia By Four Years, Canadian Study Shows". Medical News Today. 2007-01-11. Archived from the original on 2007-01-18. பார்க்கப்பட்ட நாள் 2007-01-16.
  49. அல்ட்ரிட்ஜ், டேவிட், முதுமை மறதிக்கான சிகிச்சையில் இசைவழிச் சிகிச்சை , லண்டன் : ஜெசிகா கிங்க்ஸ்லி பப்ளிஷர்ஸ், நவம்பர் 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-138076-0.
  50. ட்யூட், R.W.K.; லாம், L.C.W. (செப்டம்பர் 2006) "முதுமை மறதியா பாதிக்கப்பட்ட சீன நோயாளிகளிடையே, மனக் குழப்பத்தில், இசைவழிச் சிகிச்சையின் மகத்துவம் தொடர்பான முதல்நிலை ஆய்வு" பரணிடப்பட்டது 2011-07-11 at the வந்தவழி இயந்திரம், ஹாங்காங்க் ஜர்னல் ஆஃப் சைக்கியாரிட்டி, தொகுதி 16, எண் 3
  51. Watanabe, Tomoyuki; et al., "முதுமை மறதியில் இசை சிகிச்சையின் விளைவுகள்: ஒரு படிப்படியான மதிப்பாய்வு", (ஜப்பானிய மொழியில்) கல்வி ஆய்வு அறிக்கைகளுக்கான ஆய்ச்சி பல்கலைக்கழகம், v.55, pp. 57-61, மார்ச், 2005
  52. கோஜர், சூசன் எம்.; சாப்பின் காதின்; ப்ரோட்டான்ஸ், மெலிஸ்ஸா, "Is முதுமை மறதியில் இசை சிகிச்சை ஒரு பயன்மிக்க ஒன்றா? : இலக்கியம் தொடர்பான ஒரு மெட்டா-அனாலிடிகல் ஆய்வு"[தொடர்பிழந்த இணைப்பு], ஜர்னல் ஆஃப் மியூசிக் தெரபி 36(1), பிப்ரவரி 1999, pp.2-15.
  53. ரெமிங்டன், ரூத், "மனக்குழப்பமடைந்த முதியோரிடம் மனதை இளக்கும் இசை", நர்சிங் ரிசர்ச் 51(5): 317-323, செப்டம்பர்/அக்டோபர் 2002.
  54. ல்லியோ ஏ, கிரீன்பர்க் SM, க்ரோடான் JH. அல்சைமரின் நோய்க்கான தற்போதைய மருந்து மற்றும் சிகிச்சைகள். Annu Rev Med. 2006;57:513-33. மதிப்பாய்வு PubMed
  55. Raina P, Santaguida P, Ismaila A, et al. (March 2008). "Effectiveness of cholinesterase inhibitors and memantine for treating dementia: evidence review for a clinical practice guideline". Annals of Internal Medicine 148 (5): 379–97. பப்மெட்:18316756. http://www.annals.org/cgi/content/full/148/5/379. பார்த்த நாள்: 2009-06-04. 
  56. Atri A, Shaughnessy LW, Locascio JJ, Growdon JH (2008). "Long-term course and effectiveness of combination therapy in Alzheimer disease". Alzheimer Disease and Associated Disorders 22 (3): 209–21. doi:10.1097/WAD.0b013e31816653bc. பப்மெட்:18580597. 
  57. Choi Y, Kim HS, Shin KY, et al. (November 2007). "Minocycline attenuates neuronal cell death and improves cognitive impairment in Alzheimer's disease models". Neuropsychopharmacology : Official Publication of the American College of Neuropsychopharmacology 32 (11): 2393–404. doi:10.1038/sj.npp.1301377. பப்மெட்:17406652. 
  58. Thompson S, Herrmann N, Rapoport MJ, Lanctôt KL (April 2007). "Efficacy and safety of antidepressants for treatment of depression in Alzheimer's disease: a metaanalysis" (PDF). Canadian Journal of Psychiatry. Revue Canadienne De Psychiatrie 52 (4): 248–55. பப்மெட்:17500306. http://publications.cpa-apc.org/media.php?mid=586&xwm=true. பார்த்த நாள்: 2009-06-04. 
  59. Bains J, Birks JS, Dening TR (2002). "The efficacy of antidepressants in the treatment of depression in dementia". Cochrane Database of Systematic Reviews (Online) (4): CD003944. doi:10.1002/14651858.CD003944. பப்மெட்:12519625. 
  60. Lolk A, Gulmann NC (2006). "[Psychopharmacological treatment of behavioral and psychological symptoms in dementia]" (in Danish). Ugeskr Laeg 168 (40): 3429–32. பப்மெட்:17032610. 
  61. "FDA MedWatch - 2008 Safety Alerts for Human Medical Products". FDA. Archived from the original on 2009-05-25.
  62. 62.0 62.1 http://www.guardian.co.uk/society/2009/nov/12/anti-psychotic-drugs-kill-dementia-patients
  63. Mitchell SL, Teno JM, Kiely DK, et al. (October 2009). "The clinical course of advanced dementia". N. Engl. J. Med. 361 (16): 1529–38. doi:10.1056/NEJMoa0902234. பப்மெட்:19828530. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறதிநோய்&oldid=3931744" இலிருந்து மீள்விக்கப்பட்டது