உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராட்டிர வேட்டை நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாராட்டிர வேட்டை நாய் (The Mahratta Greyhound or Maratha Greyhound ) என்பது ஒரு இந்திய நாயினமாகும். 

விளக்கம்

[தொகு]

இது ஒரு அரிய நாய் இனம் ஆகும், இது தோன்றிய பகுதியான மகாராட்டிரத்தை விட்டு வெளியே அவ்வளவாக அறியப்படாத இனம். இவை செயலில் வலிமை மற்றும் வேகம் இணைந்தவை. இவை நின்ற நிலையில் முன்தோள் உயரம்   21 அங்குலம் (53 செண்டி மீட்டர்) கொண்டது, நல்ல தசைவலிமையோடும், ஆழமான நெஞ்சோடும், வலிமையான பின்பகுதியையும் உடையவை. இவை பொதுவாக அடர் நீலம் மற்றும் பழுப்பு நிறம் கொண்டவை. இந்திய சூழலைத் தாங்கி வாழக்கூடியவை. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராட்டிர_வேட்டை_நாய்&oldid=2433880" இலிருந்து மீள்விக்கப்பட்டது