உள்ளடக்கத்துக்குச் செல்

பூங்குயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூங்குயில்
சிறுகீற்றுப் பூங்குயில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குக்குலிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
பெனிகோபேயசு

இசுடீபன்சு, 1815

பூங்குயில்கள் (Phaenicophaeus) எனப்படுபவை குயிற் குடும்பத்தில் உள்ள பெனிகோபேயசு பேரினத்தைச் சேர்ந்த பெரிய பறவைகளாகும். இவை ஆசியாவின் அயன மண்டலப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன. பூங்குயிற் பேரினத்துக்கான உயிரியற் பெயர் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லான பெனிகோபேயசு , அதாவது கடுஞ் சிவப்புக் கண்கள் என்பதிலிருந்து பெறப்பட்டது.[1] இப்பெயர் செம்முகப் பூங்குயிலின் உருவத்திலிருந்தே பெறப்பட்டுள்ளது.[2]

பூங்குயிலினங்கள்

[தொகு]

பெயரீட்டு வரிசையின் அடிப்படையிற் பூங்குயிலினங்கள் பின்வருமாறு:

படம் விலங்கியல் பெயர் பொது பெயர் பரவல்
பெனிகோபேயசு டயர்டி கருவயிற்றுப் பூங்குயில் புருனே, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து.
பெனிகோபேயசு சுமட்ரானசு கபில வயிற்றுப் பூங்குயில் புருனே, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து.
பெனிகோபேயசு விரிதிரோசுட்ரிசு நீல முகப் பூங்குயில் தீபகற்ப இந்தியா மற்றும் இலங்கை
பெனிகோபேயசு ட்ரிசுடிசு பசுஞ் சொண்டுப் பூங்குயில் இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியா
பெனிகோபேயசு கர்விரோசுட்ரிசு கபில மார்புப் பூங்குயில் தென்கிழக்கு ஆசியா மியான்மரில் இருந்து கிழக்கு ஜாவா, பிலிப்பீன்சு மற்றும் போர்னியோ வரை
பெனிகோபேயசு பைரோசிபாலசு செம்முகப் பூங்குயில் இலங்கை
பெனிகோபேயசு லெசுச்சென்னாலுடீ சிறுகீற்றுப் பூங்குயில் இந்தியத் துணைக்கண்டம்

தீங்குயில் (Rhinortha) என்பது தனிவகை தீங்குயிலினம் என்னும் வகையைச் சேர்ந்ததெனினும், பூங்குயில்களுடன் உள்ள மிக நெருங்கிய தொடர்பு கொண்டதாக நெடுங்காலமாகக் கருதப்பட்டதன் காரணமாக முன்னர் செம்பகப் பூங்குயில் ("P." chlorophaeus) எனப் பெயரிடப்பட்டிருந்தது. எனினும், அது பூங்குயில்களிலிருந்து மிகவும் வேறுபட்ட தனியினமாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Henry George Liddell and Robert Scott (philologist) (1980). A Greek-English Lexicon (Abridged Edition). United Kingdom: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-910207-4.
  2. Payne RB, Sorenson MD (2005). The Cuckoos: Cuculidae. Oxford University Press. p. 294. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198502133.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூங்குயில்&oldid=3993963" இலிருந்து மீள்விக்கப்பட்டது