தீங்குயில்
தீங்குயில் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முண்ணாணிகள் |
வகுப்பு: | பறவைகள் |
வரிசை: | குயிலினம் |
குடும்பம்: | குயிற் குடும்பம் |
துணைக்குடும்பம்: | பூங்குயிலினம் (முரண்பாடு) |
பேரினம்: | Rhinortha |
இனம்: | R. chlorophaea |
இருசொற் பெயரீடு | |
Rhinortha chlorophaea (ரஃபிள்சு, 1822) | |
வேறு பெயர்கள் | |
Cuculus chlorophaeus Raffles, 1822 |
தீங்குயில் (Rhinortha chlorophaea) என்பது குயிற் குடும்பத்தைச் சேர்ந்த தனிவகையான தீங்குயிலினத்தின் தனித்த பறவையினமாகும். முன்னர் இது பூங்குயில்களுடன் சேர்த்து பூங்குயிலினமொன்றாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், இப்பறவையினம் பூங்குயிலினங்களிலிருந்து மிகவும் வேறுபாடான தனித்துவமான உடலமைப்புக்களைக் கொண்டிருப்பதுடன் வெளித்தோற்றத்தில் பாலின வேறுபாட்டைக் காட்டுவதாயும் உள்ளது.
இப்பறவையினம் பூங்குயில்களுடன் நெருங்கிய தொடர்பெதனையும் கொண்டிராவிடினும், குயில்களுடன் அடிப்படைத் தொடர்பைக் கொண்டுள்ளது. இதனாற்றான், இதனைத் தனிவகையான தீங்குயிலினம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
தீங்குயில்கள் புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியன்மார், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிற் காணப்படுகின்றன. இதன் இயற்கை வாழிடம் துணை அயன மண்டல மற்றும் அயன மண்டல ஈரலிப்பான தாழ்நிலக் காடுகளாகும்.
மேற்கோள்கள்[தொகு]
- BirdLife International 2004. Phaenicophaeus chlorophaeus. 2006 IUCN Red List of Threatened Species. தறவிறக்கப்பட்டது 24 யூலை 2007.